சிங்கள பௌத்த நச்சு வேர்களும் ஈழத் தமிழர்களின் எதிர்காலமும் : சபா நாவலன்

ன்று இலங்கை மிகவும் குறிப்பான வரலாற்றுப் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. தெற்காசியாவில் போராட்டங்களுக்கான காலமாகக் கருதப்படும் நமது அரசியல் சமகாலம் இலங்கையில் சிறுபான்மை தேசிய இனங்களின் போராட்டத்திற்கான அவசியத்தைத் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாற்றியுள்ளது. அறுபது ஆண்டுகால திட்டமிட்ட தமிழ்த் தேசிய இனங்களின் மீதான அடக்குமுறை என்பது இன்று மேலும் ஒரு புதிய வடிவை எடுத்துள்ளது. இன்று சிங்கள பௌத்த மேலாதிக்க வாதச் சிந்தனைக்கு எதிரானதும், குறுந்தேசியவாத கோட்ப்பாடிற்கு எதிரானதுமான தத்துவார்த்தத் தளத்திலான போராட்டங்கள் அவசியமாகிறது.சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் பண்பியல்புகள் குறித்த புரிதல்களின் ஊடாகவே அதனை எதிர்கொள்வது குறித்த முடிபுகளுக்கு முன்வர முடியும்.

சிங்கள பௌத்தம் என்பது வன்முறையற்ற சமூகத்திற்கான பரிணாம வளர்ச்சி என்ற கருத்திற்கு எந்தக் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கவில்லை மாறாக அதன் வரலாற்றுவழி மரபும் அதனைச் சுற்றிய கருத்துக்களும் இனவாத அரசியல் வன்முறையை ஆதரிப்பதாகவே அமைந்துள்ளது( Jeyadeva Uyangoda – Preveda 1999 : 3) என்று கூறுகிறார் ஜெயதேவ உயாங்கொட என்ற ஆய்வாளர்.

இலங்கையில் தேரவாத பௌத்தம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே அரசியல் தளத்திற்கு நகர்த்தப்படுகிறது என்கிறார் நீல் வோத்தா( Niel De Votta, Sinhala Buddhist nationalist ideology : Implication for politics and conflict resolution : 2010 : 23 ).

தேசியவாதம் அல்லத்து தேசம் குறித்த கருத்துருவாக்கம் என்பது முதலாளித்துவ உருவாக்கத்தோடு தொடர்புடையது. சந்தைப் பொருளாதாரமும் நவீனத்துவமும் தேசிய இனம் சார்ந்த வரலாற்று மனிதனை உருகாக்குகிறது. தேசிய இனங்கள் தனியாகப் பிரிந்து சென்று அரசை அமைக்க வலிமைகொண்ட மக்கள் கூட்டமாகக் கருதப்பட்டது. தேசிய அரசின் அரசியல் வடிவம் முதலாளித்துவ அரசாகவே அடிப்படையில் அமைந்திருக்கும்.

மேற்கிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் முதலாளித்துவ அமைப்பு என்பது எப்போதும் குறைந்த பட்ச ஜனநாயகதிற்கான கட்டமைவுகளைக் கூட எப்போதும் கொண்டிருந்ததில்லை.

மதம் அல்லது மதம் சார்ந்த நிறுவனங்களின் ஆதிக்கம் எப்போதுமே அரச அதிகாரத்தின் ஒழுங்கமைப்பை நிர்ணயம் செய்யும் கருவியாக இருந்துவருகிறது. இந்து தத்துவ அடிப்படைவாதம் அல்லது பார்பனியம், இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்ற இந்த நாடுகளின் முதலாளித்துவ நிறுவன ஒழுங்கைப் பாதுகாக்கும் கோட்பாடாக அமைந்துவருகின்றது.

ஒவ்வொரு நாடுகளிலும் அதன் புற நிலை யதார்த்ததிற்கு ஒப்ப மதம் சார்ந்த நிறுவனங்களின் ஆளுமை வேறுபடுகின்றது.

இந்தியாவின் பார்ப்பனிய நிறுவனம் சமூகத்தின் ஒவ்வோர் கூறுகளையும் அதன் பழமைவாதக் கருத்துக்களின் அடிப்படையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இலங்கையில் பௌத்த சிந்தனை , மூன்றாம் உலக முதலாளித்துவத்திற்கு அமைய மறுபடி வடிவமைக்கப்படுகிறது. இவ்வாறான ஒரு வடிவத்தை கணநாத் ஒபயசேகர போன்ற ஆய்வாளர்கள் “புரட்டஸ்தாந்து பௌத்தம்” என்றழைகின்றனர்.

சிங்கள் பௌத்த கருத்தியலைப் பொறுத்தவரை இரண்டு பிரதான போக்க்குகளைக் கொண்டிருந்தது. முதலாவதாக அரசு என்பது சிங்கள பௌத்த நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நிறுவனம். இரண்டாவதாக சிங்கள பௌத்தப் பெறுமானங்களின் அரணாக அரசு செயலாற்றும்.

நீல் டீ வோத்தா பௌத்தம் குறித்த தனது ஆக்கத்தில் அழகாக இதனைக் குறிப்பிடுகிறார். “சிங்கள பௌத்த தேசியவாதத்தின் மிக அடிப்படையான தன்மை என்பது இலங்கை என்ற நாடு சிங்கள பௌத்தர்களுக்காகப் பாதுகாக்கப்படுகிறது, சிறுபான்மை இனங்கள் இலங்கையில் வாழ்வது என்பது சிங்கள பௌத்தர்களின் சகிப்புத்தன்மையாலேயே என்ற கருத்தாகும்” என்கிறார்.

சிறுபான்மையினருக்கு எதிரான கருத்து என்பது மட்டுமல்ல சிங்கள பௌத்த வாழ்க்கை முறை அதன் சிந்தனை என்பன கூட பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பித்து வளர்ச்சியடைகிறது.

சிங்கள பௌத்தர்கள் உயர்வைக் குறிக்கும் கோட்பாட்டு என்பது “புரட்டஸ்தாந்து பௌத்ததின்” ஆரம்ப கர்த்தா என அழைக்கப்பட்ட அனகாரிக தர்மபாலவினால் உருவாக்கப்படுகிறது.

