சிகிச்சைக்காக மட்டுமே பார்வதியம்மாள் தமிழகம் வர வேண்டுமாம். கருணாநிதி. நிராகரித்தார் பார்வதியம்மாள்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய கூட்டத்தில்

கேள்வி நேரம் முடிந்​த​தும் கருணாநிதி விதி 110-ன் கீழ் அவர் படித்த அறிக்கை:​ கடந்த ஏப்​ரல் 16-ம் தேதி மலே​சி​யா​வில் இருந்து சிகிச்​சைக்​காக சென்னை வந்த பிர​பா​க​ர​னின் தாயார் பார்​வ​தி​யம்​மாள்,​​ சென்னை விமான நிலை​யத்​தில் குடி​யு​ரிமை அதி​கா​ரி​க​ளால் திருப்பி அனுப்​பப்​பட்​ட​தாக ஏப்​ரல் 17-ம் தேதி ஊட​கங்​க​ளில் செய்தி வெளி​யா​னது.​ ​ ​ இது பற்றி ஏப்​ரல் 19-ம் தேதி சட்​டப் பேர​வை​யில் விவா​திக்​கப்​பட்​டது.​ ​ தமி​ழ​கம் வரு​வது குறித்து பார்​வ​தி​யம்​மா​ளி​ட​மி​ருந்தோ,​​ அவ​ருக்கு துணை​பு​ரிய விரும்​பு​வ​பர்​க​ளி​ட​மி​ருந்தோ தமி​ழக அர​சுக்கு கடி​தமோ,​​ தக​வலோ வர​வில்லை.​ இந்​தப் பய​ணம் குறித்து மத்​திய அர​சுக்​கும்,​​ அவ​ருக்​கும் இடை​யே​தான் செய்​தித் தொடர்புஉள்​ளது.​ ​ ​ தமி​ழக அர​சுக்கு இதில் எந்​த​வி​த​மான தொடர்​பும் கிடை​யாது.​ பார்​வ​தி​யம்​மாள் தமி​ழ​கத்​தில் சிகிச்சை பெற விரும்​பி​னால் அதனை பரி​சீ​லனை செய்து மத்​திய அர​சுக்கு எழுத மாநில அரசு தயா​ராக உள்​ளது என்று சட்​டப் பேர​வை​யில் நான் தெரி​வித்​தேன்.​ ​ ​ சிகிச்​சைக்​காக கோலா​லம்​பூ​ரில் இருந்து திருச்​சிக்கு விமா​னத்​தில் வர,​​ மலே​சி​யா​வில்உள்ள இந்​தி​யத் தூத​ர​கம் மூலம் ஏற்​பாடு செய்​யு​மாறு பார்​வ​தி​யம்​மாள் தமி​ழக அர​சுக்கு அனுப்​பிய கடி​தம் ஏப்​ரல் 30-ம் தேதி மின்​னஞ்​சல் மூலம் பெறப்​பட்​டது.​ ​ ​ அதன்​படி,​​ சிகிச்​சைக்​காக பார்​வ​தி​யம்​மாள் தமி​ழ​கம் வந்து செல்ல சில நிபந்​த​னை​க​ளுக்கு உட்​பட்டு மத்​திய அரசு அனு​ம​திக்​க​லாம் என்று மத்​திய உள்​து​றைச் செய​லா​ள​ருக்குமே 1-ம் தேதி தமி​ழக அரசு கடி​தம் அனுப்​பி​யது.​ ​ ​ இந்த விவ​ரங்​களை துணை முதல்​வர் மு..​ ஸ்டா​லின் மே 3-ம் தேதி பேர​வை​யில் அறி​வித்​தார்.​ மே 3,​ 4 தேதி​க​ளில் தில்​லி​யில் பிர​த​மர் மன்​மோ​கன் சிங்,​​ ​ காங்​கி​ரஸ் தலை​வர் சோனியா காந்தி,​​ மத்​திய உள்​துறை அமைச்​சர் .​ சிதம்​ப​ரம் ஆகி​யோ​ரி​டம் இது குறித்து தெரி​வித்து அவர்​க​ளின் உத​வியை நாடி​னேன்.​ தின​மும் மத்​திய அரசு அதி​கா​ரி​க​ளு​டன் தொடர்பு கொண்டு நல்ல பதில் கிடைப்​ப​தற்​கான முயற்​சி​யில் ஈடு​பட்​டோம்.​ ​ அத​னைத் தொடர்ந்து சில நிபந்​த​னை​க​ளு​டன் சிகிச்​சைக்​காக தமி​ழ​கத்​துக்கு வர அனு​ம​திக்​க​லாம் என்று மலே​சி​யா​வில் உள்ள இந்​தி​யத் தூத​ர​கத்​துக்கு மத்​திய அரசுமே 7-ம் தேதி கடி​தம் எழு​தி​யுள்​ளது.​ அதன் நகல் தமி​ழக அர​சுக்​கும் வந்​துள்​ளது.​ ​ சிகிச்​சைக்​காக

