சாந்தயோகி என்னும் புலி ஆதரவாளரை திருப்பியனுப்பியது இந்தியா.

சாந்தயோகி என்னும் புலி ஆதரவாளரை இந்தியாவுக்கும் நுழைய விடாமல் திருப்பியனுப்பியுள்ளது இந்திய அரசு.இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஒரு பயணிகள் விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை போட்டனர். அவர்களில் கிலியோன் என்ற சாந்தயோகி (35) என்பவரும் வந்திருந்தார். இவர் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.இதையடுத்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருப்பதால் சாந்தயோகியை இந்தியாவுக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.பின்னர் விமான நிலைய ஓய்வறையில் அவர் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டார். இன்று பகல் 12.15 மணிக்கு கொழும்பு சென்ற விமானத்தில் அவரை திருப்பி அனுப்பினார்கள்.இதனால் இன்று காலையில் விமான நிலையத்தில் பரபரப்பாக இருந்தது.