ஆரியர்கள் உயர்குணமுடையவர்கள் என்றும், பௌத்தர்கள் ஆரியர் என்றும் ஒருவகையான தேசிய வெறி அனகாரிகவினால் சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டது. ஆரியக் குடும்பம், ஆரியரின் வாழ்க்கைமுறை, ஆரியப் பெண்களின் சமூகப் பங்கு என்று வாழ்வின் ஒவ்வொரு கூறும் அனகாரிகவினால் அணுகப்பட்டது. ஆரியர்களை உயர்ந்தவர்களாக மட்டுமல்ல அப்ரோஜீன் இன மக்கள் போன்றோரை அரை மனிதர்களாகக் கூடச் சித்தரித்த ஹெலேனா பிளவாற்ஸ்கி என்ற பெண்மணியின் ஆளுமைக்கு உட்பட்ட அனகாரிக தர்மபால சிங்கள பௌத்த மேலாதிக்க வாததின் தத்துவார்த்த நிறுவனராகச் சித்தரிக்கபடுகிறார்.

பிற்போக்கான சமூகக் சிந்தனையை மீளமைப்புக்கு உட்படுத்தும் அனகாரிக தர்மபாலவின் ஆரிய பௌத்தப் பெண்கள் குறித்த கூற்று பலரின் கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டது.

ஆரியக் கணவன் தனது மனைவிக்கு தனது தாய் தந்தையரை எப்படிப் பராமரிபது என்று பயிற்றுவிக்கிறான். மனைவியின் கடமையும் கட்டுப்படும் குடும்பத்தையும் கணவனையும் எவ்வாறு பராமரிபது என்பதே என்று அனகாரிக தனது சிந்தனையை முன்வைக்கிறார். ( A.Gurugee : Return to righteousness : 1965 :345)

பெண்களின் கடமை என்று 200 விதிகளையும் அதன் உப விதிகளையும் 22 தலையங்களின் கீழ் அவர் சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரங்கள் வாயிலாகவும் பிரசுரங்கள் வழியாகவும் கொண்டு செல்கிறார். முப்பது முக்கிய விதிகளில் வீட்டையும் உடமைகளையும் சுத்தமாக வைத்திருத்தல், மற்றவர்கள் முன்னிலையில் தலைவாரக் கூடாது.. போன்ற விதிகள் அடங்குகின்றன. குமாரி ஜெயவர்தன கருதுவது போல மண்ணின் மகளை ஆரிய மேலாண்மையுடன் உருவாக்க முனைகிறார்.

ஏற்கனவே நிறுவனமயமாகியிருந்த பௌத்த அமைப்புக்கள் அனகாரிகவினால் அதன் மேலாதிக்க உணர்வோடு மறுசீரமைக்கப்படுகிறது. கணநாத் ஒபயசேகர கருதுவது போல் அது கொழும்பையும் அதன் புறநகர்ப் பகுதிகளிலுமுள்ள புதிதாக உருவாகிய மத்தியதர வர்க்கப் பகுதியினரை கவரும் வகையில் உருவாக்கப்படுகிறது. (Obeysegara : Buddhism Transformed : 1988 : 178)

அனாகாரிகவின் சிந்தனை சிங்கள மக்கள் மத்தியில் மூன்று முக்கிய கருத்துக்களைச் சிங்கள மக்கள் மத்தியில் சிந்தனைத் தளத்தில் வளர்த்தது.

முதலாவதாக, இலங்கை என்பது சிங்கள பௌத்தப் பெறுமானங்களைப் பாதுகாப்பதற்கான நாடு; இரண்டாவதாக இந்தப் பெறுமானங்களை குடியேற்றவாத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கவேண்டும்; மூன்றாவதாக சிறுபான்மையினரின் வாழ்வுரிமை என்பது சிங்கள பௌத்தப் பெறுமானங்களைப் பாதுகாப்பதற்காகவே.

இஸ்ரேலில் உருவாக்கப்பட்டது போன்ற அழிவரசியலை இவரது கருத்துக்கள் இலங்கை முழுவதும் தோற்றுவிக்கிறது. சிறிது சிறிதாக இலங்கையின் பிரதான முரண்பாடென்பது பெருந்தேசிய இனமான சிங்கள் தேசிய இனத்திற்கும் தமிழ்ப் பேசும் ஏனைய சிறுபான்மை இனங்களிற்கும் இடையேயான முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றது.
இந்த முரண்பாடு இலங்கையில் வாழும் மக்கள் கூட்டங்களிற்கு இடையேயான பிரதான முரண்பாடாக வளர்ச்சியடைகிறது.

இந்த வளர்ச்சியின் பொதுவான நிலை குறித்து நீல் வோத்தா பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“அரசியல் பௌத்தம்” மற்றும் சிங்கள பௌத்தத் தேசியவாதம் என்பன சிங்கள பௌத்த தேசியவாதக் கோட்பாட்டை உருவாக்கியுள்ளது. இதுவே சிங்கள பௌத்தர்களின் சமூகத்திலும் அரசமைப்பிலும் மேலோங்கியுள்ளது. இந்தத் தேசியவாதம் சிங்கள பௌத்தத் தேசியவாதம் என்பது ஒருங்கிணைந்த அரசமைபினுள் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைக் கோருகிறது. விதிகளையும் சட்டங்களையும் கொண்டு அந்த மேலாதிக்கம் நிறுவனமயப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி நிரலை மறுப்பவர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது. இந்த சிங்கள பௌத்த தேசியவாதம் சமரசங்களுக்கு அப்பாற்பட்டது. ஆக, இது குறித்து கேள்வியெழுப்புபவர்களாயினும் எதிர்ப்பவர்களாயினும் அரச எதிரியாகக் கருதப்படுகின்றனர். (Sinhala Buddhist nationalist ideology : Implication for politics and conflict resolution : 2010 : 11)

நீல் வோத்தா தனது ஆக்கத்தில் கருதுவது போல் சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்பது நிறுவனமயப்படுத்தப்படுள்ளது. இந்த நிறுவனம் நூறாண்டு வரலாறும் வாழ்வும் கொண்டது. இஸ்ரேலிய சியோனிசத்தைப் போல எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாத கோரமான அமைப்பு முறையைக் கொண்ட சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் சிங்களப் பெருந்தேசிய வாதத்தின் அடிப்படையாகவும் முன் முகமாகவும் திகழ்கிறது.

இந்தியாவில் பேசப்படுகின்ற பார்பனிய தேசியவாதம் அதன் பாசிச பண்புகள் என்பவற்றிலிருந்து சிங்கள பௌத்த மேலாதிக்கவாத்மும் பேரினவாதமும் அவற்றின் உருவாக்கத்தில் வேறுபடுகிறது. சிங்கள பௌத்தம் என்பது இலங்கையில் மட்டுமே காணப்படுகின்ற கோட்பாடு. அதன் மீதான அன்னியர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஆகிரமிப்புக் குறித்த பய உணர்வின் அடிப்படையிலேயே இது உருவாக்கப்படுகிறது.

