சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா:’பசங்க’ படத்தின் இயக்குநர் விருது பெற்றார்!

pasanka ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் ‘பசங்க’ படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் சிறந்த இயக்குநர் விருதை பெற்றார்.

குழந்தைகளை மையமாகக் கொண்ட இப்படத்தை இயக்குநர் சசிகுமார் தயாரித்திருந்தார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற 16வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில், ஆசியப் படங்கள் பிரிவில் ‘பசங்க’ திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் சிறந்த இயக்குநருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கான விருதை நடிகை ஜூஹி சாவ்லா பாண்டிராஜிடம் வழங்கினார்.