சாவகச்சேரி EPDP அலுவலகம் தாக்கப்பட்டது

மாணவன் கபில்னாத் கொலை குறித்தும் இந்தக் கட்சியின் ஏனையநடவடிக்கைகள் குறித்தும் அதிர்ப்தி கொண்டிருந்த மக்கள் அலுவலகத்துள் புகுந்து சேதப்படுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன. தவிர, அரசின் ஏனைய துணை இராணுவக் குழுக்களும் இவ்வாறான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படக் கூடைய சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் பெரிய அளவில் அவர்களது அலுவலகத்திற்குள் நுழைந்ததை அடுத்து அங்கிருந்த ஈபிடிபியினர் தப்பி ஓடியுள்ளனர்  என இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

9 thoughts on “சாவகச்சேரி EPDP அலுவலகம் தாக்கப்பட்டது”

 1. A Jaffna court has issued an arrest warrant on an EPDP member over his involvement in the abduction and murder of a youth in Chaavakachcheri, reports from Jaffna said. Three students were earlier arrested over the murder of Thiruchelvam Kapilthev, a student of Chaavakachcheri Hindu College.

  The Court has also instructed the Department of Immigration and Immigration not to permit the EPDP member to leave the country, reports further added.

  The victim was abducted for ransom from his house last week and the body was later recovered from a house of one of the suspects over the weekend. (Daily Mirror online)

  “சாவகச்சேரி மாணவன் படுகொலை; ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியாணை! நாட்டை விட்டு வெளியேறவும் தடை’ என்ற தலைப்பில் நேற்று “உதயன்’, “சுடர் ஒளி’ பத்திரிகைகளின் முதலாம் பக்கத் தில் வெளியான செய்திகளுக்காக அப்பத் திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தாம் தீர்மானித்திருக்கின்றார் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கின்றார்.

  “உதயன்’ மற்றும் “சுடர் ஒளி’ பத்திரிகைச் செய்திகளுக்கு எதிராக நஷ்டஈடுகோரி வழக்குத் தாக்கல்’ என்ற பெயரில் அவரது அமைச்சின் கடிதத் தலைப்பில் அவரது ஊடகச் செயலாளர் ஒப்பமிட்டு நேற்றுக் காலை விடுத்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

  நேற்றைய திகதியிட்டு வெளியான அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு:
  “உதயன்’ மற்றும் “சுடர் ஒளி’ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் இன்றைய தலைப்புச் செய்தியானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது திட்டமிட்டு சுமத்தப் படும் ஒரு பொய்யான குற்றச்சாட்டாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

  கடந்த காலங்களிலும் குறிப்பாகத் தேர் தல்களில் இப்பத்திரிகைகள் தருணம் பார்த்துக் காத்திருந்து எங்கள் மீது சேறு பூசும் தீய செயல் களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறது என்றும் இதை நாங்கள் எம்மீது திட்டமிட்ட முறையில் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு தேர்தல் வன்முறையாகக் கருதவேண்டியுள்ளது என்றும் யாழ். தேர்தல் களத்தில் சிதைந்து போயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினரான சம்பந்தன் குழுவின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் சரவணபவன் என்பவருக்குச் சொந்தமான பத்திரிகைகள்தான் இந்த “உதயன்’ மற்றும் “சுடர் ஒளி’ பத்திரிகைகள் என்றும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, இத்தகைய தேர்தல் வன்முறைக்கு எதிராக தாங்கள் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானிக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