ஆக்கிரமிப்பிற்கும் அழிவிற்கும் எதிரான உளவியல்ரீதியான பய உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் அதன் விஷ வேர்களைப் படரவிட்டுள்ளது. தமிழ்ப் பேசும் பௌத்தர்களல்லாத சிறுபான்மைத் தேசிய இனங்கள் அழிக்கப்படும் போதெல்லாம் சிங்கள மக்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான யுத்தமாகவே சித்தரிக்கப்படுகின்றது.

யூத மக்களின் அழிவிவு குறித்த பய உணர்வின் அடிப்படையிலேயே இஸ்ரேல் உருவாகிறது. ஆக, சிங்களப் பெருந் தேசியம் என்பது இஸ்ரேலிய சியொனிசத்தின் பண்பியல்புகளையும் கொண்டுள்ளது.

சிறுபான்மையினரின் இலங்கையின் பொதுவான அரசியல் சட்டங்களுக்கு உட்பட்ட உரிமைகள் தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தப் பய உணர்வின் தூண்டிவிடப்படுகின்றது.

தமிழர்களின் உரிமைக்கான முதல் அரசியல் சட்டமாகக் கருதப்படும் பண்டா – செல்வா ஒப்பந்தம் கைவிடப்பட்ட வேளையில் கூட சிங்கள பௌத்த பய உணர்வு தூண்டப்பட்டே அதற்கு எதிரான எதிர்ப்பியக்கங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த அடிப்படைகளிலிருந்து இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களில் தன்னுரிமைக்கான போராட்டம் குறித்த கருத்தும் அவற்றின் எதிர்காலம் குறித்த முன்மொழிவுகளும் உருவாகலாம்.
அதன் முன்பதாக சில முக்கியமான வினாக்களுக்கு விடைகாணப்பட வேண்டும்.

1. முப்பதாண்டு கால குறுந்தேசிய வாதிகளின் விடுதலைப் போராட்டம் பெருந்தேசிய வாதத்தில் ஏற்படுத்திய பாதிப்பு.

2. சிங்கள பௌத்த மேலாதிக்க வாத்த்தினதும் பேரின வாதத்தினதும் இன்றைய நிலை.

3. சிங்கள பௌத்த மேலாதிக்கமும் பேரின வாதமும் தேசிய இனங்களின் இருப்பில் ஏற்படுத்துகின்ற பாதிப்பு.

4. சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டமும் தேசிய இனங்களின் எதிர்காலமும்.

இலங்கையில் தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டத்தைத் திட்டமிடும் எவரும் மேற்குறித்த அடிப்படைகளைக் கடந்தே செல்லவேண்டும்.

Published on: May 07, 2011 @ 20:00 Edit

இன்னும் வரும்…

49 thoughts on “சிங்கள பௌத்த நச்சு வேர்களும் ஈழத் தமிழர்களின் எதிர்காலமும் : சபா நாவலன்”

 1. நாவலன் இங்கே பல் முற்போக்காளர்கள். பேரினவாத சிங்கள அரசை எதிரிக்கத் திராணியற்று……. பல் வேறு விதமான வகைகளில் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்.,அதில் ஒன்று பௌத்த மரபு,….. இக்கட்டுரை அதை உடைக்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்துப்பாசிசமும்,,,,,,,,, இலங்கை தேரவாதப் பாசிசமும் ஒன்றே………

  1. இலங்கையில் சிருபாண்மை இனத்தின் நலன் என்று பேசுவதே தமிழினத்தை இரண்டாந்தரக்குடிமகனாக ஆக்குவதாகும்.சரிசமமான இனம் என்றால் தனி ஆட்சியுரிமை இல்லாமல் சிங்களபேரினத்தின் ஆட்சியுரிமையில் முடியுமா?

   1. முதன் முதலில் சுயாட்சிக் கழக நவரட்னம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தார்.அப்போது மக்கள் அவரையும் அவருடைய தீர்வையும் ஏற்றுக்கொள்ளவில்லை.அப்போது இந்த தனிநாட்டு தீர்வை அமிர்தலிங்கம் “தற்கொலைக்கு ஒப்பான தீர்வு”என்றார். இந்த இடைக்கால கட்டத்தில் அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றோர் தேர்தலில் தோற்றதைத் தவிர வேறு மாற்றம் எதுவும் நடைபெறவில்லை. அமிர்தலிங்கம் தனது தேர்தல் சுயநல அரசியலுக்காகவே தமிழீழ தனிநாட்டு தீர்வை முன்வைத்தார் என்பது உணர முடிகிறது.  வட்டுக்கோட்டை தனி அரசு பிரகடனப் பாதை, ஒரு பிடி சோற்றுக்கும், திறந்த வெளிச் சிறை வாழ்வுக்கும், நிவாரணத்தில் தங்கி வாழ்வதற்கும், நாடோடியாக அகதியாக அலைவதற்கும் வித்திட்டுள்ளது.

    1. நவரட்ணம் மாடு; அமிர்தலிங்கம் மணிகட்டின மாடு. மக்கள்
     மணிகட்டியமாட்டின் சொல்லைத்தானே கேட்கவேண்டும். செம்மறியாடஇடு மந்தைபோல் வளர்த்து வைத்திருக்கிறார்களே. கேள்வி நியாயம் இன்றி வோட்டுப்போட

 2. சிங்களம் பேசும் மனிதர்களுக்கு ஒரு கடிதம்…

  நட்புடன் சிங்களம் பேசும் நண்பர்களுக்கும் மற்றும் சக மனிதர்களுக்கு

  hவவி://அநநசயடிhயசயவால.றழசனிசநளள.உழஅ/

  அரசியல் பௌத்தம் – சிங்களமயமாக்கலின் சமகால செல்நெறிகள் –
  hவவி://தகைசலாயளயn.றழசனிசநளள.உழஅ/2010/08/04/அரசியல்-பௌத்தம்-சிங்களம-2/

 3. வகுப்பு வாதம் விஷம்,மார்க்கவாதம் நஞ்சு .
  மார்க்க வாதிகள் மக்கள் மத்தியில் நஞ்சை எப்போதும் எல்லா மதங்களிலும் விதைத்தே வந்திருக்கிறார்கள்.யேர்மனியில் அடோல்ப் கிட்லரின் யூதர் மீதான அடங்கா இன வெறியின் வேர்கள் புரட்டஸ்தாந் மதத்தை உரு வாக்கிய மார்டின் லூதரிடமிருந்தே ஆரம்பம் ஆனது. மார்டின் லூதர் கை தேர்ந்த யூத வெறியனாகவே .வாழ்ந்தார்.

