ஜனாதிபதித் தேர்தல் முடிபுகள் வெளியாகின்றன

தபால் மூல வாக்குகளுக்கான முடிபுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. மகிந்த அரசினதும் அதன் துணைக்குழுக்கள், அரச படைகளின் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஹம்பாந்தோட்ட, ரத்னபுர போன்ற இடங்களில் ராஜபக்ச முன்னணியில் திகழ்வதாகவும், யாழ் மாவட்டத்தில் சரத் பொன்சேகா முன்னணியில் திகழ்வதாகவும் முடிபுகள் வெளியாகியுள்ளன. 67 வீத வாக்குகளை மகிந்த ராஜபக்சவும் , 23 வீத வாக்குகளை சரத் பொன்சேகாவும் பெற்றுள்ள நிலையில் பொதுவாக மகிந்த ராஜபக்சவிற்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தவிர, இன்று முழுவதும் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்ற பிரச்சாரம் இலங்கை ஊடகங்களூடாக மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் முடிவடைந்த பின்னர் அவருக்கு வாக்களிக்கும் உரிமை இருப்பதாக தேர்தல் ஆணையாளர் கருத்து வெளியிட்டார்.

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக தற்போது நடைபெற்றுவரும் ஜனாதிபதித் தேர்தல், தேர்தல் தோற்றத்தைவிட இராணுவ நடவடிக்கையொன்றொன்று இடம்பெறுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுதம் தாங்கிய ஐந்திற்கும் மேற்பட்ட இராணுவ வாகனங்கள் தென்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அவை தென் பகுதியின் பல இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
 
இதனைத்தவிர கடற்படையினரின் இரண்டு டோராப் படகுகள் காலி மற்றும் தங்காலைப் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இராணுவத்தினர் தேர்தலில் முக்கிய பங்காற்றுவதற்காக பாதுகாப்புச் செயலாளரின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் உத்தரவின் பேரில் நாடு முழுவதிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமை குறித்து இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் கூடிய கவனம் செலுத்தி வருவதுடன் தமது நாடுகளின் தூதரக அலுவலகங்கள் ஊடாக அடுத்த மணித்தியாலங்களில் என்ன நடைபெறுகிறது என்பது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

3 thoughts on “ஜனாதிபதித் தேர்தல் முடிபுகள் வெளியாகின்றன”

 1. வந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் என்னத்தை சொல்கிறது/ கோடிட்டு காட்டுகிறது?

  கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளை பகிஷ்கரிக்க கோருவதற்காக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் சகோதரர் பஷில் ராஜபக்ஷ தனிப்பட்ட ரீதியில் 180 மில்லியன் ரூபாவை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக 378 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வரும் நிலையில் யார் வெல்கிறார்கள் பார்ப்போம்.

  ஆனால் இந்த பணங்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறது???…..வடக்கின் வசந்தம்……..கிழக்கின் உதயம்……அபிவிருத்தி பணிகள்……அபிவிருத்திக்கான வெளிநாட்டு கொள்முதல்கள்……அபிவிருத்தி ஒப்பந்தங்கள்……..கருணாநிதி, ஸ்டாலின் பாணியா???

  மேலும் உடனுக்குடன் தேர்தல் முவுகளை அறிய:
  http://www.srilankanelections.com/results/results-main.shtml

 2. இது புலிகள் இல்லாத ஜனநாயக சூழ்நிலையில் ஒருவரின் வற்புறுத்தல்கள், கட்டாயங்கள் இல்லாமல் மக்களின் தீர்ப்பு (கள்ள வாக்கு போட்டிருந்தால் போட்டவர்களுக்குத்தான் தெரியும்) இதிலிருந்து மாவட்ட ரீதியில் மக்களின் எண்ணங்களின் பிரதிபலிப்புகள் தெளிவாகின்றன.

  வந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் என்னத்தை சொல்கிறது/ கோடிட்டு காட்டுகிறது?

  மேலும் உடனுக்குடன் தேர்தல் முவுகளை அறிய:
  http://www.virakesari.lk/Results2010/index.htm

  http://www.srilankanelections.com/results/results-main.shtml

  மேலும் தேர்தல் தொடர்பான செய்திகட்கு:

  http://www.virakesari.lk/NEWS/presiden%20election.asp

  http://www.slelections.gov.lk/news.html

 3. எல்லாம் அந்த பரமாத்தாவின் லீலைகள்.அவன் அன்றீ எதுவும் அசையாது.பரமாத்மாவாயை இனியாவது அறீந்து கொள்ளூங்கள்.விலையாடுவது யாருடன் என்றூ தெரியாமலே விதியின் விழுகின்றவரே இனியாவது விதி வலியது என்றூ அறீந்து கொள்ளூங்கள்.

Comments are closed.