ஜனாதிபதித் தேர்தல் (வீரனைத் தேடும் போட்டி) : தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

தின்றுகொண்டு

தின்றுகொண்டு

அவர்கள் ஒன்றாக

வரும்பொழுது

ஒருவாறு

தப்பித்த எனக்கு

கால்களை மேலே போட்டவாறு

இனி

பார்த்துக் கொண்டிருக்கலாம்

ஒருவன் மற்றவனைத்

தின்றுகொள்ளும் போது

குட்டை வால்

எஞ்சும் வரைக்கும் 

மூலம் – மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.