  1. weakness in nationality quetion and antifeudel thought giving space to the religeous fundametalists

 4. மலையக தமிழர்கள் பிரஜா உரிமை பறிக அன்றய அரசுடன் பூர்விக தமிழர்கள் கை கோர்த்து கொண்டு செய்யல பட்டர்களே அன்று மலையக தமிழர்கள் துடித்த வலிகள் இன்று உணருங்கள் மலையக தமிழனும் நாம் இனத்தவன் எண்ணம் உங்களுக்கு இல்லை இருந்து இருந்தால் மலையக தமிழர்கள் பிரஜா உரிமை பறிக காரணமான சட்டத்தை எதுர்த்து இருபிர்கள் தமிழ் நாட்டு தமிழர்களை பார்த்து தாய் தமிழ் இனமே அனல் மலையகத்தில் உள்ளவர்களை இந்திய தமிழர்கள் என்று அழைப்பது இது தான் தமிழ் தேசியமா

 5. தமிழர்களிடையேயுள்ள நச்சுவேர்களைப்பற்ரி யாராவது விபரமாக இங்கு தருவார்களா? தமிழருடன் தமிழராக வாழ்ந்து தமிழரின் கழுத்தினையே அறுத்துக் கொண்டிருப்பவர்களை முதலில் அடையாளம் கண்டு
  அவர்களை

  மக்கள் முன் நிறுத்த வேண்டும். அதனை விடுத்து சிங்கள்வ்ர் மேல் குற்ரங்களை
  சாட்டுதல் தமிழரிடையே வாழும் கொடியவர்களிற்கு பாதுகாப்பு அளிப்பதாகவே அமையும்.-துரை

  1. இது உங்களைப்பற்றிய தன்னிலை விளக்கமா?

   1. தேனி, உலகம் புரியாத அப்பாவிகளே அழிந்தது போதாதென்று
    மிகுதியாக உள்வர்களையும் அழிவிற்கு அழைக்க முயலாதீர்கள்.-துரை

    1. Remember there no failure in life, only outcomes  if the outcome did not turn out the way you desired. Just make  the necessary adjustments and move on. 

 6. தனது மூக்கறுந்தாலும் பரவாயில்லை மற்றவனின் சகுனம் பிழைக்க வேணும் என்ற யாழ்ப்பாண சிந்தனையும், எதிர்ப்பு அரசியலை மட்டுமே கடைப்பிடித்ததும் கற்பனை கோட்டையில் வாழ்ந்ததும் முள்ளிவாய்க்காலுக்கு பிறகும் தொடருகிறது என்பதற்கு இன்னமும் புலம்பும் யாழ்ப்பாணிகளின் எழுத்திலிருந்து தெரிகிறது.யாழ்ப்பாணத்தில் ஈழத்துக்காக உயிரை கொடுக்க முன் வந்து இயக்கங்களில் சேர்ந்தவர்களை சுட்டு தள்ளி டயர் போட்டு தெருவில் எரித்த போது எதுவும் பேசாது இருந்த யாழ்ப்பாணிகளுக்கு விடுதலை என்று ஒன்று தேவையா? அல்லது மனித உரிமை பற்றி பேசத்தான் லாயக்கு உண்டா? மனித உயிர்களை பற்றி அக்கறை இல்லாத  காசுக்கும் காணிக்கும் ஆசைப்பட்டு வாழும் கூட்டத்திற்கு அரசியல் வேறு எதற்கு?யாழ்ப்பாணிக்கு நாட்டு பற்றே கிடையாது. எப்படியாவது இங்கிலிசை படித்து இங்கிலிசில் கையெழுத்து போட்டு கோட்டு சூட்டு போட்டு யாரையாவது சுற்றி சுளித்து லண்டனுக்கு போய் சேருவதுதான் இவர்களின் கனவு !உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்று அந்த நாட்டுமொழிகளை கற்று அந்த நாட்டு கலாச்சாரத்துடன் கலந்து மூன்றாந் தர பிரஜைகளாக வாழ்ந்து திரவியம் தேடும் தமிழருக்கு சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக வாழமுடியவில்லை என்றால் அது யாழ்ப்பாணிகளின் குறைபாடே தவிர வேறு எதுவும் இல்லை 

  1. துரை சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

  2. இதுவே உண்மை வாழும் நாடுகளில் கூட தனி அரசாங்கம் தமிழர்களிற்கென்று
   தமக்குள்ளே அமைத்துள்ளார்கள். இதுவே இவர்களின் சுயரூபத்தை வெளிப்படுத்துகின்றது. தமிழர்களிர்கென்று ஒரு ஆன தலைமை உண்டானால்
   இந்த அரசாங்கத்தில் அங்கம் வகுப்பவர்களையெல்லாம் முதலில் தமிழினத்தினை
   தவறாக் வழிகாட்டி அழிவினிற்கு அழைத்துச் சென்றமைக்குநீதியின் முன்நிறுத்தவேண்டும்.-துரை

  3. //தமிழருக்கு சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக வாழமுடியவில்லை என்றால்//

   சரியான கண்டு பிடிப்பு நண்பரே, வரலாற்றில் அந்த சிங்கள மக்கள் தமிழ் மக்களுடன் எவ்வளவு அன்புடனும் பண்புடனும் பழகியிருந்தார்கள் மதிகெட்ட இவர்கள் இப்படி செயற்பட்டார்களே பாதகர்கள், என் கண்ணைத் திறந்த உங்களுக்கு தெற்கு நோக்கி கைகூப்பி நன்றிகள் கோடி சொல்லுகின்றேன் நன்றி நன்றி நன்றி …

 7.  ஆம் அதே சிங்களவர்களும் தம்மவரை டயர் போட்டும் வெட்டியும் கொத்தியும் கொன்றார்கள் உங்களுக்கு யாழ்ப்பாணிகள் மேல் ஏதாவது தனிப்பட கோபம் இருந்தால் அதை நேரிடையாக சொல்லி திட்டி தீருங்கள்.. மானம் கெட்டு மற்றவன் போடும் பிச்சைக்காக கண்ட இடத்திலையும் வாந்தி எடாதயுங்கோ 

  1. யாழ்ப்பாணத்தில் ஈழத்துக்காக உயிரை கொடுக்க முன் வந்து இயக்கங்களில் சேர்ந்தவர்களை சுட்டு தள்ளி டயர் போட்டு தெருவில் எரித்த போது எதுவும் பேசாது இருந்த யாழ்ப்பாணிகளுக்கு விடுதலை என்று ஒன்று தேவையா? அல்லது மனித உரிமை பற்றி பேசத்தான் லாயக்கு உண்டா?
   புலி செய்த அனியாய்த்துக்கு தான் தலை கோவனம் கட்டி சிங்கலவன் காலில் கிடந்தது

   1. மிஸ்டர் லொள்லு நீங்கள் செய்த அனியாயத்துக்கெல்லாம் எப்பநீங்க தலை குனிந்து நிக்கப்போறீங்க ? எதோ யாழ்பாணிமட்டும்தான் இதை செய்தவன் எண்டமாதிரியும் கல்குடா தேவனாயகம் தொட்டு பிள்ளையான் கருணாவரையானவர்கள் மட்டும் யோக்கியமானவர்கள் மாதிரியல்லோ கதைக்கிறயள் கதை.

