சிதம்பரத்திற்கு ஆர்.எஸ்.எஸ் பாராட்டு!

rssமாநில அரசுகளுடன் இணைந்து மாவோயிஸ்டுகளை ஒழிக்க கூட்டு நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளதற்காக மத்திய உள்துறை அமைச்சரைப் பாராட்டுவதாக ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் கூறியுள்ளது.

பீகார் மாநிலம் ராஜ்கீர் நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் மதன் தாஸ் தேவி, “மாநில அரசுகளுடன் அதிகபட்ச ஒத்துழைப்புடன் நக்ஸலைட்டுகள் பிரச்சனையைத் தீர்க்க முன்வந்திருக்கும் உள்துறை அமைச்சரைப் பாராட்டுகிறோம். இப்படிப்பட்ட கூட்டு நடவடிக்கையின் மூலம் நிச்சயம் மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தலாம்” என்று கூறியுள்ளார்.

நக்ஸலைட்டுகளின் நடவடிக்கைகளை ஒடுக்க மத்திய மாநில அரசுகளுக்கிடையே ஒத்துழைப்பு வேண்டும். அந்த அடிப்படையில் அமைச்சர் சிதம்பரம் எடுத்துள்ள நடவடிக்கைகள் எங்களுக்குத் திருப்தியளிக்கிறது என்று மதன் தாஸ் தேவி கூறியுள்ளார்.