சீமானுக்கு ஜாமீன் மறுப்பு.

இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். மீனவர் மீதான் தாக்குதலைக் கண்டித்து கண்ட ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் இயக்குநர் சீமான் பேசும் போது தமிழக மீனவர்கள் இனி தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களர்களைத் தாக்குவோம் என்று ஆவேசமாக கூறினார் மேலும் சமீபகாலமாக முதல்வர் கருணாநிதி மீதும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள சீமான் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அரசுத் தரப்பில் சீமானுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றூம் அவரை வெளியில் விட்டால் பெரும் கலவரம் வெடிக்கும் என்றும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பரிசீலித்த சென்னை நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.