  2. தமிழர்கள் தமிழர்களை சாதி பேதத்தால் கொலைகள் செய்ததும், சிங்களவ்ர்

   தமிழரை இன துவேசத்தால் கொலைகள் செய்தத்தும், யூதரை ஜேர்மனியர்(நாசிகள்) கொலைகள் செய்ததும், ஜேர்மனியரை இணைப்புப்படைகள்(அமெரிக்கா,பிரித்தானியா, போன்றநாடுகள்) குண்டுகள் போட்டு லட்சக்கணக்கில்
   கொன்றதும் உலகமறிந்த விடயம். இன்று சாதியால் நடந்த கொலைகளை
   பேசி தமிழர் தமக்குள் ஒற்றுமையைக் கெடுக்க்லாமா? அல்லது மேல்நாடுகள்
   தமக்குள் ந்டந்த அழிவுகளிற்காக பகைமையுடனா வாழ்கின்றார்கள்.

   எதற்காக பகைமையை வளர்த்து அரசியல் தேட வேண்டும் முதலில் சிங்கள தமிழ் மக்களின் பரஸ்பர உறவு அதற்கு குந்தகம் விளவிக்கும் அரசியல்
   இருஇனங்களிற்கிடையேயும் தடை செய்யப்படவேண்டும்.–துரை

   1. முதலில் நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அங்கிருந்து இடம் பெயருங்கள்.ஏனெனில் அங்கெல்லாம் நீங்கள் உங்கள் கலரைக் காட்டி கலாட்டா செய்வீர்கள் உங்கள் கொமன்ஸ்களே காட்டிக் கொடுக்கிறது.அது மட்டுமல்ல உங்கள் குறயே குற சொல்வதுதான்.விடுங்கள்.மாட்டு வண்டிலில் வந்து குதிரையைக் கட்டாதீர்கள், முடியாது.

    1. உலகமுழுக்க வீதி மறியல் கலாட்டாக்கள் செய்த
     வர்கள் எந்த நாட்டி இருந்து எந்தநாட்டுக்குப் போகலாமென சிறிது அறிவுரை சொன்னால் உதவியாக் இருக்கும்.-துரை

  3. புலி வெறியில் இன வெறியில் புலன் பெயர்ந்து இங்கு வந்து புலம்பும் வெள்ளி பார்த்து பீலா விட்டு பிள்ளைகளை கடத்தி பிணக் கணக்கு காட்டிய பிரபாகரன் தான் சரி!

  4. கிறுக்கரே நீங்கள் சும்மா கிறுக்காதீர்கள். நீங்கள் முதலில் உங்கள் எதிரிக்கும் உங்கள் குடும்ப அங்கத்தவர்களுக்கும் ( உடன்பிறந்தவர்கள் ) உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கின்றீர்கள். உங்கள் ஒரு சகோதரியை எதிரி கற்பழித்துவிட்டாதைப்பார்த்த நீங்கள் உங்களது சகோதரிகளை கற்பழித்து விட்டு நீங்கள் செய்தது சரி என்று வாதிடுவது எந்த வகையில் நியாயமாகும். இப்போது நீங்கள் எதிரியிலும் பார்க்க  மன்னிக்க முடியாத மிகவும் கெட்ட மனிதனாக பகுத்தறிவான மனிதனால் நோக்கப்பட வேண்டிய ஆளாக இருக்கின்றீர்கள். இப்போது கூறுங்கள் உங்கள் சகோதரியைக்கற்பழித்த எதிரி நம்பர் 1 கெட்டவனா அல்லது அதே செயலைச் செய்த நீங்கள் நம்பர் 1 கெட்டவனா?

 8. /இன்று சிங்கள பௌத்த மேலாதிக்க வாதச் சிந்தனைக்கு எதிரானதும், குறுந்தேசியவாத கோட்ப்பாடிற்கு எதிரானதுமான தத்துவார்த்தத் தளத்திலான போராட்டங்கள் அவசியமாகிறது
  /
  ….

  போராட்ட வடிவங்களையும் எப்படி போராடலாம் என்பதயும் கட்டுரையாளர் கூறினால் நல்லம்

  1. இந்திய இலங்கை ஒப்பந்தம் வந்த போது அதை நிறைவேற விடாது செய்ததில் புலிகளின் பங்கும் பெரிதானது. அதை நிறைவேற்ற இந்திய அரசிற்கு உதவியிருந்தால் பின்னாளில் படிப்படியாக எமது அதிகாரங்களைப் பெற்றுத் தர இந்திய அரசும் உதவியிருக்கும். பினபு இந்திய இராணுவத்தை எதிர்க்க பிரமேதாசா அரசுடன் கைகோர்த்து நாங்கள் சகோதரர்கள் இன்று அடித்து கொள்வோம் நாளை அணைத்துக் கொள்வோம் எமது பிரச்சினைகளை நாமே பார்த்துக் கொள்வோம் என்று கூடிக் குலாவினர் புலிகள். இந்தச் சந்தர்ப்த்தைப் பாவித்து பிரேமதாசா அரசுடன் ஏதாவது பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு பெற்றார்களா புலிகள்?? மாறாக தமது அரசியல் எதிரிகளை போட்டுத் தள்ள பிரேமதாசா அரசின் மறைமுக உதவிகளையும் ஆயுதங்களையும் கோடிக்கணக்காக பணத்தையும் பெற்றுக் கொள்ளவே புலிகள் முயன்றனர். ரணில் அரசுடன் போர் நிறுத்த ஒப்பத்தம் செய்யப்பட்ட போது கூட புலிகள் தம்மை வளப்படுத்தவே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு கருணா புலிகளிலிருந்து பிரிந்த பின் கருணாவிடமிருந்து ஆயுதக் களைவைச் செய்யச் சொல்லியே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ரணில் அரசுடன் சுவிசில் பலமுறை பேச்சு வார்த்தை நடாத்திய புலிகள் ஒருமுறையாவது தமிழ்மக்களுக்கான தீர்வைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார்களா?? மாறாக வரி என்ற பெயரில் பகல் கொள்ளை அடித்ததும் வெளிநாட்டுத் தமிழர்களிடமும் வெளிநாட்டு உதவி நிறுவனங்களிடமும் தமிழ் மக்களுக்கு நிவாரணமளிக்க என்று சுருட்டிய பணத்தில் தமகு்கு ஆடம்பர பங்களாக்களும் நீச்சல் தடாகங்களும் கட்டி சொகுசு வாழ்க்கை நடத்தத் தொடங்கினார்கள். ஆனால் வன்னியில் புலிகளின் பிடியில் மாட்டுப்பட்ட மக்கள் மரங்களின் கீழ் கற்கால வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றவர்களே புலிகள். இந்த நரகத்தை உருவாக்கியவர்கள் தமது சொந்த வாழ்கையை நன்கு வாழ்ந்து விட்டார்கள். இந்த நரகத்தை உருவாக்கவும் தொடரவும் உதவிய “புலன்” பெயர் தமிழர் எந்தக் குறையும் இன்றி வாழ்கிறார்கள். இவர்களை நம்பி எனியும் நம் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையையும் அழித்துக் கொள்ள விரும்புகின்றீர்களா? புலிகளின் காலாவதியான சுடுகாட்டுக்கு இட்டுச் செல்லும் அரசியலில் உங்களை ஈடுபடுத்தாது, இந்த நூற்றாண்டுக்கு பொருத்தமானதும் ஆக்கபூர்வமான சிந்தனையில் வழிகாட்டலில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். 