  அந்த வகையில் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான உள்ளூர் மற்றும் வெளியூர் கண்காணிப்புக் குழுவிற்கு முறைப்பாடு செய்வதென்றும் கட்சி மீது களங்கம் ஏற்படுத்தியமைக்காக நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இரண்டாவது அறிக்கை
  இதேசமயம், நேற்று மாலை ஈ.பி.டி.பி. கட்சியின் கடிதத் தலைப்பில் அமைச்சர் டக்ளஸின் அதே ஊடகச் செயலாளர் இன்னொரு அறிக்கையை அனுப்பி வைத்திருக்கின்றார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
  “உதயன்’, “சுடர் ஒளி’ ஆகிய ஊடகங்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது சுமத்தியிருப்பது திட்டமிட்ட அவதூறுப் பிரசாரங்களே அன்றி இதில் உண்மைத்தன்மை எதுவும் இல்லை. கடந்த காலங்களிலும் தேர்தல் நெருங்கும் தருணம் பார்த்து குறித்த இரு பத்திரிகைகளும் ஈ.பி.டி.பி. மீது மிக மோசமான அவதூறு பிரசாரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருந்த நிகழ்வுகளையும் மக்கள் நன்கு அறிவார்கள்.

  மக்கள் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இருக்கும் ஆதரவுத் தளத்தைக் கண்டு அஞ்சும் சில சக்திகள் எதிர்வரும் தேர்தலிலும் ஈ.பி.டி.பி. பேராதரவு பெற்று வெற்றி பெறப் போகின்றது என்ற காழ்ப்புணர்ச்சியினால் சாவகச்சேரி மாணவன் கபில்நாத்தின் படுகொலை தொடர்பான தகவல்களைத் திட்டமிட்ட வகையில் திரிபுபடுத்திச் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் “உதயன்’, “சுடர் ஒளி’ ஆகிய இரு பத்திரிகைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு குழுவினருடன் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான சரவணபவனுக்குச் சொந்தமானவையாகும்.

  அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பரப்பப்பட்டு வரும் இதுபோன்ற மோசமான அவதூறு பிரசாரங்களினால் நடந்து முடிந்த படுகொலைக்கான சூத்திரதாரிகளைக் கண்டு பிடித்துவிட முடியாது. உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான முறையில் அனைத்து அரசியல் தரப்பினரும் அரசியல் பேதங்களை மறந்து முன்வரவேண்டும். இதன் மூலமே இது போன்ற வன்முறைக் கலாசாரங்களைத் தடுத்து நிறுத்தமுடியும்.

  தேர்தல் காலத்தில் தவறான அவதூறுப் பிரசாரங்களைத் திட்டமிட்டுப் பரப்புவது என்பது தேர்தல் வன்முறைகளில் ஒன்றாகவே நோக்கப்படும். இதனால் இது குறித்து தேர்தல் வன்முறைகள் தொடர்பான கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்வதற்குமான நஷ்டம் கோரி குறித்த இரு பத்திரிகைகள் மீதும் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் எமது கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது என்று உள்ளது.

  ஆசிரியர் குறிப்பு
  1. நீதிமன்ற, பொலிஸ் விசாரணைகளில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களே மேற்படி செய்தியில் இடம்பெற்றிருந்தன. மாணவன் கபிலநாத் படுகொலை தொடர்பான தொடர் செய்தியே அது. ஈ.பி.டி.பி. குறிப்பிடுகின்றமை போல அது அவதூறுப் பிரசாரம் அல்ல.அச் செய்தியில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தவறு என்றால் அப்படி நீதிமன்ற மற்றும் பொலிஸ் விசாரணைகளில் இடம்பெறவில்லை என்று டக்ளஸ் தேவானந்தா கருதுவாரானால் அவருக்கு நீதிமன்றத்துக்குச் சென்று உரிய பரிகாரம் காணும் முழு உரிமையுமுண்டு. நீதிமன்றில் இப்பிரச்சினையை எதிர்கொள்ள “உதயன்’, “சுடர் ஒளி’ தயாராகவே பார்த்து காத்து இருக்கிறது.

