சிங்களம் கற்றுக் கொள்வதற்காக அதிக நேரத்தை செலவிடுகின்றேன் – கருணா

27.07.2008
தற்போது சிங்கள மொழியைக் கற்றுக் கொள்வதற்காக அதிக நேரத்தை செலவிடுவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார்.
சிங்கள மொழிபேச்கூடிய ஓர் நபராக பாராளுமன்றத்திற்கு செல்வதே தமது பிரதான நோக்கமென அவர் லக்பிம நாளேட்டுக்குக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கு சிங்களம் கற்றுக் கொள்ளவும், சிங்கள மக்களுக்கு தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளவும் கூடியதோர் சூழ்நிலை உருவாக வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.