சர்வதேச மனிதநேய சட்டத்தின் பிரகாரம் பொதுமக்கள் பாதுகாப்பான சூழலில் குடியமர்த்தப்பட வேண்டும்:வோல்ட்டர் கலின் .

24.09.2008.

இலங்கையில் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்துள்ள 300,000 மக்களை பாதுகாப்பான சூழலில் குடியமர்த்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

1998ஆம் ஆண்டு சர்வதேச மனிதநேய சட்டத்தின் பிரகாரம் பொதுமக்கள் பாதுகாப்பான சூழலில் குடியமர்த்தப்பட வேண்டுமென் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்.கீ.மூனின் விசேட பிரதிநிதி வோல்ட்டர் கலின் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பதற்கு நீடித்த சமாதானம் அவசியமென வலியுறுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்.கீ.மூனின் விசேட பிரதிநிதி வோல்ட்டர் கலின், மீண்டும் இன, மத, அரசியல் ரீதியில் மக்களை ஒதுக்கினால் சமாதானம் ஏற்படாதெனவும் கூறினார்.

யுத்தப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயாந்த மக்கள் திரும்பவும் தங்களது வீடுகளுக்கு செல்வது அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்வதே  சரியானதெனவும் அவர் குறிப்பிட்டார். 

இடம்பெயர்ந்தோருக்க நிலையான தீhவைக் பெற்றுக்கொடுப்பதற்கான தேசிய கொள்கை மற்றும் நடைமுறை தொடர்பிலான செயற்றிட்டம் வகுப்பது தொடர்பிலான 3 நாள் தேசிய மாநாட்டினை நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் யுத்தம், கண்ணிவெடிகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வேறு இடங்களுக்குச் செல்வதுடன், தமது சொத்துக்களையும் இழந்திருப்பதாகவும், மக்கள் இடம்பெயர்வதை தடுத்து நிறுத்துவதுடன், அவர்கள் பாதுகாக்கப்படவேண்டுமெனவும் கலின் கூறியுள்ளார்.

சில நாடுகள் இடம்பெயாந்த மக்களை மீளக் குடியமர்த்துவதில் வெற்றி கண்டுள்ளதாகவும் வோல்ட்டர் ;கலின் தெரிவித்தார்.