ஜனநாயகமும் நண்பர்களும்! : துடைப்பான்

p11 இன்றைய நாளில் பலராலும் பேசப்படுகின்ற மலினப்பட்ட சொல்லாடல்கள் எவையென நாம் நோக்கின் அவை ஜனநாயகம்,  மனித உரிமை ,மாற்றுக்கருத்து போன்ற வகைப்பட்டதாகவே அமைந்துள்ளது. குறிப்பாக எமது நண்பர்கள் குழாம் எனப்பட்டடோர் எழுதுகின்ற பேசுகின்ற ஜனநாயகம் மனித உரிமைகள் மாற்றுக்கருத்துக்கள் புதுப்புது வியாக்கியானங்களோடு எம்மை புல்லரிக்க வைத்துவிடுகின்றது.
 
 
புலிகளிலிருந்து கருணா என்ற முரளிதரன் பிரிந்த பின்னாலான காலத்திலிருந்தும் இன்று இலங்கை அரசினால் புலிகள் அழித்தொழிக்கப்பட்ட பின்னாலான காலத்திலும் புகலிடச் சூழலில் எமது ஜனநாயக  நண்பர்களிடம் ஏற்பட்ட ‘அதிகார ஆசை’  மேலான அதிக பட்ச காதலை,  மோகம் பற்றிய எம் அவதானிப்பை பெரியதொரு ஆய்வாகவே செய்ய முடியும்.  வேண்டாம் அதனை விட்டுத்தள்வோம்.
 
புலிகளிலிருந்து கருணா பிரிந்தவுடன் கருணா “இலங்கை ஜனநாயகக் குடியரசின்” தலைசிறந்த ஜனநாயக சக்தியாக, தமிழ்பேசும் மக்களின் அரசியல் காவலானாக, மனித உரிமைகாப்பாளனாக கிழக்கின் விடிவெள்ளியாக புகலிட ஜனநாயக நண்பர்களால் அடையாளம் காட்டப்பட்டார்.       அதுவரை காலமும் புலிகளின் அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்திருந்து, பிரபாகரனின் செல்லக் குழந்தையாய் இருந்து தமிழ் பிரதேசங்களில் கருணாவால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் அனைத்துவகை ஜனநாயக அழிப்புக்கள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு ஜனநாயக காவலனாக நண்பர்களால் முடிசூடப்பட்டார்.
 
அதிகார ஆசைகளை உள்ளொடுக்கி பதுக்கி வைத்திருந்த நண்பர்களின் ‘அதிகார ஆசை’ கருணாவின் பின்னால் சென்றடைய கருணாவின் பிரிவுக்கு தத்துவார்த்த காரணங்களை மெழுகிட வேண்டிய சூழ்நிலை நண்பர்களுக்கு  உருவாகிற்று. கிழக்கு அபிவிருத்தியோடு இரண்டறக்கலந்த கிழக்குவாதம் இவர்களுக்கு அருமையான அதி மருந்தாக அமைந்துவிட்டது. அதுவரை கிழக்கில் பாதிக்கப்பட்ட நலிவுற்ற மக்களின் பக்கம் எந்தப்பார்வையையும் கரிசனையையும் அற்றிருந்த இந்தக் கூட்டம் மக்கள் நலம் பற்றி புலம்பத் தொடங்கிற்று.
 
இக் காலங்களில் இப் புலம்பல்களின் பின்னால் நானும் சேர்ந்து ஓலமிடவேண்டுமென எமது p21நண்பாகள் குழாம் விரும்பிற்று.  கருணாவின் ஆதரவு நிலை நண்பர்கள் குழாத்தை தீவிர அரச ஆதரவு நிலைப்பாட்டை நோக்கி தள்ளியது. இவை அனைத்தையும் அங்கீகரிப்பாளனாக நான் மாறவேண்டுமென அப்பாவித்தனமாக நண்பர் குழாம் விரும்பியது .கூட்டத்தோடு கோவிந்தா போடுவதில் எந்தவித உடன்பாடற்றவனாக நான் இருந்தேன்.
 
