சிறைக்கூடங்கள் போன்று பராமரித்தமையே மக்களுக்கு மன நோய் ஏற்படக் காரணம்:ஜே.வி.பி.

இடைத்தங்கல் முகாம்களை சிறைக்கூடங்கள் போல் பராமரித்தமையே இங்கு வாழும் மக்களின் பெருமளவானோர் மனநோயினால் பீடிக்கப்பட பிரதான காரணமாகும்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜே. வி. பி.யின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

முகாம்களைக் காட்டி சர்வதேசத்திடம் கையேந்துவதால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் நலன் தொடர்பில் அரசாங்கமும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். இடைத்தங்கல் முகாம் வாழ்மக்கள் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே விஜித ஹேரத் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2 thoughts on “சிறைக்கூடங்கள் போன்று பராமரித்தமையே மக்களுக்கு மன நோய் ஏற்படக் காரணம்:ஜே.வி.பி.”

  1. ஓர் சிங்கள இனவாதக் கடசி கண்டுகொண்ட யதார்த்தத்தை> மகிந்தப் புலியின் கைக் கூலிகளுக்கு தெரியவில்லை!

Comments are closed.