ச‌ட்டீ‌ஸ்க‌ர் – மாவோ‌யி‌ஸ்டுக‌ள் நட‌த்‌‌திய ‌திடீ‌ர் தா‌க்குத‌லி‌ல் இர‌ண்டு பாதுகா‌ப்பு படை ‌வீர‌ர்க‌ள் ப‌லி

ச‌ட்டீ‌ஸ்க‌ர் மா‌நில‌ம் தா‌ண்டிவாடா‌வி‌ல் மாவோ‌யி‌ஸ்டுக‌ள் நட‌த்‌‌திய ‌திடீ‌ர் தா‌க்குத‌லி‌ல் இர‌ண்டு பாதுகா‌ப்பு படை ‌வீர‌ர்க‌ள் ப‌லியானா‌ர்க‌ள்.

ச‌ட்டீ‌ஸ்க‌ர் மா‌நில‌ம் தா‌ண்டிவாடா‌வி‌ல் உ‌ள்ள பெ‌ஜி நகர காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ன் ‌மீது இ‌ன்று காலை மாவோ‌யி‌ஸ்டுக‌ள் ‌திடீரென தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர். அ‌ப்போது அ‌ங்‌கிரு‌‌ந்த பாதுகா‌ப்பு படை ‌வீர‌ர்க‌ள் இர‌ண்டு பே‌ர் ‌ப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 6 காவல‌‌ர்க‌ள் படுகாய‌ம் அடை‌ந்தனர்.

இ‌ந்த தா‌க்குத‌லை நட‌த்‌தி ‌வி‌ட்டு மாவோ‌யி‌‌ஸ்டுக‌ள் அ‌ங்‌கிரு‌ந்து த‌ப்‌பி‌வி‌ட்டன‌ர். தகவ‌ல் அ‌றி‌ந்து ‌விரை‌ந்து வ‌ந்த காவ‌ல்துறை‌யின‌ர் இர‌ண்டு பே‌ரின‌் உட‌‌ல்களை கை‌ப்ப‌ற்‌றி ‌பிரேத ‌ப‌ரிசோதனை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர். காய‌ம் அடை‌ந்தவ‌ர்களை அருக‌ி‌ல் உ‌ள்ள மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌த்தன‌ர்.

இத‌னிடயே த‌‌ப்‌பியோடிய மாவோ‌யி‌ஸ்டுகளை காவ‌ல்துறை‌யி‌ன‌ர் ‌‌தீ‌விரமாக தேடி வரு‌கி‌ன்றன‌ர்.

2 thoughts on “ச‌ட்டீ‌ஸ்க‌ர் – மாவோ‌யி‌ஸ்டுக‌ள் நட‌த்‌‌திய ‌திடீ‌ர் தா‌க்குத‌லி‌ல் இர‌ண்டு பாதுகா‌ப்பு படை ‌வீர‌ர்க‌ள் ப‌லி”

  1. சட்டீஸ்கரில் பி.எஸ்.எஃப் காவாலிகள் அப்பாவி மக்களைக் சித்திரவதை செய்ததை பற்றி எல்லாம் எழுத மாட்டீரோ ?.

    1. எழுதியிருக்கிறர்களே!
      இது செய்தி மட்டுமே. கண்டனமல்ல. பாராட்டுமல்ல.

Comments are closed.