இக் காலங்களில் கலை இலக்கிய அரசியல் தளங்களில் மிகுந்த செயல்பாட்டாளாகளாக நாமிருந்தோம்.  இலக்கிய சந்திப்பென்றும், நண்பர்கள் வட்டமென்றும் ,சமூக அசைவிற்கான எழுத்தியக்கம் என்றும் பல்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருந்தோம். 
 
பிரான்சின் நண்பர்கள் வட்டத்தின் சார்பில் வருடத்தில் சாராசரி எட்டு கருத்தரங்குகளை நடாத்தினோம். இதுவரை சுமார் தொண்ணூறு கலந்துரையாடல்கள் கருத்தரங்குகளை பிரான்சில் நடாத்தியுள்ளோம்.  இவ் அனைத்து உரையாடல்களிலும் பிரதான தொனியாக ஒலித்தவை, அதிகாரத்திற்கும் மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிரானவையாகவே அமைந்தவை. 
 
 இன்று எங்களால் பேசப்பட்ட, எழுதப்பட்ட ,நடாத்தப்பட்ட இவை அனைத்தும் p41கேலிக்குரியதாக்கப்பட்டு அதிகார மோகத்திற்காக அனைத்து ஒடுக்குமறையாளர்களினதும் தொங்கு தசைகளாக மாறிவிட்டது.
 
சமூகத்தில் நாம் பேசுகின்ற எழுதுகின்ற அக்கறைகளுக்கு ஏற்றவாறு வாழவேண்டுமென்ற கருத்தின் மீது மிகுந்த அக்கறைகொண்டவனாக நான் இருக்கிறேன். இந்த ஐரோப்பிய முதலாளித்துவ சூழலில் இவை மிகுந்த நெருக்கடி நிறைந்த சவாலான சூழல் எனினும் குறைந்த பட்சமாவது நம் அக்கறைக்குரிய சமூக விடயங்களில் நேர்மையும் உண்மையும் கொண்டு வாழ முயலுதல் வேண்டுமென்பதே என் அவாவாகின்றது. p3இவைகளின் முரண்பாடுகளே நண்பர்களைவிட ‘அ’  நண்பர்களை நான் கூடுதலாக உருவாக்கி கொள்கிறேன். நண்பர்கள் எதிரியாகும் இத் தருணங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையே கொடுக்கிறது. நாம் கோட்பாடு சார்ந்த வாழ்வியலில் உண்மையோடும் நேர்மையோடும் வாழ ஆயிரக்கணக்கான எதிரிகளோடு முரண்பாடு கொண்டு வாழ்வில் போராடுவதில் உள்ள மகிழ்ச்சி அளப்பெரியது என்பேன் நான்.

6 thoughts on “ஜனநாயகமும் நண்பர்களும்! : துடைப்பான்

 1. துடைப்பான் அவர்கள் குறிப்பிடும் இலங்கை அரசுக்கு விலைபோன நண்பர்கள் பட்டியலை துணிந்து எழுதுங்கள். பயப்பிடவேண்டியதில்லை. சமூகத்திற்கு முன் இவர்கள் அடையாளம் காட்டப்படவேண்டும். லண்டனிலிரக்கும் மூன்றாவது மனிதன் பத்திரிகையை இலங்கையில் கொண்டுவந்த பெளசர் என்பவர் நோர்வேயிலிருக்கும் சரவணன் என்பவர் பேர்லினில் இருக்கும் சுசீந்திரன் என்பவர்கள் இலங்கை அரசுக்கு வேலை செய்வது பரவலாக புகலிடத்தில் எல்லோரும் தெரிந்த விசயமாகிவிட்டது. இப்படிபட்வர்களின் கூட்டு தமிழ் மக்களுக்கு மிக ஆபத்தானது. புகலிடத்திலிருக்கும் ஐனநாயக வாதிகளுக்கும் மாற்று கருத்துக்காறர்களுக்கும் இவர்கள் செயல்கள் களங்கத்தை உண்டுபண்ணும் எனவே இவர்களைப் பற்றி அம்பலத்திற்கு கொண்டுவருவது அவசியம்.