  2. “இந்த மாணவனைக் கடத்திக் கொலை செய்த வெறியாட்டத்தை நடத்தியோர் சுயேச்சைக் குழு ஒன்றின் வேட்பாளர்களே என விசாரணையில் தெரியவந்திருப்பதாக’ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி நேற்று விடுத்த பகிரங்க அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது குறிப்பிடுகின்றமை போல அவர் “உதயன்’, “சுடர் ஒளி’ பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால், மேற்படி சுயேச்சைக் குழுவுக்கு எதிராக அவரது கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பற்றிய விடயங்களை நீதிமன்றத்தில் முன்வைத்து, அவற்றை நிரூபிக்குமாறு அவரது கட்சியைக் கோரும் அமிலச் சோதனைக்கும் அந்த வழக்கில் இடமிருக்கும் எனக் கருதுகிறோம். எனவே, அத்தகைய வழக்கை அவர் தொடுப்பதை வரவேற்றுக் காத்திருக்கிறோம்.

  3. “உதயன்’, “சுடர் ஒளி’ இத்தகைய செய்தி பிரசுரித்தமையை “தேர்தல் வன்முறை’ என்று விமர்சித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்கு எதிராகத் தாங்கள் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். அப்பப்பா…..! எத்தகைய வரவேற்கத்தக்க போக்கு மாற்றம் இது……..? “உதயன்’, “சுடர் ஒளி’ நாளிதழ்களுக்கு எதிராக அவரது இயக்கம் இலக்கு வைத்து முன்னெடுத்த கடந்தகால நடவடிக்கைகளை அறிந்துள்ள தமிழ் மக்களுக்கு இந்தப் போக்கு மாற்றத்தின் தாற்பரியம் வியப்புக்குரியதாகவே இருக்கும்.

  4. எது, எப்படியென்றாலும் ஜனநாயக ரீதியிலான பதில் நடவடிக்கைகள் என்ற விடயத்தில் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதை அவருக்கு வலியுறுத்த விரும்புகிறோம்
  http://www.uthayan.com/Welcome/full.php?id=2962&Uthayan1269917520

 2. மக்கள் சக்தி மாபெரும் சக்தி.தமிழர் தம் சக்தி அறீந்தால் சாவகச்சேரி என்ன கிளீநொச்சியிலும் ஆட்டம் போட்டுக் கொண்டு அதிக் நாள் காலம் தள்ள முடியாது.

 3. சாவகச்சேரி கனகம்புளியடி வதனனும் பெற்றோரும் கொல்லப்பட்ட போது இந்த மக்கள் சக்தியெல்லாம் எங்கே போனது?

  1. மக்களுக்கு நீதி குறித்த ஒரு மனசாட்சி உண்டு. ஒரு எல்லைக்கப்பால் அது கோபமாக வெளிப்பட்டு போராட்டமாக மாறும்.

   ஆனால் அந்த மக்களின் மனசாட்சியை பொதுப்போக்கு (main stream) கருத்துக்கள் பெருமளவில் பாதிக்கும். பெருமளவில் தீர்மானிக்கும்.

   ஒரு பெண்ணை மஞ்சள் கோட்டில் இடித்துக்கொன்ற பஸ் வண்டியைக் கொளுத்தும் மக்களின் அதே மனசாட்சி, ஒரு பால்வினைத்தொழிலாளியை “வேசை” என்று குற்றம் சாட்டி கம்பத்தில் கட்டி ஏற்றும் போது அவள் மீது கூட்டமாய்க் காறித்துப்பும்.

   எனவே,

   மக்களின் ஆக்கத்திறன் மிக்க கோபத்தினை ஒழுங்குபடுத்தி அமைப்பாக்கவும் முற்போக்கான “பொதுப்புத்தியினை” உருவாக்க வும் வேண்டியிருக்கிறது.

 4. இவ்வாறான மக்கள் எழுசசி இன்றையஜனநாயகச்சூழலுக்கான சாட்சி.
  அரசாங்கத்தின்மீது நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

 5. சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தடுத்து வைக்கப்பட்டுள்ள 11,000 தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

  எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.

  விடுதலைப் புலி உறுப்பினர்களை எவ்வித விசாரணைகளும் இன்றி விடுதலை செய்யுமாறு டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.

