சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? :மாஓ சேதுங்

சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? : மாஓ சேதுங் (1963 மே)

Maoசரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்து விழுகின்றனவா? இல்லை. அவை மனதில் இயல்பாகவே உள்ளனவா? இல்லை. அவை சமூக நடைமுறையிலிருந்து, அதிலிருந்து மட்டுமே, வருகின்றன. அவை மூவகையான சமூக நடைமுறைகளிலிருந்து வருகின்றன: உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், விஞ்ஞானப் பரிசோதனை. மனிதனுடைய சமூக இருப்பே அவனது சிந்தனையைத் தீர்மானிக்கிறது. முன்னேறிய வர்க்கத்திற்குரிய தனிச்சிறப்பான சரியான கருத்துக்கள் வெகுசனங்களாற் பற்றிக் கொள்ளப்பட்டதும் அக் கருத்துக்கள் சமூகத்தையும் உலகையும் மாற்றும் ஒரு பொருண்மையான சக்தியாகின்றன. மனிதர் தமது சமூக நடைமுறையிற் பல வகையான போராட்டங்களில் ஈடுபட்டுத், தமது வெற்றிகளிலிருந்தும் தோல்விகளிலிருந்தும், செழுமையான அனுபவத்தைப் பெறுகின்றனர்.

பார்வை, கேட்டல்;, மணம், சுவை, தொடுகை ஆகியவற்றுக்கான உறுப்புக்களான மனிதனது ஐம்புலன் உறுப்புக்களின் வழியே புற உலகின் எண்ணற்ற இயல்நிகழ்வுகள் மனித மூளையிற் பிரதிபலிக்கின்றன. முதலில் அறிவு புலனணர்வு சார்ந்தது. போதிய அளவு அறிவு திரண்டதும், கருக்துருவ அறிவை, அதாவது சிந்தனையை, நோக்கிய பாய்ச்சல் நிகழ்கிறது. விளங்குதல் என்பதில் இது ஒரு செய்முறையாகும். விளங்குதல் எனுஞ் செயற்பாடு முழுமைக்கும் இதுவே முதற் கட்டமாகும். புறநிலைப் பொருளிலிருந்து அகஞ் சார்ந்த உணர்வுநிலைக்கும் இருத்தலிலிருந்து சிந்தனைக்கும் இட்டுச் செல்லுங் கட்டமாகும். ஒருவரது உணர்வுநிலையோ (கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும் உட்பட்ட) கருத்துக்களோ புறநிலையான வெளி உலகின் விதிகளைச் சரியாகப் பிரதிபலிக்கின்றனவா இல்லையா என்பது, அவை சரியானவையா இல்லையா என நிச்சயிக்க இயலாத இந்தக் கட்டத்தில், இன்னமும் நிறுவப்படாதுள்ளது.

அதையடுத்து அறிதலின் இரண்டாவது கட்டமாக உணர்வுநிலையினின்று பொருளுக்குத் திரும்பச் செல்லுவதான, கருத்துக்களிலிருந்து இருப்புக்குத் திரும்பச் செல்லுவதான கட்டம் வருகிறது. இங்கே, கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும் எதிர்பார்த்த வெற்றியைத் தந்தனவா என உறுதிப் படுத்துவதற்காக, முதலாவது கட்டத்திற் பெறப்பட்ட அறிவு சமூக நடைமுறையிற் பிரயோகிக்கப் படுகிறது. பொதுவாகச் சொன்னால் வெற்றி பெறுபவை சரியானவை தோல்வி பெறுபவை தவறானவை. இயற்கையுடனான மனிதனது போராட்டத்தில் இது சிறப்பாகச் சரியானது.

