சல்வார் ஜூடும் படைத் தலைவர் ரகுத்சிங் சுட்டுக் கொலை.

மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா பகுதிகளில் உள்ள கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டதைத் தொடர்ந்து பழங்குடி மக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை மாவோயிஸ்டுகள் தலைமை தாங்குகின்றனர். இந்திய அரசின் படைகளைத் தவிற சல்வார்ஜூடும் என்ற சட்ட வீரோத படை ஒன்றையும் பழங்குடி மக்களிடம் இறக்கி விட்டுள்ளது. கொடூர குற்றவாளிகள், அரசியல் ரௌடிகளைக் கொண்ட இப்படைகள் பழங்குடி மக்களைச் சுட்டுக் கொல்வது, பாலியல் வன்முறை செய்வது, சொத்துக்களை கொள்ளையடிப்பது உள்ளிட்ட பல சட்ட விரோத வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சல்வா‌ர்சூடும் படைபி‌‌ரிவு தலைவ‌ர் ர‌கு‌‌த்‌சி‌ங் எ‌ன்பவ‌ர் கு‌ணா‌ல்பனா‌ர்கிராம‌த்‌தி‌ல் ரோ‌ந்து ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு கொ‌ண்டிரு‌ந்தபோது அவரை சு‌ற்றிவளை‌த்து மாவோயி‌ஸ்டு‌க‌ள் தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர். ‌பி‌ன்ன‌ர் அவரை மாவோ‌‌யி‌ஸ்டு‌க‌ள் சு‌ட்டு‌க் கொன்றுவி‌ட்டு த‌ப்‌பி செ‌ன்றுவி‌ட்டன‌ர். ச‌ல்வா‌ர்சூடும் ஒரு மக்கள் வீரோத அமைப்பு அவர்களைக் கொல்வோம் மக்களைத் துன்புறுத்தும் எவர் ஒருவரையும் பழி தீர்ப்போம் என்று துண்டுப்பிரசுரங்களை விட்டுச் சென்றுள்ளனர்.