  அரசாங்கப் படையினரால் தற்போது தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 60 வீதமான நபர்கள் கரும்புலி மற்றும் ஆயுதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என இராணுவப் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

  1. அரசாஙத்துடன் கூடநின்றுவந்துள்ள யாருமே சட்ட விரோதமாகவும் வழக்கு விசாரணையின்றியும் மறித்து வைக்கப் பட்டோரை விடுவிக்குமாறு கேட்டதில்லை.
   தேர்தல் நேரத்தில் மட்டும் மனிதாபிமானம் கொஞ்சம் கசியும்.
   ஈ.பி.டி.பி. அலுவலகத்தைத் தாக்கும் துணிவுக்குக் கூடத் தேர்தற் சூழல் உதவியுள்ளது.

   இவ் விதமான துணிவு அரசியல் வளர்ச்சி பெற வேன்டும்.
   மயூரன் மிகச் சரியாகவே சொல்வது போல:
   மக்களின் ஆக்கத்திறன் மிக்க கோபத்தினை ஒழுங்குபடுத்தி அமைப்பாக்கவும் முற்போக்கான “பொதுப்புத்தியினை” உருவாக்கவும் வேண்டியிருக்கிறது.

 6. சாவகச்சேரி மாணவன் கபிலநாத் படு கொலை தொடர்பாக சாவகச்சேரி நீதிமன் றம் விதித்த பிடியாணையின் பேரில் தேடப் பட்டு வரும் குமாரசிங்கம் கேசவன் (ஜீவன்) என்பவர் சாவகச்சேரி ஈ.பி.டி.பி. முகா முக்கு பொறுப்பாகவுள்ள சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்) என்பவரின் கீழ் செயற்பட்டு வந்தவர் எனத் தெரிய வந்தி ருக்கின்றது.

  மேற்படி மாணவன் படுகொலை தொடர்பாக நேற்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற பூர்வாங்க விசார ணைகளின் பின்னர் நீதிவான் த.பிரபா கரன் விடுத்த உத்தரவில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.
  தேடப்படும் ஜீவனைக் கைது செய் வதற்கான பிடியாணை கடந்த 24ஆம் திகதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளமையை தமது நேற்றைய உத்தரவில் மீண்டும் ஞாபகமூட்டியுள்ள நீதிவான் ஜீவனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சாவகச்சேரி சிரேஷ்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் சனத்குமாரவுக்கு நேற்றுத் திரும்பவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  மேற்படி ஈ.பி.டி.பி. முகாமுக்குப் பொறுப்பாகவுள்ள சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்) என்பவருக்கு அவரது முகாமில் இருந்து செயற்பட்டு வந்த ஜீவன் என்பவரால் தொலைபேசி அழைப்பு மூலமாக கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பந்தப்பட்ட சடலம் புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டு அது தோண்டி எடுக்கப்பட்டது என்பதை பொலிஸார் குறிப்பிட்டமையை நீதிவான் தமது நேற்றைய உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

  மேலும் ஈ.பி.டி.பி. முகாமுக்கு பொறுப்பாகவுள்ள சூசைமுத்து அலெக்சாண்டருக்கு (சாள்ஸுக்கு) இந்த வழக்கின் சந்தேக நபரான ஜீவனால் கூறப்பட்ட விக்கி தொடர்பாகவும், செல்வம் தொடர்பாகவும் அவர்களுக்கு இந்த வழக்கில் ஏதேனும் விதத்தில் சம்பந்தம் உள்ளதா என்பது தொடர்பாகவும் இவ் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள இரண்டாவது சந்தேக நபரான லோகேஸ்வரன் சாந்தீபனின் வாக்கு மூலத்தை சிறையில் வைத்து பதிவு செய்யவும் நீதிவான் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

  நீதிமன்றின் நேற்றைய உத்தரவில் குறிப்பிடப்பட்ட ஈ.பி.டி.பி. சாவகச்சேரி முகாம் பொறுப்பாளர் சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்) என்பவர் ஈ.பி.டி.பி. சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் வெற்றிலைச் சின்னத்தில் இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதே சமயம், இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக “உதயன்’, “சுடர்ஒளி’ நாளிதழ்கள் கடந்த திங்களன்று “சாவகச்சேரி மாணவன் படுகொலை; ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியாணை! நாட்டை விட்டு வெளியேறவும் தடை’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டன.