சமூகப் போராட்டத்தில் முன்னேறிய வர்க்கத்தின் பிரதிநிதியான சக்திகள் சில சமயங்களிற் தோல்வியடைகின்றன. அதன் காரணம் அவர்களது கருத்துக்கள் தவறானவை என்பதல்ல, மாறாகப் போராட்டத்திற் சம்பந்தப்பட்ட சக்திகளின் சமநிலையில் அப்போதைக்குப் பிற்போக்குச் சக்திகளினளவுக்கு அவை வலியனவாயில்லை என்பது தான். எனவே அவை தற்காலிகமாகத் தோற்கடிக்கப் படுகின்றன. ஆனால் அவை இன்றோ நாளையோ வெல்லப் போகின்றவை.

மனிதனின் அறிவு, நடைமுறைச் சோதனை மூலம் இன்னோரு பாய்ச்சலுக்கு உட்படுகிறது. இப் பாய்ச்சல் முன்னையதை விட முக்கியமானது. ஏனெனில் இது மட்டுமே முதலாவது பாய்ச்சல். அதாவது புறநிலையான வெளி உலகைப் பற்றி யோசிக்கும் போக்கில் முடிவான கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும், சரியா இல்லையா என நிறுவ முடியும். உண்மையைப் பரீட்சிக்க வேறு வழியில்லை. மேலும், பாட்டாளி வர்க்கம் உலகத்தை அறிவதன் ஒரே ஒரு நோக்கம் அதனை மாற்றுவது தான்.

பல வேளைகளிற், பொருளிலிருந்து உணர்வுநிலைக்கும் மீண்டும் பொருளுக்கும், அதாவது நடைமுறையிலிருந்து அறிவுக்கும் மீண்டும் நடைமுறைக்குங்;, கொண்டு செல்லும் செயற்பாட்டைப் பலமுறை திரும்பத் திரும்பச் செய்வதன் மூலமே சரியான ஒரு கருத்தை வந்தடைய முடிகிறது. அறிவு பற்றிய மாக்ஸியக் கொள்கை, அறிவு பற்றிய இயங்கியற் பொருள்முதல்வாதக் கொள்கை, அத்தகையது.

நம்மிடையே பல தோழர்கள் அறிவு பற்றிய இக் கொள்கையை இன்னமும் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களது கருத்துக்களதும் அபிப்பிராயங்களதும் கொள்கைகளதும் செய்முறைகளதும் திட்டங்களதும் முடிவகளதும் விவரணமான உரைகளதும் நீண்ட கட்டுரைகளதும் தோற்றுவாய் ஏதென்று கேட்டால் அவர்கள் அக் கேள்வி விசித்திரமானது என நினைக்கிறார்கள். அவர்களால் அதற்கு மறுமொழி கூற இயலாதுள்ளது. பொருள் உணர்வுநிலையாகவும் உணர்வுநிலை பொருளாகவும் மாற்றப்படுவதுமான பாய்ச்சல் அன்றாட வாழ்க்கையில் நிகழ்வான போதும், அத்தகைய மாற்றம் இயலுமென அவர்கட்கு விளங்குவதில்லை.

எனவே, நமது தோழர்கள் தமது சிந்தனையைச் சரியான திசைப்படுத்தி விசாரித்தலிலுங் கற்றலிலும் அனுபவங்களைத் தொகுத்தலிலும் வல்லோராகிச் சிரமங்களை எதிர்கொண்டு தவறிழைத்தலைத் குறைத்துத் தமது வேலையைச் சிறப்பாகச் கெய்து சீனாவை உயர்வான வலிய சோசலிச நாடாகக் கட்டியெழுப்பி நமது மாபெரும் சர்வதேசக் கடமையை நிறைவுசெய்யுமுகமாக உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்படும் பரந்துபட்ட வெகுசனங்கட்கு உதவவும் நமது தோழர்கட்கு அறிவு பற்றிய இயங்கியற் பொருள்முதல்வாதக் கொள்கையிற் பயிற்றுவிக்க வேண்டியுள்ளது.

.)

