சென்னை ஓவியக் கல்லுரியில் சாதி வெறியாட்டம்

நூற்றாண்டுகால புகழ் பெற்ற ஓவியக் கல்லூரியான சென்னை ஓவியக் கல்லூரிக்கு முதல்வராக வந்தார் மானோகரன் என்பவர். ஓவியக் கல்லூரி முதல்வருக்கு ஓவியத்தில் இருந்த நாட்டத்தை விட சாதிப் பற்றும் வெறியும் அதிகமாக இருந்தது. தேவர் சாதியைச் சார்ந்த மனோகரன் அதை வைத்தே திமுக வில் உள்ள தேவர் சாதி அமைச்சர்களோடும் நெருக்கம் பேணினார். கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் ஆதரவாளாரான மனோகரன் ஓவியக் கல்லூரிக்குள் தலித் மாணவர்களை ஓரம் கட்டி ஆதிக்க சாதி மாணவர்களை தலித் மாணவ்ர்களுக்கு எதிராக தூண்டி விடுவதும் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. மாணவர்களுக்கு ஓவியப் பொருட்களோ ஓவிய ஆசிரியர்களோ சரியாக இல்லாத நிலையில் ஒரு மாணவர் இது குறீத்து கேள்வி எழுப்ப யஷ்வந்திரன் என்னும் மாணவரையும் அவரது தம்பியையும் போலீசில் புகார் செய்து 15 நாள் ஜாமீன் இல்லாத வகையில் சிறைக்கு அனுப்பினார் மனோகரன். கொடூரமாக காவல் நிலையத்தில் தாக்கபப்ட்ட மாணவர்களுக்கு நியாயம் கேட்டு மாணவர்கள் இப்போது உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் கல்லூரி வாளகத்திற்குள் போலை வரவழைத்த மனோகரன் இன்றூ மாலை சுமார் 150 மாணவர்களை அதிரடியாக போலீசை வைத்து இழுத்துச் சென்று சென்னை பெரியமேடு அருகே உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்து வைத்துள்ளார்கள். இவர்களின் சிலரை கைது செய்து சிறையிலடைப்பதுதான் போலீசின் திட்டம். மனோகரன் வகுத்துக் கொடுத்த திட்டத்தின் படி போலீஸ் வேலை செய்து கொண்டிருக்கிற நிலையில் முற்போக்கு சக்திகள் அனைவரும் இந்த போலீஸ் அடாவடித்தனத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டு. கல்லூரில் அடிப்படை வசதி கோரி போராடும் மாணவர்களை போலீசின் துணையோடு ஒடுக்கும் கல்லூரி முதல்வர் மனோகரனுக்கும் தமிழக சுற்றுலாத்துரை இயக்குநர் இறையன்பு ஐ.ஏ. எஸ்-சின் ஆதர்வும் உண்டாம்.

எல்லாம் சாதிக் கூட்டு என்று புலம்புகிறார்கள் மாணவர்கள்.பிற்படுத்தப்பட்ட சாதி ஆதிக்கமே திராவிட இயக்கமாக வளர்ந்து நிற்கும் ஒரு சூழலை நாம் இன்று யதார்த்தத்தில் காண்கிறோம். தலித் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் ஆதிக்க சாதி கூட்டின் மூலம் மீண்டும் ஒரு முறை இப்போது அது நிரூபணமாகியிருக்கிறது.

3 thoughts on “சென்னை ஓவியக் கல்லுரியில் சாதி வெறியாட்டம்”

  1. விஜயகாந்த் நாயுடுக்களூக்கே தனது கட்சியில் முன்னுரிமை தருவதாக பேச்சிருந்தது, கோபால்சாமி தமிழனால் கெட்டதாக நாயுடுக்கள் குமுறீ இருக்கிறார்கள்.முனனேறீய வகுப்பினரான பிராமணர் கூட தம்மை பிற்பட்ட வகுப்பினராக ஆக்குமாறூ போராடுகிறார்கள்.இதில் தேவர்களூக்கும்,தலித்துக்களூக்கும் எப்போதும் எட்டாம் பொருத்தம்.இவர்களூக்கிடயேயான சண்டையில் பயனடைவது என்னவோ நாயுடுக்கள்தான்.

  2. நெஞ்சு பொறுக்குதில்லையே 
    நிரம்ப படித்தவர்கள் கூட
    நிலை கெட்டு போவது கண்டு………………

Comments are closed.