சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு!

china200 சீனாவுக்கு எதிராகப் புனிதப்போர் நடத்துமாறு உய்கூர் பிரதேச முஸ்லிம்களுக்கு அல் கொய்தா அழைப்பு விடுத்துள்ளது.

சீனாவின் வடமேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உய்கூர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி இங்கு உய்கூர் முஸ்லிம்களுக்கும், ஹான் சீனர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.

அப்போது சீன படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானார்கள். இதையடுத்து அப்பகுதியில் இருக்கும் முஸ்லிம் சகோதரர்களை காக்க வேண்டும் என அல் கொய்தா தீவிரவாத அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து அல் கொய்தா தளபதிகளில் ஒருவரான அபு யாகியா அல்-லிபி இணையதளம் ஒன்றில் வெளியான வீடியோவில் பேசிய போது,

“சீனாவில் தனி முஸ்லிம் நாடு உருவாக்க அல் கொய்தா பாடுபடும். தற்போது ஜின்ஜியாங் பகுதியாக இருக்கும் கிழக்கு துருக்கிஸ்தான் பகுதியை விடுவிக்க வேண்டும்.

துருக்கிஸ்தான் பகுதியில் இருக்கும் சகோதரர்கள் தங்களைத் துன்புறுத்தும், சோதனைக்குள்ளாக்கும் சீனாவைத் தடுக்க புனித போர் ஒன்று தான் வழி என்பதை உணர வேண்டும். சீன முஸ்லிம்களின் முன்னோர்கள் குரான் வாசிக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை” என்றார்.