சர்வதேச மன்னிப்புச் சபை அரசியல் நோக்கங்களைக் கொண்டது : பீரிஸ்

நேற்று  புதிய திசைகள் அழைப்பு விடுத்திருந்த  ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த  வேளையில் ஜீ.எல்.பீரிஸ் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு  எதிராகக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம் வழங்கப்படுவது குறித்து ஆராயப்பட்ட காலத்திலேயே சர்வதேச மன்னிப்புச் சபை யுத்தக் குற்றச் செயல் விவாரங்களை பிரச்சாரப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு குந்தகம் ஏற்படுத்தும் திட்டமிட்ட நோக்கம் இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் அம்பலப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் முன்னிலையிலும் சர்வதேச மன்னிப்புச் சபை சாட்சியமளிக்க முன்வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு கட்டளைகளை பிறப்பிக்க முடியாது எனவும், அவற்றுக்கு அடிபணிய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

One thought on “சர்வதேச மன்னிப்புச் சபை அரசியல் நோக்கங்களைக் கொண்டது : பீரிஸ்”

  1. மக்களீன் குரல் என்பது அடங்கி இருப்பது போல் இருகும் அலை,ஒருநாள் அது வெடித்துக் கிளம்பும் போது சுதந்திரச் சூறாவளீ போன்றே இருக்கும்.அது வரை பீரீஸ்மாரின் பிதற்றல்கள் இருந்து கொண்டிருக்கும்.உள்ளீருக்கும் வலிகளீன் வேதனையின் சத்தம் உரத்துக் கிளம்பும்போது அவையே சமர்க்களமாகும்.ஆயுதங்களீன் வலிமையை விட தர்மத்தின் வலு உரமானது.

Comments are closed.