  அந்தச் செய்தி குறித்து “உதயன்”, “சுடர்ஒளி” நாளிதழ்கள் மீது வழக்குத் தொடரப்போகின்றார் என அன்றைய தினமே அறிக்கை வெளியிட்ட ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்படி செய்தியானது தமது கட்சி மீது திட்டமிட்டு சுமத்தப்படும் ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்றும் வசை பாடியிருந்தார் என்பது தெரிந்ததே.

  மேலும் மேற்படி இரு விடயங்களிலும் தமது கட்சி மீது சுமத்தியிருப்பது திட்டமிடப்பட்ட அவதூறுப் பிரசாரங்களே அன்றி இதில் உண்மைத் தன்மை எதுவும் இல்லை என்றும் அவர் அந்த அறிக்கையில் அடித்துக்கூறியிருந்தார்.
  “அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் பரப்பப்பட்டு வரும் இது போன்ற மோசமான அவதூறுப் பிரசாரங்களால் நடந்து முடிந்த படுகொலையின் சூத்திரதாரிகளை கண்டு பிடித்து விடமுடியாது” என்றும் கூட அவர் வியாக்கியானம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஆசிரியர் குறிப்பு

  மேற்படி செய்திகள் தொடர்பாக இடம்பெற்ற இரண்டு விடயங்களை வாசகர் கவனத்துக்கு கொண்டு வருவது முக்கியமானது எனக் கருதுகின்றோம்.

  01. மேற்படி படுகொலை தொடர்பாக ஈ.பி.டி.பி. உறுப்பினருக்கு பிடியாணை என்ற செய்தி திங்களன்று வெளியானமையை அடுத்து, அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் “உதயன்” அலுவலகத்துக்கும், கொழும்பில் “உதயன்’, “சுடர்ஒளி’ ஆசிரியரின் கைத்தொலைபேசிக்கும் தொடர்பு கொண்ட சிலர், கொழும்பில் உள்ள அரச சார்புப் பத்திரிகையின் செய்தியாளர்கள் இருவரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு மேற்படி செய்தி தொடர்பாகத் தாங்களும் கட்டுரை ஒன்று வரைய உள்ளனர் எனத் தெரிவித்தனர். அதனால் அந்தச் செய்தியின் மூலத்தை தெரியப்படுத்தும்படி “நைசாக” அவர்கள் கதை விட்டனர். ஆனால் அவர்கள் அழைத்த 0772622638 என்ற தொலைபேசி இலக்கம் சம்பந்தப்பட்ட கொழும்புச் செய்தியாளர்களுடையது அல்ல என்பதையும் அதில் பேசும் குரல்கள் அச் செய்தியாளர்களுடையவை அல்ல என்பதையும் “உதயன்’, “சுடர்ஒளி”ஆசிரியர் நேரடியாக சுட்டிக்காட்டி செய்தி மூலத்தை அறிய சிலர் எடுத்த முயற்சியை முறியடித்தார்.

  02. அதே சமயம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணப்பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் அஜித் சமரக்கோன் பெயரில் ஒப்பமிட்டு றப்பர் ஸ்டாம்ப் பொறிக்கப்பட்டு கடிதம் ஒன்று “உதயன்” ஆசிரியருக்கு முகவரியிடப்பட்டு “உதயன்” யாழ்.அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
  “2010.03.29 ஆம் திகதி “உதயன்’ பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட தவறான செய்தி தொடர்பான விடயம்” என அதற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது.

