செம்மொழி மாநாடு : ம.க.இ.க தோழர்கள் கைது

செம்மொழி மாநாடு என்ற பெயரில் கருணாநிதி நடத்தும் நாடகத்திற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் கலை இலக்கியப் கழகத்தையும் அதன் தோழமை அமைப்புக்களையும்  சேர்ந்த நூற்றுக் கணக்கான தோழர்கள் கைது செய்யப்பட்டுளனர்.கருணாநிதி தமிழுக்கு செய்திருக்கும் துரோகத்தை விளக்கியும் ம.க.இ.க தொழர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் மூலம் நகரங்கள், கிராமங்கள், பேருந்துகள், ரயில்கள் என்று எல்லா இடமும் இந்த பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இன்று பழ.கருப்பையாவின் வீட்டினுள் புகுந்த தி.மு.க குண்டர்படை வீட்டிலிருந்த பெண்கள் உட்பட அனைவரையும் தாக்கியுள்ளது.

ம.க.இ.க மேற்கொண்ட சுவரொட்டிப் பிரச்சாரத்தின் போது ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை தமிழ் நாடு காவல் துறை அகற்றிவருகிறது.

தமிழில் வழக்காடும் உரிமை கோரிய வழக்குரைஞர்களை வேட்டையாடிய கருணாநிதி அரசு சிறையிலடைத்துள்ளது.

இலங்கை அரசுடன் இணைந்து வன்னிப் படுகொலைகளை நடத்திய இந்திய அரசிற்கும் இலங்கை அரசிற்கும் நேரடியான ஆதரவு வழங்கிய கருணாநிதி தனது திராவிடத் தமிழ் விம்பத்தை மீள்ளமைப்பதற்காக 500 கோடி செலவில் செம்மொழி மாநாடு நடத்துகிறார். இந்த மாநாடு கருணாநியின் எதிர்ப்புத் தளத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.