சிங்கள கைதிகள், தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் :

jailகொழும்பு மகசின் சிறைச்சாலையில் சிங்கள கைதிகள், இன்று தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடந்த்துள்ளனர். காயமடைந்த 15 பேர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வாழ்க்கை தொழில்நுட்ப பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை தாக்குதவற்கு சிங்கள கைதிகள் ஆயுதங்களுடன் இருப்பதாக உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்த கலவரம் தொடர்பில் உடனடியாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு குறித்த அதிகாரிகளிடம் கோரியிருப்பதாக, நீதி மற்றம் சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அசம்பாவிதங்களுக்கு காவற்துறை அதிகாரிகள் துணை போயிருக்கும் பட்சத்தில், அவர்கள் அனைவரையும் பணியில் இருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.