 2. குலநாதன் ரொம்ப சரியாத்தான் சொல்லி இறுக்கார். இந்த பெளசர் நானா கொழும்பில மர்கூம் அஸ்ரப் தலைவரோட பின்னால திரிஞ்சவரு. அவருட அறைவுக்கு பின்னால டக்ளஸ் தோழரோட முழுநேரமா வேலை செஞ்சாரு. இப்பகூட ஈ.பீ.டீ.பீ பத்திரிகை ஈழமுரசு உட்பட அவங்கட இணையத்தளங்கள இவருதான் இயக்குறாரு. மனுசன் ரொம்பக் கில்லாடி. காத்தடிக்கிற பக்கம் நிற்பாரு.

 3. குலநாதன் எழுதியுள்ளபடி புகலிட அரசியல் மோசடிப்பேர்வழிகளை அம்பலப்படுத்தணும்.
  தோழர் இராயாகரன் தன்னுடைய தமிழரங்கத்தில் சேர்மன் சுசீந்திரன் நடராஐh என்ற குலநாதன் குறிப்பிடும் பேர்வழியைப்பற்றி கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். படித்துப்பாருங்கள்.

  “நம்பிக்கையூட்ட முடியாத சீரழிவுவாதிஇ புதுவிசை இதழில் புலம்பியது என்ன? ”

  http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5796:2009-05-28-08-57-40&catid=277:2009

 4. //இன்று எங்களால் பேசப்பட்டஇ எழுதப்பட்ட இநடாத்தப்பட்ட இவை அனைத்தும் கேலிக்குரியதாக்கப்பட்டு அதிகார மோகத்திற்காக அனைத்து ஒடுக்குமறையாளர்களினதும் தொங்கு தசைகளாக மாறிவிட்டது.//துடைப்பான்.

  துடைப்பான் மறைமுகமாக சுட்டிக்காட்டுவதைவிடுத்து
  நீங்கள் குறிப்பிட்ட தொங்குதசைகளை வெளிப்படையாக
  எழுதுங்கள். இப்படியே எல்லோரும் ஏதோ ஒரு பயத்தால்
  இந்த அரச கூலி தொங்குசதைகளை இவர்களுடைய கறுப்பு
  பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரவிட்டால் உங்களைப்
  போன்றோர்கள் எழுதுவதில் பிரயோசனம் இல்லை. துணிந்து செயல்படுங்கள்.

 5. துடைப்பான் பிரதேசவாதத்திற்குள் அகப்படாமல்> தன்கருத்தை துணிந்து வைத்துள்ளார்! புலிகளில் இருந்த கருணாவின் வெளியேற்றதாடு> புலம்பெயர்வாழவிலும் கிழக்கின் விடிவெள்ளிகள் என்ற ஓன்றும் வெளிக்கிட்து! இதற்குள் சோபாசக்தி+சுதன்+உட்பட்ட தலித் கம்பனிகளும் அடங்கும்! கிழக்கின் விடிவெள்ளி என்றதன் “பிதாமகன்” ஞானம் என்ற “ன்டாலின்” ஆவார்! இவர் கருணா அம்மானின் தற்காலிக மதிஉரைஞராகவும் இருந்தவர்! இவர் கிழக்கின் வசந்தத்திற்காக எழுதாத கட்டுரைகள்> ஏன் அங்கு சென்று முகாமிட்டு பிரச்சாரமும் செய்தவர்! இப்போ அம்மான் இவரை காலால் எத்தி உதைந்துள்ளதாக கேள்வி? தெரிந்தவர்கள் இதைப்பற்றி சொல்லுங்கள்!

 6. பயன்மீக்க பதிவுகள்.துடைப்பானின் ஆதஙக்கம் சரியானது. துணிந்து சொல்வர்தர்க்கும் ஒரு மனம் வெண்டும். துடைப்பானிடம்நிறைய இருக்கிற்து. வாழ்துக்கள்.

Comments are closed.