(தோழர் மாஓ சேதுங்கின் நெறிப்படுத்தலின் கீழ் வரையப்பட்ட “நமது தற்போதைய கிராமப்புறப் பணிகளிலுள்ள சில பிரச்சனைகள் பற்றிச் சீனக் கம்யூனிஸ்ற் கட்சி மத்திய குழுவின் வரைவுத் தீர்மானம்” எனும் ஆவணத்தினின்று பெறப்பட்ட பகுதி. இப் பகுதியைத் தோழர் மாஓ சேதுங் எழுதியிருந்தார்

66 thoughts on “சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? :மாஓ சேதுங்”

 1. அடக்கியொடுக்கப்பட்டுள்ள > அல்லல்பட்டுள்ள > எம்மக்களினதும் >உலகமக்களினதும் விடிவுக்காய்>சரியான கருத்து >நடைமுறை வேலைமுறை நோக்கி> புத்தாணடில் முன்னேறுவோம். கடந்தகாலத்தின் பிழையானவற்றை நிராகரித்து. சரியானவற்றை உள்வாங்கி அடக்கியொடுக்கப்படும் மக்களுக்கு எம்மால் ஆனதை செயவோம்

 2. வெகுஜன புரட்சிகர மார்க்கத்தில் மக்களை அணிதிரட்டிட மக்கள் அறிவு மயப்படுத்தப்பட வேண்டும்.

 3. மார்க்ஸ், லெனின், மாவோ போன்றவர்களின் சித்தாந்தம் மொழிபெயர்ப்பினூடாகவோ அல்லது புரிந்துகொள்ளப்படுவதின் சிந்தனையூடாவோ பரந்துபட்ட மக்கள் படிப்பதற்கு ஒரு கடினத்தன்மை இருக்கிறது. எளிமைப் படுத்தப்பட்டு சகலரும் புரிந்து கொள்ளும்வகையில் உதாரணங்களுடாக எழுதினால் பரந்துபட்ட மக்களை சென்றடைய ஏதுவாக அமையும் என்பது என் கருத்து.

  1. சில சொற்கள், மார்க்சியத்தை உள்வாங்காமல் விளங்கக் கடினமானவை.
   சோசலிசம் என்றால் என்ன, கம்யூனிசம் என்றால் என்ன, வர்க்கம் என்றால் என்ன, வர்க்கப் போராட்டம் என்றால் என்ன என்பவற்றில் தொடங்கி, எளிய கட்டுரைகளை முதலில் படிப்பது நல்லது. (நா. சண்முகதாசன் எழுதிய ஒரு சிறு நூல் (மார்க்சிசம் என்றால் என்ன) 1960களில் வந்தது. அருமையான நூல்).
   நூல் வடிவு பெறாத எளிய கட்டுரைகள் உள்ளன.
   தமிழாக்கங்களில் உள்ள ஒரு சிக்கல், அவை மூலத்திலிருந்து விலகாமல் எவ்வாறு எளிமைப்படத் தமிழாக்கப் படலாம் என்பதாகும்.
   இக் கட்டுரையின் அடிப்படையில் எளிமையான விளக்கக் கட்டுரை ஒன்று இயலுமானது.

 4. கருத்து மக்கள பற்றீக் கொண்டால் சக்தியாக உருவெடுக்கும்.என்ன சொல்கிறோம் அல்ல எப்படிச் சொல்கிறோம் என்பதில்தான் விளவுகள்.

  1. உங்கள் கருத்துக்களை இந்த இணையத் தளத்திற் பார்த்த அடிப்படையில் உறுதியாகக் கூறக் கூடிய ஒன்று: மாஓ சொல்லுகிற கருத்து உங்களைப் பற்றிக் கொள்ளும் ஆபத்து இல்லவே இல்லை.

 5. மாபெரும் தலைவனை தோழர் என்று அழைப்பதில் பெருமை கொள்கிறோம்.சேகுவேர +மாவோ போட்டோ அருமை.

