ஜெயகௌரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுட்றீச் இணையத்தள உரிமையாளர் ஜசிதரனின் சகோதரி ஜெயகௌரி இன்று காலை மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெயகௌரி தங்கியிருந்த கொழும்பிலுள்ள Nonviolent Peaceforce அலுவலகத்திற்குச் சென்ற பொலிஸார் அங்கு வைத்து ஜெயகௌரியைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.
தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பாகத் தங்குவதற்கு இடமற்றிருந்த ஜெயகௌரி Nonviolent Peaceforceஅலுவலகத்தில் தங்கி இருந்ததாகத் தெரிய வருகிறது. ஜெயகௌரியுடன் அங்கிருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவுட்றீச் இணையத்தள உரிமையாளர் ஜசிதரனும் அவருடைய துணைவி வளர்மதியும், அவுட்றீச் இணையத்தளத்தின் ஆசிரியர் திஸநாயகமும் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டிருந்தது தெரிந்ததே.
ஜசிதரனுடையதும் வளர்மதியினுடையதும் விடுதலைக்கான முயற்சிகளை எடுத்து வந்த ஜெயகௌரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதானது அவர்களை விடுவிப்பது தொடர்பில் தாமதத்தையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தும் நோக்கிலானது என்று கருதப்படுகிறது.

One thought on “ஜெயகௌரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.”

  1. கொடுமை எப்பொது தீரும் யாரால் விடிவு வரும்

Comments are closed.