ஜனாதிபதி பொறுப்பின் கீழ் தகவல், ஊடகத்துறை அமைச்சு!!!

தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்றிருப்பதாக, ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

தனது வேண்டுகோளை அடுத்தே இந்த அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி பொறுப்பேற்றார் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சுப் பதவியைத் தாம் ராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுப் பொறுப்பை இவர் தொடர்ந்து வகிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.