 6. .”…எனவே, நமது தோழர்கள் தமது சிந்தனையைச் சரியான திசைப்படுத்தி விசாரித்தலிலுங் கற்றலிலும் அனுபவங்களைத் தொகுத்தலிலும் வல்லோராகிச் சிரமங்களை எதிர்கொண்டு தவறிழைத்தலைத் குறைத்துத் தமது வேலையைச் சிறப்பாகச் கெய்து சீனாவை உயர்வான வலிய சோசலிச நாடாகக் கட்டியெழுப்பி நமது மாபெரும் சர்வதேசக் கடமையை நிறைவுசெய்யுமுகமாக உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்படும் பரந்துபட்ட
  ——————————————————————————————————————————
  வெகுசனங்கட்கு உதவவும் நமது தோழர்கட்கு அறிவு பற்றிய இயங்கியற் பொருள்முதல்வாதக் கொள்கையிற் பயிற்றுவிக்க வேண்டியுள்ளது. ”

  பாட்டாளி வர்க்கத்தின் ஈடு இணையற்ற தலைவன் நம் தோழர் மாவோ .

  1. //உலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்படும் மக்கள்//  இதில் திபெத்தியரையும் அடக்குகின்றீா்களா அல்லது???

   1. All the chinese communist think MAO as god. So how can he do opperession. NO, Thebet is against a Communism and they are terroist, Also China and Mao only help the world for communism and don’t go to other countries for their own interest.

    So why they are not helping Tamils? No China has cahanged colour now no Mao. If Mao there they would have helped Tamils. Total Rubbish. Don’t hang on to theories outdated. Give people the rights they deserve bring democracy where parliament have say. People has already rejected all over the world for communism. Give Tibetians their righs due.

 7. ‘எதிர்மறையின் எதிர்மறை’ [NEGATION of NEGATION ] என்கிற கருத்துருவம் ஒன்று உண்டு. தோழர் மாஒ சேதுங்கின் ‘முரண்பாடுகள் பற்றி..’ என்கிற கருத்தியலின் அடிப்படையே இங்கிருந்துதான் வருகிறது. அதை சரிவர புரிந்து கொண்டாலே , புவிசார் அரசியலையும், சமூக உறவுகளையும் , சந்தை அபகரிப்பிற்காக யுத்தம் செய்யும் ஏகாதிபத்தியங்களையும் இனங் கண்டு கொள்ளலாம். ஈழ தேசிய விடுதலைப் போராட்டத்தை, பிராந்திய வல்லரசுச் சக்தி கையாண்ட விதமும், அதன் தொடர்ச்சியாக உருவான இலங்கை-இந்திய ஒப்பந்தமும்,பின்னர் இந்திய மேலாதிக்கத்திற்கும் மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்குமிடையே நடந்த முரண்பாட்டு மோதல்களின் விளைவாக , சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதும், இறுதிப் போர் ஆரம்பித்தவுடன் சீனா உள் நுழைந்ததும் , முடிவாக , முரண்பட்ட ஏகாதிபத்தியச் சக்திகள் ஒன்று சேர்ந்து அப்போராட்டத்தை அழித்ததும் , மாவோவின் முரண்பாட்டுத் தத்துவத்தின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டியதொன்று.

  1. ஆரம்பிச்சிட்டாங்கப்பா, ஆமா வைகைப் புயல் மாதிரி நீங்களூம் கலைஞ்ருக்கு ஆதரவாய் இறங்கி பெரியார் பற்றீப் பேசுங்கள்.பெரியாரே மாவோ வை விட யதார்த்தவாதி.கலைஞ்ரிடம் இல்லாத எதை இந்த சீனா நாட்டு டிக்டேட்டர் மாவோவிடம் கண்டீர்கள் மாறன்?

