சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் நளினி.

ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக் கைதியான நளினி கடந்த 18 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார். அவரது மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தன்னை விடுவிக்குமாறு கோரி நீதிமன்றத்தை நாடினார். நளினி. ஆனால் தமிழக அரசு அவரை விடுவிக்க மறுத்ததோடு நளினியின் சிறையறைக்குள் செல் போன்களை வைத்து எடுத்து அவரது நன்னடத்தை விதிகளை கேள்விக்குள்ளாக்கினர். நளினியை விடுவித்தால் சோனியாவை பகைத்துக் கொள்ள நேரிடும் என்பதால் கருணாநிதி நளினியை விடுவிப்பதில் தடை போடுவதோடு நளினியின் பெயருக்கு களங்கம் கற்புக்கும் வகையில் செயல் படுகிற நிலையில் சிறைக்குள் தன்னை விஷம் வைத்துக் கொல்ல சதி நடக்கிறது என்று அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டைக் கூறினார் நளினி. தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரினார். இந்நிலையில் இன்று நளினி சென்னையில் இருக்கிற புழல் சிறையின் பெண்கள் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.