ஜீ.எஸ்.பி சலுகை இல்லாமலே அபிவிருத்தி செய்யலாம் : கோதாபய

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இல்லாமலேயே மீன்பிடித்துறை வளர்ச்சியடைய முடியும் என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், மீன் ஏற்றுமதியும், ஆடை ஏற்றுமதியும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் இதில் மீன் ஏற்றுமதி ஐரோப்பிய ஒன்றிய தடையின் காரணமாக பாதிக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

யுத்தம் காரணமாக மீன்பிடிப்பதில் கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் இன்று அந்தக்கட்டுப்பாடுகள் யாவும் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே ஐரோப்பியத்தின் வரிச்சலுகை தடையினால் மீன் உற்பத்தித்துறை பாதிக்கப்படமாட்டாது என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

மீன்பிடி கட்டுப்பாடுகள் இலங்கையில் தளர்த்தப்பட்ட பின்னர், வெளிநாடுகளின் சுமார் 1400 படகுகள் இலங்கையின் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளமையானது, இலங்கையில் வறுமைக்கான ஒரு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.