சிறையில் வழக்கறிஞர்களின் நிலை?

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மதுரை, சென்னை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஒரே நேரத்தில் கருணாநிதி அரசின் ஒடுக்குமுறையையும் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஒடுக்குமுறையையும் சந்திக்கும் தோழர்கள் சிறையிலும் தங்களின் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்கள். இந்நிலையில் இந்த வழக்கறிஞர்களின் நிலை குறித்து எந்தத் தகவல்களையும் யாரும் தெரிந்து கொள்ள இயலவில்லை. மேலும் சென்னை புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தவர்களில் இரண்டு பெண் வழக்கறிஞர்கள் மட்டும் தங்களின் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதாக ஆளும் கட்சி ஜாலரா ஊடகங்கள் போலீஸ் சொன்னதை அப்படியே வாந்தி எடுத்தன. ஆனால் இது குறித்து எந்தத் தகவல்களையும் பெற முடியாத நிலையில் வழக்கறிஞர்களின் உறவினகளைக் கூட பொலீசார் அவர்களை சந்திக்க அனுமதி மறுத்து வருகின்றனர். மோசமடைந்து நிலைமையை எவ்விதத்தில் கருத்தில் கொள்ளாத மக்கள் விரோத கருணாநிதி அரசைக் கண்டித்து இன்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் புறக்கணிப்புப் போராட்டம் நடந்து வருவது ஒரு புறமிருந்தாலும் ஈழத் தமிழர்களில் சில புலி ஆதரவுச் சக்திகள் கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கி செம்மொழி மாநாட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் நிலையில் ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டுப் போரடியெ அதே வழக்கறிஞர்கள்தான் இப்போது தமிழை நீதிமன்ற மொழியாக்கவும் கோரி போராடுகிறார்கள். இந்த உண்மையை நன்றியுள்ள எந்த ஈழத் தமிழானாவது நினைத்துப் பார்க்க வேண்டும்.

One thought on “சிறையில் வழக்கறிஞர்களின் நிலை?”

 1. தமிழ்நாட்டு சகோதரர்கள் ஈழத்தமிழர்களுக்காக உரத்துக்கொடுத்த குரல்களும்
  முத்துக்குமாரர்கள் மூட்டிய தீயும் எம்மக்கள் மனதில் மறைந்து விடவில்லை
  இன்று புலிகள் என்ற பெயரில் பல சருகு புலிகள் அறிக்கைகளையும் வாழ்த்துக்களையும் வழங்கி வருகிறார்கள் .பிரபாகரன் தலைமையில் புலிகள்
  என்றுமே காகிதப்புலியாக இருந்தது கிடையாது செம்மொழி மாநாட்டை
  வாழ்த்தி வந்த அறிக்கை யாருடையது?குண்டப்பாவுடையதா?நெடியவனுடையதா?
  செயற்குழு என சொல்பவர்களுடையதா?அல்லது பெரும் நடிகன் கருணாநிதியுடையதா?எது என்னவாக இருந்தாலும் தமிழை நீதிமன்ற மொழியாக்க கோரி போராடும் வழக்கறிஞர்களுக்கு ஈழத் தமிழர்களாகிய
  எமது ஆதரவு என்றுமே உண்டு. ஆனால் காந்தி உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை
  நீட்டியது ஓரளவு இரக்கமனம் படைத்த வெள்ளை இன ஆட்சியர்களுக்கு எதிராக
  மாறாக நீங்கள் காந்தியத்தை தூக்கி பிடித்திருப்பது மனித நேயம் செத்துப்போன
  வர்களுக்கு எதிராக. நாம் இதே ஆயுதத்தை காந்தியின் மைந்தர்களை நோக்கி நீட்டியதாலே அன்னை பூபதியையும் தியாகி திலீபனையும் இழந்தோம்
  அதேபோல் உங்களையும் இழந்து விடுவோமோ என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. வழக்கறிஞர்களின் போராட்டம் நான்கு சுவர்களுக்குள் மறைந்து
  போய்விடாமல் அவர்களுக்கு ஆதரவாக வெளியில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் அடையாள உண்ணாவிரதங்களை நடத்தி போராட்டத்தை
  மக்கள் முன் எடுத்து செல்லலாமே?

Comments are closed.