  அத்தோடு அதில் “மேற்படி குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரோ அல்லது கைது செய்யப்படவுள்ள சந்தேக நபரோ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) தொடர்புள்ளவர்கள் என்றோ அன்றி அக் கட்சியின் பிரதிநிதிகள் என்றோ இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் இருந்து தெரியவரவில்லை. எனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஈ.பி.டி.பி. உறுப்பினர் என்ற வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதைப் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
  எனவே அச் செய்தியின் பிழையை சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தோடு அதன் பிரதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  இந்தக் கடிதம் தொடர்பில் பின்வரும் விடயங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்:

  அ) ஈ.பி.டி.பியைக் காப்பாற்றுவதற்காக இத்தகைய உண்மைக்கு முரணான விடயம் அடங்கிய கடிதத்தை “உதயன்” அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டிய தேவை பொலிஸ் அத்தியட்சகருக்கு இல்லை. அத்தோடு இவ்வாறு மறுப்பு பிரசுரிக்கும்படி கோரும் அதிகாரமும் அவருக்கு கிடையாது. ஆகையினால் இவ் விடயம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து “உதயன்”, “சுடர்ஒளி” நாளிதழ்கள் ஆராய்ந்து வருகின்றன.

  ஆ) தூய தமிழில் நல்ல கணனி தட்டச்சில் இக் கடிதம் யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திலிருந்து எமக்கு கிடைத்தது மகிழ்ச்சியே.

  ஆனால் அந்தக் கடிதத்தின் கணனி எழுத்து அளவும், கடிதத்தின் தலைப்புக்கான எழுத்து அளவும் வகையும் (Font Size and Type) வழமையாக ஈ.பி.டி.பி. அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும் பத்திரிகை அறிக்கைகளில் உள்ளவற்றை அப்படியே ஒத்திருந்தன. அது இக் கடிதத்தின் மூலம் குறித்து “எங்கேயோ இடிக்கின்றதே…..!’ என்ற கருத்தை நம்மிடம் ஏற்படுத்தவும் தவறவில்லை. – Uthayan

 7. EXCLUSIVE கொழும்பிலிருந்து குண்டர்களைக்கொண்டுவந்து விஜயகலா தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயகலா மகேஸ்வரன் மீது குற்றம் சுமத்தினார்.

  தமது கட்சியினர் மேற்கொள்ளும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை பொறுக்க முடியாமல் விஜயகலா மகேஸ்வரன் குறுக்கீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  தமிழ்மிரர் இணையதளத்துக்கு தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது சற்று முன் தமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக எம்மிடம் அவர் தெரிவித்தார்.

  தமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தாம் இந்த மோதல் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் காலையில் தன்னுடன் தொடர்புகொள்ளுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்மிரரிடம் தெரிவித்தார்.

  இந்த மோதல் குறித்து மேலதிக தகவல்களைப்பெற தமிழ்மிரர் சற்று முன்னர் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் ஸ்ரீ கஜனுடன் தொடர்புகொண்டது.

  இது பற்றிய தகவல்களுடன் எம்முடன் தொடர்புகொள்வதாக அவர் எம்மிடம் தெரிவித்தார்.அவருடைய தகவல்களுக்காக தமிழ்மிரர் இணையதளம் காத்துக்கொண்டிருக்கின்றது.

  இதேவேளை,தமிழ்மிரர் இணையதளம் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளரும்,முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் மனைவியுமான விஜயகலா மகேஸ்வரனுடன் உடனடியாக தொடர்புகொண்டது

  .தொலைபேசியில் எமக்குப்பதிலளித்த விஜயகலா மகேஸ்வரன் தாம் இருக்கும் இடத்தில் பிரச்சினையாயுள்ளதாகவும் பிறகு தம்முடன் கதைப்பதாகவும் தெரிவித்தார்.அச்சந்தர்ப்பத்தில் அவருடைய கையடக்கத்தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

  எனினும்,தமிழ்மிரர் இணையதளம் மேலதிக தகவல்களைப்பெற முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.

Comments are closed.