சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைப் பறிப்புச் சட்டமூலம் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ள 18 வது அரசியல் திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
உத்தேச அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு எதிராக வாக்களிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் போது 18 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

கட்சி உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்ததன் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது