சீமான் கைது பற்றி கருத்துச் சொல்ல விரும்பவிலை- இயக்குநர் பாரதிராஜா.

இயக்குநர் பாரதிராஜா தமிழினப் பற்று மிகுந்தவர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பவர் என்று பலர் நம்பிக் கொண்டிருந்தனர். இதில் ஈழத் தமிழர்களும் அடக்கம். ஆனால் தான் ஒரு தேவர் சாதி வெறியன் என்பதையும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவோடும், கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியோடும் கூட்டு வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு சினிமா வியாபாரி என்பதும் இப்போது அம்பலமாகியிருக்கிறது. இயக்குநர் சீமான் ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்று கூட அல்ல தனது சக இயக்குநர் என்று கூட கரிசனம் சிறிதும் இன்றி தனது நிஜ முகத்தை வெளிக்காட்டியுள்ளார் பாரதிராஜா.இயக்குநர் சங்க விழாவை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, சீமான் சிறையில் இருக்கிறார். இயக்குநர் என்கிற முறையில் அவர் இந்த விழாவில் பங்கேற்பாரா? அவர் விடுதலை ஆவதற்கு இயக்குநர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? அவர் கைது பற்றி என்ன நினைகிறீர்கள்? என்று சரமாரியாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.அதற்கு பாரதிராஜா, ‘’சீமான் கைது பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. அவர் கைதுக்கும் இயக்குநர் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவரின் கைது விவகாரம் கட்சி ரீதியானது. அவர் அதை கட்சி ரீதியாகத்தான் அணுகுவார். அவர் இந்த விழாவில் பங்கேற்பாரா இல்லையா என்பது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது’’என்று தெரிவித்தார். இதுதான் இந்த மனிதரின் உண்மை முகம். இயக்குநர் சங்க விழாவுக்கு யார் தலைமை தாங்குவார் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கிறீர்கள்?

15 thoughts on “சீமான் கைது பற்றி கருத்துச் சொல்ல விரும்பவிலை- இயக்குநர் பாரதிராஜா.”

 1. சூப்பரா முட்டாள்தனமா யோசிச்சிருக்கீங்க. சீமான் கைது பத்திக் கருத்து சொல்லாட்டி பாரதிராஜா தமிழின உணர்வாளர் இல்லையா, அப்படின்னா அவர் தேவர் சாதி வெறியனா? அப்ப அதுக்கு முன்னாடி அவர் ஜாதி ஒழிப்பு போராளியா? என்ன சார் உங்க லாஜிக்?

 2. ஏன் இப்படியெல்லாம் அபத்தமாக எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை. தமிழக உழைக்கும் மக்களுக்கு எதிரியாக இருந்தவன் எம்ஜிஆர் கொள்ளையடித்த பணத்தை புலிகளுக்குத் தூக்கிக்கொடுத்தான் என்பதற்காக அவனுக்கு யாழ்ப்பாணிகள் இன்னும் பிறந்தநாள் விழா எடுக்கிறார்கள். கொடுமைடா சாமி!

  1. there are two or three people celebrate his birthday not all Tamil here,

  2. m g r அரசியலுக்கு வரும் முன்னர் சினிமாவில் கொடிகட்டி பரந்த ஒருவர்.அதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்.புலிகளுக்கு கொடுத்தது அந்த பணமாக கூட இருக்கலாம் அல்லவா?

 3. பாரதிராஜா யார் என் இப்போதுதானா புரிந்து கொண்டீர்கள். ஊரை எமாற்ற தமிழ் முகமூடியும் தன்னை ஏமாற்ற பகுத்தறீவும் பாரதிராஜாவோடு என்ன முரண்பட இருக்கிறது.பிழப்பிற்காக தமிழ் பேசும் பாரதிராஜா ஒரு இழிந்த தமிழன் இவனைப் போன்றோரே தமிழை,தமிழனை தமிழகத்தில் அழித்துக் கொண்டிருக்கின்றனர்.

 4. பாரதிராஜா ஒரு நல்ல படைபாளி , வியாபாரி இல்லை ,இருந்திருந்தா அவர் கம்மேரிசியால் படம் தன கொடுத்திருப்பர் ,

  1. சினிமாவில் எல்லாமே வியபாரம் தான்.
   எல்லாருமே வியாபாரிகள் தான். சீமானும் தான் பாரதிராஜாவும் தான்.

 5. எல்லாம் சுயநலவாதிகள், கருணாநிதியின் கருணைவாதிகள்,

 6. யாழ் தமிழர்கள் மற்றவர்களை எப்போது “துரோகி” என்று கேவலப்படுத்தி கீழ் சாதி போன்று தாங்கள் எல்லாம் தெரிந்தவர்கலாகுவதில் ஆத்மா திருப்தி அடியும் இனம். யாரை இதுவரை இவர்கள் திட்டவில்லை. திரும்பின பக்கம்  எல்லாம் எலோருக்கும் “பட்டம்” கொடுத்தாகிவிட்டது. இந்நகல் இதுவரை என்ன நன்மை செய்தீர்கள் இப்படி அவர்களை உங்கள் காலின் அதில் உங்கள் விருப்பு வெறுப்புக்கு மட்டும் நடக்கும் படி சொல்ல.?

 7. இதிலென்ன சந்தேகம்… இவர் பசில் ராஜாவேதான்.

 8. ஊர்மிளா பிராபா, நீங்கள் சிங்கள்வனுக்கு வால்பிடித்து குடும்பத்துக்கு சில நன்மை பெற்றிருக்கலாம், இதுவரை என்ன நன்மை தமிழ் மக்களுக்கு , அதென்ன கீழ்சாதி மேல்சாதி, நாய்சாதி யென்றால் தெரியும் அது மிருகசாதியென்று **

 9. பாரதிராசா கருத்துச் சொல்லவில்லயா? அது பரவாயில்லயே. பாரதிராசாவின் குடும்ப
  நன்மைக்காகவோ அவ்ரின் சமூகத்திற்காகவோ சீமான் பேசி மாட்டுப்படவில்லையே.
  ஈழத்தமிழர், அதுவும் புலம்பெயர் விடுதலைப் புலித்தமிழர் இவர்களிற்கு சீமாந்தானே
  தாங்கள்தான் ஈழ்த்தமிழரின் தொப்புள் கொடியென சொல்லிக் கொடுத்தவர்.

  இந்தப்புலம்பெயர் புலிகளில் ஒருவ்ராவது சீமானிற்காக கவலைப்பட்டார்களா?
  கண்ணீர் விட்டார்களா? அல்லது இந்தியத்தூதரகத்தின் முன் போய் உண்ணாவிரதமாவது இருப்பார்களா? இல்லை இல்லை அவர்களால் முடியாது
  எல்லோரும் இலங்கையில் உறவினருடனும், இராசபக்ச அரசுடனும் சுற்றுலாவில் உள்ளனர். இந்தக் கட்டுரையாளர் யாருக்கு உசுப்பேத்த முனைகின்றார். துரை

 10. இந்த விசயத்துல தேவர் சாதியை ஏன் இழுக்குரீங்ங

Comments are closed.