   1. புலன் பெயரா அன்பரே,கருத்து சொல்வதோடு மட்டும் உம்மை மட்டுப்படுத்தாமல் காரியமாற்ற துணியுங்கள், எத்தனையோ வெற்று கருத்தாளர்களையும் கோட்டை விடும் கொள்கை வகுப்பாளர்களையும் புழுகுவழி புதிய புரட்சிப்பாதையாளர்களையும் அன்று முதல் இன்று வரை கண்டுதான் வருகின்றோம், தொல்லை தாங்க முடியவில்லை…(மன்னிக்க) சரி, எல்லாவற்றுக்கும் தடையாயிருந்த புலிதான் இப்போது இல்லாமல் போய்விட்டதே, இனி அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா? ம்..தொடங்குங்கள்…(பிறகு இன்னொருதரம் சான்ஸ் கேட்கக்கூடாது)

 9. பனை மர தேசத்தை பாலைவனமாக்கிய பிதமகர்களே

  இலங்கைத் தமிழர் போராட்ட வரலாற்றில் சில கேள்விகளை, உங்கள் மனதுக்குள்ளேயே எழுப்புங்கள். அப்போது, இந்தப் போராட்ட வீழ்ச்சியின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள முடியும். இலங்கைத் தமிழினத்தை, முல்லை நிலப்பரப்பில் கொன்று குவித்த புலி தனித் தமிழீழ விடுதலை என்ற கோசத்தை நேர்மையுடன் பரப்புரை செய்தார்களா என்றால், இல்லை என்றே தெரிகிறது. மாறாக, புலம் பெயர்ந்த உலகு வாழ் தமிழர் ஊருக்காக – தலைமையின் உறவுக்காக வால் பிடித்தோர், அரசியல் என்றால் என்னவென்று புரியாதோரின் (வக்கற்ற) சண்டித்தனப் போக்குகளாலும், இந்தப் புலம் பெயர் மண்ணிலே வாழ்கின்ற பல்லினச் சமூகங்கள் வெறுக்கின்ற வகையில், தமது சொந்தப் பிள்ளைகளையே சமூக விரோதிகளாய் வளர்த்திருக்கின்ற நிலையை நாம் பல இடங்களிலும் பார்க்கின்றோம். சர்வதேச சதுரங்க அரசியலுக்குள் சிக்கி, சின்னஞ்சிறிய முள்ளிவாய்க்காலில் செத்துப் போச்சு புலித்தலைமை.

  1. கருத்தைக் கருத்தாகப் பார்க்காமல், மாற்றுக் கருத்துக் கூறியோரை வதைத்தும், சுட்டும் கொன்றமை.

  2. அறிவியலாளரை அழித்துத் தொலைத்து சமூகத்தின் புதிய தேடல்களை, தலைமைத்துவங்களை தோற்கடித்தமை.

  3. இளையோரைச் சிந்திக்கவிடாது ஏமலாந்திகளாக்கி, அவர்களது உடலில் குண்டுகட்டிக் கொன்று தொலைத்தமை.

  4. உள்முரண்பாடுகளை துவக்கு முனையில் தீர்த்துக்கட்டியமை.

  5. இவர்களைவிட்டு பிரிந்து போனோர்களை மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்களையும் கொலை செய்து பழிவாங்கியமை.

  6. பணப் பங்களிப்பாளர்கள் – அல்லாதோர் என பதிவு இலக்கங்கள் வழங்கிப் பழிவாங்கியமை.

  7. அன்றாடம் வாழ வழியில்லாத சிறு உழைப்பாளிகளிடமுங்கூட வரி அறவிட்டமை.

  8. ஆழிப்பேரலை அனர்த்தங்களால் சீரழிந்த மக்களுக்கென, புலம்பெயர் மக்களால் சேர்த்துக் கொடுத்த நிதித் திரட்டுக்களில் மாபெரும் ஊழல் செய்தமை.

  9. தாங்கள் பயங்கரவாதத் தவறுகளைப் புரிந்தவாறே, மக்களின் சிறிய தவறுகளுக்கும், அவைக்கான அர்த்தமற்றோருக்கும், சமூகச் சீர்திருத்தங்கள் என ஏதோ சட்டங்களால் தண்டனைகள் வழங்கியமை.

  10. தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக, சமூகச் சீரழிவு என்ற பொதுக் குற்றங்களைச் சுமத்தி, தண்டனை வழங்கிப் பழிவாங்கியமை.

  11. தாங்கள் சார்ந்த மதத்தில் காணக்கூடிய மூடநம்பிக்கைகளை – ஒடுக்குமுறைகளை களையாது, அவற்றை சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு போற்றி வந்தமை.

  12. பணமும் – ஆயுத பலமும் – தாக்குதல் தந்திரமும் – குண்டுகள் சுமந்து தங்களை வெடிக்கும் இளம் போராளிகளும், தங்களிடம் மிகையாக இருக்கென்ற மனிதாபிமானமற்ற திமிர்த்தனப் போக்குகளை மட்டும், உலகுக்கு துல்லியமாக வெளிப்படுத்தியமை.

  13. அதிசிறந்த – மிகப்பயங்கரமான – அறிவாற்றல் மிக்க – உலகப் போராட்ட இயக்கங்களிலேயே முதன்மையான – யாராலும் அழிக்கவோ, நெருங்கவோ முடியாத – பன்முகப்படுத்தப்பட்ட இராணுவ கட்டமைப்புகளைக் கொண்ட அமைப்பு என, சர்வதேசம் இவர்களைக் கூறிக் குசியேத்தி, சர்வதேசத்தின் வல்லாண்மை அரசியல் வலைக்குள் இவர்களை மாட்டிய வேளைகளைப் புரியாத அசமந்தப் போக்குடன் இருந்தமை.

