சென்னை இலங்கை துணைத் தூதகரத்தை மூடக் கோரி திருமா ஆர்ப்பாட்டம்.

இனக்கொலை குறித்து ஐநா அமைத்துள்ள மூவர் குழுவுக்கு எதிராக இலங்கை அரசின் ஆதரவோடு கொழும்பில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் இனக்கொலை விசாரணையை துரிதப்படுத்தக் கோரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐநா அலுவலகத்தில் இயக்குநர் புகழேந்தி தலைமையிலான இளைஞர்கள் மனு ஒன்றை கையளித்தனர். அதில் ஐநா விசாரணைக்குழுவுக்கு எதிரான சிங்களர்களின் போராட்டங்கள் குறித்து அலட்டிக் கொள்ளாமல் இறுதிப் போரின் போது நடந்த இனக்கொலை தொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி போர்க்குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேசச் சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசு நடத்திய மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு மூவர் குழுவை நியமித்து .நா.பேரவை ஆணையிட்டுள்ளது. ஆனால், சர்வதேசச் சமூகத்தையும் .நா.பேரவையையும் அவமதிக்கும் வகையில் சிங்கள இனவெறி அரசு அந்தக் குழுவுக்கு விசா வழங்க மறுத்திருப்பதுடன் கொழும்பில் உள்ள .நா. தூதரகத்தையும் இழுத்து மூடியுள்ளது. இவ்வாறு .நா.பேரவை உள்ளிட்ட சர்வதேசச் சமூகத்தையே இழிவுப்படுத்தியுள்ள சிங்கள இனவெறி அரசை எச்சரிக்கும் வகையில் திமுகவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்றுப் பாராட்டுகிறது. அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மூவர் குழுவை நியமனம் செய்த .நா., பேரவையின் தூதரகத்தை இழுத்துப் பூட்டிய சிங்கள இனவெறியர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் எதிர்வரும் 12.07.2010 அன்று தமிழகத்தில் இருந்து இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தி இலங்கைத் தூதரகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

One thought on “சென்னை இலங்கை துணைத் தூதகரத்தை மூடக் கோரி திருமா ஆர்ப்பாட்டம்.”

  1. I request the srilankan tamil people not to believe VCK leader Thirumavalavan. He is playing political game over srilankan issue.

Comments are closed.