சிராந்தி ராஜபக்ச ஜொகின் செய்வதற்காக நாளொன்றுக்கு 2 லட்ச ரூபா அரசின் பணம் செலவிடப்படுகிறது!

 ciranthi ஜனாதிபதியின் மனைவி  சிராந்தி ராஜபக்ச  தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை கொழும்பு காலிமுகத்திடலில் உடற்பயிற்சி செய்வதாகவும் இதற்காக அவரது பாதுகாப்பிற்காக நாளொன்றுக்கு 2 லட்ச ரூபாவிற்கு மேல் செலவிடப்படுவதாகவும் காவல்துறை திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் மனைவி உடற்பயிற்சிக்காக நடக்கும் சந்தர்ப்பத்தில் இரண்டு வெள்ளைநிறக் குதிரைகளில் இரண்டு காவல்துறையினர் அருகில் பயணிப்பதாகவும் காலிமுகத்திடல் முழுவதும் காவல்துறையின் நாய்களும் சோதனைக்காக ஈடுபடுத்தப்படுவதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 சிராந்தி காலிமுகத்திடலுக்கு வந்து, செல்லும் நேரங்களில் வீதி, பொதுப் போக்குவரத்திற்கு மூடப்படுவதுடன், உடற்பயிற்சியில் ஈடுபடும் போது நூற்றுக் கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பிற்காகவும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
 
  சி ராந்தி  ஜொகின் செய்யும் நேரத்தில் சுற்றுவட்டாரத்தில் வேறெவருக்கும் உடற்பயிற்சி செய்வதற்கோ, நிற்பதற்கோ இடமளிக்கப்படுவதில்லையெனவும் இந்தச் சந்தர்ப்பத்தில் காலிமுகத்திடலிலுக்கு வரும் அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் காவல்துறைத் திணைக்களத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.