  14. தமிழீழம் தவிர்ந்த வேறு எந்தவித தீர்வுத் திட்டங்களையும் ஏற்றுக்கொள்ளாமை.

  15. தீவிரமாக நடக்கும் ஒரு போராட்ட காலத்தில் ஜனநாயகத்தினை முழுமையாக எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலோ பேரின வாதத்தின் தமிழின அழிப்பினை விடவும் புலிகள், மாற்றுக் கருத்துக்கொண்ட இயக்கங்களை அடக்கி – ஒடுக்கி – சுட்டெரித்து – அழித்த பாசிசத்தினை எந்த மக்களுக்கான ஜனநாயகத்தில் வைத்துப் பார்ப்பது.

  16. மக்களின் – கருத்தாளரின் கோரிக்கைகளை இறுதிவரை ஏற்காமலே, எருமை முதுகில் மழை பெய்ததுபோல, அவர்களை போர்நிலையின் பகடைக்காய்களாக மட்டுமே நகர்த்தப் பாவித்தமை.

  இப்படி எத்தனையோ விடையங்களை அடுக்கிச் செல்லலாம். புலிகளின் போராட்டம் என்பது எந்த வகையான அடிப்படையில் ஆரம்பித்ததோ, அதேவகை அழிவாலேயே முடிந்திருக்கின்றது. அதாவது வினை விதைத்தவன் அதனையே அறுப்பான் என்பது இதைத்தான் எனலாம்.

  முள்ளிவாய்க்கால் முட்டுச் சந்தில் முடக்கி அழிக்கப்பட்டிருக்கின்றது.
இனி நாம் என்ன செய்யவேண்டும்..?

  இலங்கைவாழ் தேசிய இனங்களின் ஜனநாயக வாழ்வுக்கான விடுதலைக்காக, நாம் அனைவரும் என்ன செய்யவேண்டும்..?

  1. தொடர்ந்தும் எழுதவும், புலம்பெயர்தமிழர் இன்னமும் புலிகளின் மாயையிலிருந்து
   விடுபடவில்லை. சிங்களவர்களை பகைவனாக்கினார்கள், தமிழர்களில்
   புலிகளின் தவ்றுகளை சுட்டிக்காட்டியோரை துரோகிகளாக காட்டினார்கள். இன்றும் இதே
   குணங்கள் தமிழரை விட்டு போகவில்லை. இவர்கலில் பலரிற்கு பக்கத்து வீட்டு தமிழரைப் பற்ரியே அக்கறையில்லை. தமிழ் தமிழ் என்று மட்டுமுயிரை விடத்தெரிகின்றது. இது புலம்பெயர்நாடுகளில் தமிழனித்தை தனிமைப்படுத்துவதுமட்டுமன்றி ஆபத்தான விட்யாமுமாகும்.-துரை

   1. தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வடக்குகிழக்கில் இருந்த மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் நாட்டைவிட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்டார்கள். இன்னுமொரு மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் நிரந்தரமாக தெற்கில் குடியேறிவிட்டார்கள். வடக்கு கிழக்கில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களே உள்ளனர்.தமிழ் பகுதிகளை விட்டு வெளியேறி வாழும் தமிழர்களுக்கு இணையாக சிங்களவர்களோ அல்லது முஸ்லீம்களோ தமிழ் பகுதிகளில் இல்லை.சிங்களவர்கள் இவற்றை தமிழர் நினைக்கும் அளவுக்கு பெரிதுபடுத்தியதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு நிலை இருந்தால் தமிழர்கள் சிங்கள பகுதிகளை விட்டு எப்போதோ இல்லாமல் போயிருக்க வேண்டும்.இந்திய தமிழ் நாட்டு அரசியல் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு ஆதாயம் தேடும் ஒரு அரசியல். அது நம் தமிழ் அரசியல் வாதிகள் தொட்டு போராளிகள் வரை தொடர்ந்து வந்து கொண்டே இருந்திருக்கிறது.இருக்கிறது. இதுவும் ஒரு அவலம்தான். இதன் பிரதிபலிப்புதான், உலக நாட்டுத் தலைவர்களிடம், நம்மவர்கள் உணர்ச்சி மேலீட்டால் உருவாக்கும் அனுதாபங்களைக் கூட,சிங்கள அரசியல்வாதிகளால் லொஜிக்காக தகர்க்க முடிந்திருப்பதற்கான காரணம். சிங்கள தலைமைகள் ஐயோ அடிக்கிறான் என்று கத்தியதும் இல்லை. அடிச்சுப் பிடிச்சிட்டோம் என்று குதித்ததுமில்லை. அவர்கள் நிதானமாக தமது சிந்தனைகளை நகர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள். எனவே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுக்கு வழி ,அனைத்து மக்களும் எங்கும் தனி ஒரு குழுவாக வாழாமல், நாடு முழுவதும் பரந்து வாழ்வதும் , இரு மொழிக் கல்வியை (தமிழ் – சிங்களம்) கட்டாயமாகக் கற்று புரிந்துணர்வோடு வாழ்வதுமேயாகும். மொழி, மனிதனை புரிந்து கொள்வதற்கான வழி. உலகமெல்லாம் பரவி விட்ட தமிழர்கள் , தாம் வந்த நாட்டு மொழியை கற்றுக் கொள்ள முடியுமானால், தான் வாழும் நாட்டின் சகோதர மொழியைக் கற்க முடியாது என்பது பிடிவாதமாக மறுப்பதாகவே இருக்கிறது. அந்த சிந்தனையை உருவாக்கிய பெரும் தவறு நம் தமிழ் அரசியல்வாதிகள் சார்ந்தது. அந்நிலை மாற வேண்டும். உன்னால் ஒரு மனிதனை புரிந்து கொள்ள முடியுமானால், அவனோடு இணைந்து வாழ்வது ஒன்றும் சாதனையல்ல. அது சரித்திரம். அதற்காக அவன் மொழி நமக்கு தெரிய வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் மொழி அறிவும் , கலந்து நட்போடு வாழும் மன நிலையும் , அந்த இணைப்பினால் அனைவருக்கும் கிடைக்கும் வசதி வாய்ப்புகளும் ஒற்றுமையான புது வசந்தத்தை அனைத்து மக்களுக்கும் கிடைக்க வழி அமைக்கும். 

    1. அருள் அவர்களது கருத்தை யூதர்கள் கேட்டிருந்தால் இன்றூ இஸ்ரேலே இருந்திருக்காது.ஆனால் தமிழன் கேட் கவேண்டும் என்பதுதான் தமிழன் தலைவிதி.

