சாவேஸ் ஆதரவாளர்கள் மீது மதத் தலைவர்கள் பாய்ச்சல்

காரகாஸ், ஜூலை 7-

வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் பின்பற்றும் சோச லிச அரசியலுக்கு ஆதரவு தரும் கிறிஸ்தவர்களை பழ மைவாத கிறிஸ்தவர்கள் வன்மையாக விமர்சித்துள் ளனர்.

ஆங்கிலிக கிறிஸ்தவக் குழுக்களும், கத்தோலிக்கர் களும் இணைந்து புதிய சீர்திருத்தப்பட்ட கத்தோ லிக்க சபைகளை நிறுவி உள் ளனர். ஏழைகளின் நல்வாழ் வுக்கு உதவ வேண்டும் என்ற கொள்கை உடைய இவர் கள் இணைந்து சாவே ஸூக்கு ஆதரவு தருவதாகக் கூறும் புதிய சபைகளை நிறுவியுள்ளனர். திருச்சபை யை பிளவுபடுத்தும் இவர் கள் குற்றவாளிகள் என்று கத்தோலிக்க திருச்சபையின் ஆட்சிக்குழு கூறியுள்ளது.

வெனிசுலாவில் அரசுக் கும் திருச்சபைக்கும் இடை யில் மோதல் ஏற்படுவது புதிதல்ல. வெனிசுலாவில் கத்தோலிக்க பிரிவு பெரும் பான்மையுடன் உள்ளது. இவர்களிடையே தோன்றி யுள்ள புதிய பிரிவு சாவே ஸின் சோசலிச கொள்கை களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் கத்தோ லிக்கர்க ளுக்குள் பிளவு அதிகரித்து வருகிறது.

அரசியல் இல்லை

ஏழைகளுக்காக அரசு செயல்படுத்தி வரும் திட் டங்களை நாங்கள் ஆதரிக் கிறோம் என்று சீர்திருத் தப்பட்ட கத்தோலிக்க சபை யின் பேராயர் என்ரிக் அல் போன்னோஸ் கூறுகிறார். எங்களுக்கு அரசியல் நிலை பாடு எதுவும் இல்லை என்று அவர் மேலும் சொல்கிறார்.

பழமைவாத திருச்சபை ஜனாதிபதி சாவேஸ் நாட்டை சர்வாதிகாரப் பாதையில் அழைத்துப் போகிறார் என்று குற்றம் சாட்டுகின்ற னர். சாவேஸ் திருச்சபை மீது குற்றம் சாட்டுகிறார். திருச்சபை பணக்காரர் களுக்கு ஆதரவாகச் செயல் படுவதுடன் ஏழைகளைப் புறக்கணிக்கிறது என்று சாவேஸ் கூறுகிறார்.