 8. உலகில் மகிந்தர் சக்திமிக்க மனிதரா? வாக்கெடுப்பு! – ரைம்ஸ் மகசீன்

  உலகில் சக்திமிக்க மனிதர்களில் மகிந்தரும் ஒருவர் எனத் தெரிவாகும் கருத்துக்கணிப்பு ஒன்று ரைம்ஸ் மகசீனால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள மனிதர்கள் வாக்களிப்பதன் மூலம் ஒருவரைத் தேர்ந்து எடுக்க அந்த இணையம் முடிவு எடுத்துள்ளது. அதனை பொதுமக்களின் கவனத்துக்கும் அது விட்டுள்ளது. மகிந்தரை ஆதரித்து சுமார் 6000 வாக்குகள் இடப்பட்டுள்ள நிலையில், எதிர்த்து சுமார் 2001 வாக்குகள் இடப்பட்டுள்ளது. இதே நிலை நீடிக்குமானால் மகிந்தர் வெற்றி பெறும் நிலை தோன்றலாம். எனவே தமிழர்கள் உடனே செயல்படவேண்டிய நிலை தற்போது தோன்றியுள்ளது.

  கீழ் காணும் முகவரியை அழுத்தி உங்கள் வாக்குகளை பதிவுசெய்து கொள்ளுங்கள். அதன் மூலம் உங்களுக்கு மகிந்த ராஜபக்ஷவை பிடிக்கவில்லை என்றால் அதற்கான வாக்குகளை நீங்கள் போடலாம்.

  http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.

 9. கேட்க நல்லாக இருக்கும் தத்துவம்
  நடைமுறையில் புளித்திடும் வித்தகம்.

  மாகோவின் வாரிசுகள்தான் இன்றைய எழை ஆபிரிக்க ஆசிய நாடுகளைச்
  சுரண்டிக் கொண்டு இருக்கிறனர். சமத்துவ வாதங்கள் முதலாளித்துவத்திடம்
  தோற்றுக் கொண்டே இருக்கின்றது. தனிமனித பயங்கரம்தான் அதன் முகமாக இருந்து இருக்கிறது.
  மாகோவின் தற்காலிகப் பின்னடைவும் ஈழத்தின் தற்காலிகப் பின்னடைவு போலத்தான்.
  இசங்கள் எல்லாம் ஏட்டுச் சுரக்காய் என்பதும்இ எப்படி வாழவேண்டும் என்பதை நாங்கள்
  சுயமாகச் சிந்திக்க வேண்டும் என்பதும் யதார்த்தம் தரும் பாடம்.

  1. dear norrway
   Thamil thessiyam ennum poosanikk kayai samaiththu suwaththathan karanaththinal thmilargal ennum kasstappaduwathu ungalukku theriyum endr ninaikkindran

  2. //சுயமாகச் சிந்திக்க வேண்டும்// சுய சிந்தனை என்றால் என்ன என்பதனையும் அதனை நீங்கள் எப்படி பெற்றுக் கொண்டீர்கள் என்று கூறினால் நன்று. உங்கள் சுய சிந்தனையில்? சமூகத்தின் பங்கு என்ற ஒன்றும் ஏதோ ஒரு இசமாக இருக்கும்.

 10. தமிழ் மாறன், உங்கள் கருணைநிதி போல் 175 ,000 கோடி ரூபாய்களை ,மாவோ விழுங்கவில்லையே.?

  1. மாவோ அவர்களால் கொல்லப்பட்ட மக்கள் எண்ணீக்கையை கணக்கெடுத்துள்ளீர்கள் போலுள்ளது மாறன்.தன்னை படிக்காதவர்கள் தனது கருத்தை ஏற்காதவர்கள் என்றூ மாவோ படைகள் மகிந்தா படைகளாக வேட்டையாடிய மக்கள் எண்ணீக்கை மிலிலியனுக்கு மேல்.இன்றூம் சீனாவில் மனித உரிமைகள் மலிவு விலைக் கடைகள்தான்.எதைச் சொன்னாலும் இந்தியாவில் சனநாயகம் இருக்கிறது.தமிழகத்தில் கலைஞ்ரின் ஆட்சி நல்லாட்சிதான் என்பதை இந்தத் தேர்தல் சொல்லப் போகிறது.

