சென்னை டௌவ் எதிர்ப்புப் போராட்டம் ம.க.இ.க வினர் ஆயிரக்கணக்கானோர் கைது.

போபால் மக்கள் இருபதாயிரம் பேரை ஒரு இரவில் கொடூரமாக கொன்றொழித்த அமெரிக்க பன்னாட்டு நிறுவனமாக யூனியன் கார்பைட்டின் இன்றைய வடிவமே டௌவ் கெமிக்கல்ஸ் இந்தியா முழுக்க கிளை பரப்பி அழகுப் பொருட்கள் தயாரித்து வருகிறது டௌவ் கெமிக்கல்ஸ். 20,000 மக்கள் கொல்லப்பட காரணமாக இருந்த அமெரிக்க முதலாளி வாரன் ஆன்டர்சனோ அவரது இந்தியக் கூட்டாளிகளோ தண்டிக்கப்படாத நிலையில் எவ்வித தடையுமின்றி டௌவ் கெமிக்கல்ஸ் கடை விரித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள டௌவ் ஆலையை முற்றுகையிடும் போராட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புகளும் அறிவித்திருந்தன. சுதந்திர தினமான இன்று ஆகஸ்ட் 15 அன்று சென்னை காசி திரையரங்கில் இருந்து ஊர்வலமாகச் சென்று டௌவ் ஆலையை முற்றுகையிடும் நோக்கோடு மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சார்ந்த விவசாயிகள், மாணவர்கள். ஆலைத் தொழிலாளிகள், மற்றும் பொதுமக்க்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் காலை ஒன்பது முதலே ஏராளமான போலீசைக் கொண்டு குவித்திருந்த அரசின் அடக்குமுறையையும் மீறி மக்கள் டௌவ் விற்கு எதிராக கோஷங்களை எழுப்பத் துவங்கினர். அந்தப் பகுதியே கடுமையான போக்கு வரத்து நெரிசலில் சிக்கியது. வாகனங்களில் சென்றோர் கோஷமிட்ட படி ஊர்வலமாகச் சென்ற மக்களை போலீஸ் சாரி சாரியாகக் கைது செய்தனர். கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் உணார்வு பூர்வமாக பங்கேற்ற தோழர்களின் கோஷங்களால் இப்போராட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.