     1. வாழ்த்துக்கள் தமிழ்மாறன்

  2. நடந்த கதை மறக்காது நாளேல்லாம் பேசிக் கொண்டிருந்தால் நமக்கு சலிப்புத்தான் வரும் நடக்கப் போவதை இனியாவது நாம் கதைக்கப் பழக வேண்டும்.எத்தனை காலம்தாம் இல்லாதவர்கள குற பேசிக் கொண்டிருப்பது? இருப்பவர்கள பற்றீ யாராவது பேசுகிறோமா?

   1. நடந்த கதை என்று ஈழ்த்தமிழர்களிற்கு ஒன்றுமில்லை. இவ்வளவு அழிவிற்குப்பின்னும் இன்னமும் நடந்த
    தவ்றுகளிற்கு
    பொறுப்பேற்க யாருமில்லை. தேடுதல் செய்து உண்மையைக்
    கூறுவோருமில்லை. தமிழினம் திருந்தியதாகவுமில்லை.
    -துரை

   2. நன்று சொன்னீர். தமிழர்களுக்காக எதுவும் செய்யாது சும்மா மற்றவர்களில் பிழைகண்டுபிடித்தபடி இருப்பவர்களுக்கு இப்போதாவது உறைக்குதா பார்ப்போம். புலிகள் பல தவறுகள் செய்திருக்கின்றனர். கடைசி நேரத்தில் செய்தது மாபெரும் தவறு. இப்போ அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டனர்.
    தமிழர்களுக்குச் சிங்களவர்கள் சமஉரிமை தராமைக்குப் புலிகளே காரணம் என்றவர்கள் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் அதனை வாங்கித்தரலாமே. ஆனந்தசங்கரி சித்தார்த்தனுக்குத் தெரியும் யதார்த்தம் எதற்கெடுத்தாலும் யாழ்ப்பாணிகள் எனக் குற்றம் சாட்டும் சிலருக்குத் தெரிவதில்லையா அல்லது ..
    சம்பந்தனைத் தலைவராக ஏற்றுக்கொண்டு அவர்பின்னால் போகிற யாழ்ப்பாணிகளும் தப்பானவர்கள்?

  3. “பனை மர தேசத்தை பாலைவனமாக்கிய பிதமகர்களே! ” என்பதை

   http://komaalikal.wordpress.com/ Posted on April 15, 2011 by komaalikal யிலும்

   அதற்கு கீழே உள்ளதை “இலங்கைத் தமிழர் போராட்ட ………………..

   http://www.ndpfront.com/?p=18322 on Thursday, April 14, 2011, 11:34.

   இங்கிருந்தும் திருடி போட இனிஒருவிற்கு

   LOL Posted on 04/16/2011 at 9:43 amதேவைப்படுகிறதோ?

 10. நிமிர்ந்து நிற்க நிர்கதியற்று நிர்மூலமாயிபோன ஓர் அடிமை இனம்! அடக்க ஒருவன் எண்டால காட்டி கொடுக்க பல நயவஞ்சகநாய்கள் கொண்ட ஒரே இனம் இந்த தமிழ் இனம்! இனி என்ன கிடக்குது? அவன்ட காலுக்கு செருப்பாகி அடிமையாய் கிடந்திட்டு போகவேண்டியதுதான்!!!!!!!!!!

  1. துரை போன்றவர்களுக்கு இனிப்பான செய்

  2. துரை போன்றவர்களுக்கு இனிப்பான செய்தி.

 11. இது ஒரு ஆரோக்கியமான கட்டுரை. பின்னூட்டம் எழுதும் பலர், தமது பழைய இயக்க மோதல்கள் பற்றியே எழுதுகின்றனர். புலிகள் மீது பழி சுமத்தி, தமது கொலைகளையும் தவறுகளையும் மறைக்கப் பார்க்கிறார்கள். கட்டுரை பற்றி எழுதுங்கள். பிரயோசனமாக இருக்கும். இல்லாவிடில் பின்னூட்டம் தேவையற்ற ஒன்றாக மாறிவிடும்

 12. Like Thirukkural திருக்குறள் Tamil Eelam’s intemperance has 3 chapters.

  First chapter was 30 years political struggle headed by Samuel James Veluppillai Chelvanayakam சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்.

  Second chapter was 30 years arms struggle headed by Veluppillai Prabhakaran வேலுப்பிள்ளை பிரபாகரன்.

  Third chapter will be 30 years economic struggle.

  2040 Tamils will achieve Independence like Israel.

  I am predicting followings will happen.

  1. Next 30 years struggle will be headed by someone who have Veluppillai part if his or her Name.
  2. Next Leader’s religion by birth will be Muslim. (SJV is Christian, VP is Hindu)
  3. Jewish people work hard 2000 years to achieve financial power in the world whereas Tamils can achieve similar status within 20 years.
  4. Next 10 years will be very critical no leader for Tamils.
  5. Prabhakaran never talk politics (only written political speeches) like VP new leader also will not talk politics.
  6. Whoever talking politics never believe them.

 13. Please chance intemperance to Independence

  Like Thirukkural திருக்குறள் Tamil Eelam’s intemperance has 3 chapters

 14. தமிழ் மாறன் – “அருள் அவர்களது கருத்தை யூதர்கள் கேட்டிருந்தால் இன்றூ இஸ்ரேலே இருந்திருக்காது.ஆனால் தமிழன் கேட் கவேண்டும் என்பதுதான் தமிழன் தலைவிதி.” ஒரே போடு அனைவரும் விளங்கிக்கொள்ளுங்கள்.

 15. அரிப்பு ஏற்பட்டால் சொறியும் இடமில்லை இந்தக் களம். கட்டுரை பற்றிய உங்கள் பார்வையினை எழுதுங்கள். அருள் எழிலனின் பின்னூட்டம் ஒன்றுதான் சிந்தனையைத் தூண்டுகிறது. யாழ்ப்பாணிக் கதையை எத்தனை நாளைக்கு அவிழ்த்து விடப்போகிறீர்கள். சாதீய வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களும் ‘யாழ்ப்பாணி’ என்ற வரையறைக்குள் வந்து விடுகிறாகள். உயர்சாதியினர் என்று சொல்லப்படுபவர் மத்தியிலும் வறுமையில் வாடும் பலர் இருக்கிறார்கள். பிரதேசவாதம், விமர்சனமாகாது.

 16. Pingback: Indli.com
 17.  ஒருங்கிணைந்த அரசமைபினுள் சகல இனங்களுக்குமான உரிமைகளனைத்தையும்  ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எம் சமூகங்களிடமும் எப்போ தோன்றுகிறதோ ,அன்றுதான் பரபரப்புக் காட்சிகளைக் காணத் துடிக்கும் வித்தைகாரர்களுக்கு சாவுமணி ! இது எப்போ சாத்தியம்?

Comments are closed.