சென்னையில் சீமான் கைது.

இனி ஒரு தமிழக மீனவர் சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டால் கூட இங்குள்ள ஒரு சிங்களவன் கூட உயிரோடு திரும்பிச் செல்ல முடியாது என்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய சீமான் மீது தமிழக போலீசார் வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசியதாக சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.கைது செய்யப்படுவதற்கு முன் சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களை சந்திப்பதாக சீமான் தகவல் வெளியிட்டிருந்தார். இதையறிந்த பத்திரியாளர்கள் சென்னை பிரஸ் கிளப்பில் குவிந்தனர். இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு முன்பு சீமானை கைது செய்ய வேண்டும் என்று போலீசார் திட்டமிட்டிருந்தனர். மேலும் சென்னை பிரஸ் கிளப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை பிரஸ் கிளப்புக்கு வந்த சீமானை, போலீசார் உள்ளே நுழைய விடாமல் கைது செய்தனர்.