ஜனாதிபதித் தேர்தல்:தமிழர் ஒருவரைக் களத்தில் நிறுத்த முயற்சி!

election ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் ஏற்றுக்கொள் ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்காவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமையவே ஜனவரி 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெறும் என்று தயானந்த திஸாநாயக்கா நேற்று அறிவித்திருக்கிறார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராகத் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்இ எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவும் போட்டியிடவிருக்கின்றமை தெரிந்ததே. அத்துடன் இடதுசாரி முன்னணித்தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவும் தேர்தல் களத்தில் குதித்திக்கவுள்ளார்.

இதேவேளை வடக்கு கிழக்குத் தமிழர் தரப்பு குறிப்பாகஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இன்னமும் விடை கிடைக்காத நிலையில்இ தமிழர் தரப்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாகவும் சில வட்டாரங்களில் ஆராயப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடமும் வேறு சில தமிழ்த் தரப்புகளும் இணைந்து இது தொடர்பாகப் பரிசீலித்து வருகின்றன என்று தெரியவந்தது. எனினும்இ இது தொடர்பாக நேற்று மாலைவரை தமிழர் தரப்பிலிருந்து எந்தவொரு முடிவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

3 thoughts on “ஜனாதிபதித் தேர்தல்:தமிழர் ஒருவரைக் களத்தில் நிறுத்த முயற்சி!”

 1. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கும் இப்போது நடைபெறப்போகும் தேர்தலுக்கும் பாரிய வேறுபாடு உண்டு.சர்வதேச சமூகத்தின் பார்வை அதிகமாகவே காணப்படுகிறது.காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.பெரும்பான்மை சகோதரர்களின்(?)பேச்சுக்கள் தடம் மாறிச் செல்வது எதனால் என்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.மீண்டும் எண்பதுகளுக்கு அழைக்கிறார்கள் போல் தெரிகிறது.ஒத்துழைத்தவர்கள் கையை பிசைகிறார்கள்.தேர்தல்களை பொறுத்த வரை முடிவுகள் செய்வது தாயக உறவுகளின் உரிமை.புலத்திலுள்ளோர் ராஜதந்திர நகர்வுகளை மட்டுமே செய்ய முடியும்.தமிழ் பொது வேட்பாளர் என்பது ஆலோசிக்கப்படலாம்.அன்று தந்தை செல்வாவுக்கு காங்கேசந்துறையில் ஒட்டு மொத்த வாக்குகளும் கிடைத்தது போன்று,எமக்கான ஜனாதிபதியை நாமே செலவின்றி தெரிவு செய்ய அரிய வாய்ப்பு,பயன்படுத்தலாம்.சிந்திக்கலாம்.செயல்படுத்தலாம்.ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.தலைகளே,தலைக்கனங்களே பட்டது போதும்.ஒன்று படுங்கள்;இல்லா விட்டால் செத்துத் தொலையுங்கள்

 2. வெளிவந்திருக்க வேண்டிய ஒரு நேர்காணல்

  ~~தமிழர் தேசியக் கூட்டணியை ஒரு கட்சியாகப் பதிவுசெய்வது பற்றிப் பேசப்படுகிறது. அதன் கொள்கை என்ன?
  ~~அதிலே இணைந்திருக்கும் நாலு கட்சிகளுக்கும் என்ன கொள்கையோ அது தான் அதன் கொள்கை.

  ~~நாலு கட்சிகளுக்கும் என்ன கொள்கை?
  ~~கேள்வி விளங்கவில்லை.

  ~~நாலு கட்சிகளுக்கும் என்ன இலட்சியம்?
  ~~எப்படியாவது தமிழ் மக்களுடைய ஆதரவுடன் பாராளுமன்ற ஆசனங்களை வெல்வது.

  ~~நாலு கட்சிகளுக்கும் என்ன கருத்து வித்தியாசம்?
  ~~என்ன பொய்யைச் சொல்லி மற்றவர்களை முந்துவது என்பது தான்.

  (நன்றி: புதியபூமி நவெம்பர் 2009)

Comments are closed.