ஜெயபுரம் : பேரினவாதமும் சமூக அடக்குமுறையும் ஒருங்குசேர..

கிளினொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம் அரசாங்க அதிபர் பகுதியில் அருகாமையில் ஜெயபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. போரின் கொடுமையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் அங்கே இடம்பெயர்ந்துள்ளனர். மலையகத் தமிழர்களை அதிகமாகக் கொண்ட ஜெயபுரம் பகுதி அரசாங்கம் பிச்சை போல வழங்கும் சிறிய தொகை உதவிகளைக் கூட அங்குள்ள அரச அதிபர் உள்ளிட்ட நிவாகத்தினர் அபகரித்துக் கொள்வதாகத் தெரியவருகிறது. போருக்கு சற்று முற்பட்ட காலப்பகுதியில் மலயகத் தமிழர்கள் பெரும்பான்மையாகக் கல்வி கற்கும் ஜெயபுரம் மகாவித்தியாலயத்திற்கான நிதியை வேறு பாடசாலைக்காக அங்குள்ள அரச அதிபர் ராசநாயகம் மாற்றியுள்ளார். இது குறித்து நியாயம் கேட்டதற்கு மலையகத் தமிழர்கள் இங்கு கூலி வேலை செய்யவே வந்தவர்கள் எனக் கூறியுள்ளார். அரச அடக்கு முறை ஒருபுறமும் தமிழ் அதிகாரிகளின் அடக்குமுறை மறுபுறமுமாக இங்கு இடம் பெயர்ந்துள்ள  தமிழர்களும் நிரந்தரமாக வாழ்பவர்களும் வாழ்வாதாரமற்று வாழ்கின்றனர்.

போரினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட  கிராமம் ஜெயபுரம்  என்பது  குறிப்பிடத்தக்கது.