சுவிசில் பெரும் பணச்செலவில் நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் மாநாட்டின் முடிவில் ..

tamipolநவம்பர் மாதம் 19 ம் 22 திகதிகளில் சுவிசில் பெரும் பணச்செலவில் நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை:

தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகளைப் பிதிநிதிப்படுத்தும் நாம் ஏகோபித்த எமது கருத்துக் களைப் பரிமாறிக் கொள்ள வழிசெய்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இக் கூட்டத்தை ஆமோதித்து, சகல தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடையே ஒரு பொது மேடையை உருவாக்குவதற்கு எமது ஆதரவை உறுதி செய்கிறோம்.

தமிழர், முஸ்லிம்கள், இந்திய வம்சாவழித் தமிழர் கள் ஆகிய மூன்று பிரத்தியேகப் பிரிவினரையும் உள்ளடக்கியதே தமிழ் பேசும் மக்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

வேறுபட்டதும் வித்தியாசமானதுமான அடையாளங் களும், அக்கறைகளும், நிலைப்பாடுகளும் வௌ;வேறு கட்சிகளுக்கிடையே உண்டு என்பதை மதிக்கிறோம்.

தமிழ்பேசும் மக்களிடையே ஒற்றுமையும் ஒருமித்த கருத்தும் தேவையென்பதை ஏற்றுக்கொண்டுள்ள வேளையில் சில பிரச்சினைகளும் அவற்றை அணுகும் முறைகளிலும் வேறுபாடு உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

ஒரு நீதியான, நிரந்தரமான அரசியல் தீர்வுக்காக, சமூகத்தின் சகல பகுதியினரையும் உள்ளடக்கிய ஒரு மாண்புள்ள, மதிப்புள்ள, சமாதானமான செயற்பாடு களை முன்னெடுப்போம் என உறுதி செய்கிறோம்.

ஏற்றுக்கொண்டு எமது கலந்துரையாடலைத் தொடர்வோம் என உறுதி செய்யும்

பெயர்கள்:

திரு. வீரசிங்கம் ஆனந்தசங்கரி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி.

திரு. பெரியசாமி சந்திரசேகரன், மலையக மக்கள் முன்னணி.

திரு. டக்ளஸ் தேவானந்தா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி.

திரு. அப்துல் றாஃப் ஹக்கீம், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

திரு. மொகமது ஹிஸ்புள்ளா, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்.

திரு. மனோ கணேசன், ஜனநாயக மக்கள் முன்னணி.

திரு. குலசேகரம் மகேந்திரன், தமிழீழ விடுதலை இயக்கம்.

திரு. சிவசுப்பிரமணியம் நந்தகுமார், ஈழப் புரட்சி அமைப்பு.

திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.

திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.

திரு. சு. சம்பந்தன், தமிழர் தேசியக் கூட்டமைப்பு.

திரு. சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்.

திரு. மாவை ளு. சேனாதிராசா, இலங்கைத் தமிழரசுக் கட்சி.

திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், தம்ழீழ மக்கள் விடுதலைக் கழகம்.

திரு. திருநாவுக்கரசு சிறிதரன், பத்பநாபா – ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.

திரு. ஆறுமுகம் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்.

tp0