மட்​டுமே அவர் தமி​ழ​கம் வர வேண்​டும்.​ ​ மருத்​து​வ​ம​னை​யைத் தவிர வேறெங்​கும் தங்​கக் கூடாது.​ அரசு மருத்​து​வ​ம​னை​யில்சிகிச்சை பெற விரும்​பி​னால் அதற்​கான உத​வி​களை தமி​ழக அரசு செய்ய வேண்​டும்.​ ​ அர​சி​யல் கட்​சி​யி​னர்,​​ குறிப்​பாக தடை செய்​யப்​பட்ட இயக்​கங்​க​ளோடு நண்​பர்​க​ளாக இருப்​ப​வர்​க​ளு​டன் எந்​தத் தொடர்​பும் வைத்​துக் கொள்​ளக்​கூ​டாது.​ பெயர் குறிப்​பி​டப்​பட்ட அவ​ரு​டைய உற​வி​னர்​க​ளோடு மட்​டுமே தொடர்பு வைத்​துக் கொள்​ள​லாம் என்று மத்​திய அர​சின் கடி​தத்​தில் எழு​தப்​பட்​டுள்​ளது.​ ​ மலே​சி​யா​வில் உள்ள இந்​தி​யத் தூத​ர​கம் பார்​வ​தி​யம்​மா​ளைத் தொடர்பு கொண்டு 6 மாத காலத்​துக்கு விசா வழங்​க​லாம் என்​றும்,​​ சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்​குக்கு எந்​த​வி​த​மான குந்​த​க​மும் இல்​லா​மல் மத்​திய அர​சி​னால் இந்த ஆணைபிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது  .​ சாதா​ர​ண​மாக இது​போன்ற நிகழ்​வு​க​ளில் முடிவு எடுப்​ப​தற்கு சில காலம் பிடிக்​கும்என்​றா​லும்,​​ அந்த அம்​மை​யா​ரின் உடல்​நிலை கருதி மத்​திய,​​ மாநில அர​சு​கள் மேற்​கொண்ட முயற்​சி​க​ளின் கார​ண​மாக இந்த நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.​ ​ ​ இதற்​கு​மேல் மலே​சி​யா​வில் உள்ள அந்த அம்​மை​யா​ரின் முடி​வுக்கு இணங்க தொடர்நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​ப​டும்என்​றார் முதல்​வர் கரு​ணா​நிதி.​ நிராகரித்தார் பார்வதியம்மாள்…

ரசு சொல்கிற மருத்துவமனையிலேயெ சிகிச்சை, அரசியல்வாதிகளோ, தடை செய்யபப்ட்ட அமைப்பின் ஆதர்வளார்களோ வந்து பார்க்கக் கூடாது, ஒரு மாத சிகிச்சைக்குப் பின் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே திரும்பிச் சென்று விட வேண்டும் என்கிற நிபந்தனைகள் எல்லாம் கருணாநிதியின் ஆலோசனையின் பேரில் மத்திய அரசு விதித்ததால் இறுதிக்காலத்தில் இந்த நிபந்தனைகளுடன் கூடிய தமிழக பயணம் தனக்கோ, தனது பிள்ளைகளுக்கோ எவ்விதத்திலும் மன நிம்மதியைத் தரப்போவதில்லை என்பதைத் தெரிந்த பார்வதியம்மாள் வேறு வழியில்லாமல் கொழும்புவுக்கே திரும்பிச் சென்று விட்டார். பார்வதியம்மாள் விவாகரத்தில் இந்திய மத்திய அரசின் இரக்கமற்ற போக்கை விட கருணாநிதின் பழிவாங்கும் வன்மமான போக்கு இப்போது வெளிப்பட்டிருக்கிறது. எண்பது வயதுக்கும் மேலாகிவிட்ட உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஒரு முதிய பெண்ணிடம் கருணாநிதி நடந்து கொண்ட விதம் கடும் கண்டனத்திற்குரியது. நள்ளிரவில் தனது வீட்டிற்குள் புகுந்து போலீஸ் கைது செய்ய முற்பட்ட போது அய்யோ… அம்மா என்று டப்பிங் பேசி தனக்கு அநீதி இழைக்கபப்ட்டு விட்டதாக கத்தி கூப்பாடு போட்ட கருணாநிதி. இன்று பார்வதியம்மாளிடம் நடந்து கொண்ட விதத்தை நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முசிறியில் சிகிச்சையளிப்பதைக் கூட பரிசீலிக்காத நிலையில் பார்வதியம்மாள் தமிழகம் வருவது செம்மொழி மாநாட்டில் இதை வைத்து தான் ஒரு விளையாட்டை நடத்த மட்டுமே பயன்படும் என்று கருதப்படுகிறது.