 11. ஒடுக்கப்ப்பட்டவனுக்குத்தான் கம்யூனிசிய தத்துவங்கள் புளிச்சலில் இருந்து ஏவறை விடுபவனுக்கல்ல.

  1. கம்யூனிச தத்துவங்களும் இறுதியில் ஒடுக்கத்தான் பயன்படுத்தப்படுகின்றது.பெயிங் நகரின் பிரதான வீதிகளில் துவிச்சக்கர வண்டி மட்டுமே ஓடுவதாக சிலா் கனவு காண்கின்றார்கள் ஆனால் புதிய € 550.000 பெறுமதியான பெராரி காரும் ஓடுகின்றது என்பதை அறியமாட்டார்கள்.
   இந்திய மாவோஸ்ட்டுகள் கொன்றது 100 அப்பாவி ஏழை பொலிஸ்காரா்களை அதனால் அடையப்போகும் பலன்தான் என்ன??

   1. கம்யூனிஸ்ட் தத்துவங்கள் என்ன சொல்லுகிறது குமார்? தொழிலாளிக்கு விவசாயிக்கு உழைப்புக்கேற்ப ஊதியம் முதாலித்துவத்தின் காலவதியாகிப் போன லாபநோக்கு அரசியல் முறைகளை வீழ்த்தி இந்த தொழிலாளிவர்கம்-உழைப்பாளிவர்க்கம் இந்த உலகத்தை சொந்தமாக்கிறது தவறுஎன்று கருதுகிறீர்களா?

    அல்லது அரைமில்லியனுக்கும் பெறுமதியான யூரோவில் கார் ஓடுகிறது.ஆதலினால் சீனத்தொழிலாளிவர்கம் தமது வரலாற்றுக்கு-
    போராட்டதிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு குந்தியிருந்துவிடும் என கருதுகிறீர்ரா?

    கலைந்துபோன கலைக்கப்பட்ட சோவியத்யூனியன் மக்கள் நிரந்தரமாக கலைக்கப்பட்டவர்களாகி எந்த எழுச்சிகளையும் இனிவரும் காலங்களில் செய்யாது முதாலித்துவதிற்கும் இந்த ஏகாதிபத்தியங்களுக்கு பின்னால் தொடர்ந்திடுவார்கள் என உமது கம்யூனிஸமறுப்பு கொள்கை அறுவுறுத்துகிறதா?

    கம்யூனிஸநாடுகளில் தவறுநடந்துவிட என்று நான் சொல்ல வில்லை. எப்படியான இக்காட்டான நிலையில் அந்த புரட்சியை செய்தார்கள் என்பதை தாங்கள் சிற்றறிவைக் கொண்டு ஆராய முற்படவேண்டும்.
    மாவோவுக்கு முதல் சீனா என்னநிலையில் இருந்தது? போல்சேவிக்குகள் ஏன்? இந்த அக்டோபர் புரட்சியை உலகத்திற்கு செய்துகாட்டினார்கள். அந்த புரட்சியை செய்வதற்கு அவர்களுக்கு என்ன புறநிலைக்காரணிகள் உந்தித்தள்ளியது என்பவற்றை ஆய்வுக்குட்படுத்துவதே அறிவைதேடுவதற்கான வழி

    அதைவிட்டு “ஏதோ ஒருவழி பிறக்கும்” கம்யூனிஸம் உடந்த கப்பல்
    போல் கரைதட்டிவிட்டது போன்ற தர்க்கங்கள் குருவிதலை மண்டையர்களுக்கே பொருந்துவை குமார்.
    நான் ஏன் கம்யூனிஸவிரோதியானேன்? என்பதைப் பற்றி உங்களுக்கு அறிந்த செய்தியிருந்தால் கூறுங்கள் நாம் அறிய ஆவலாக உள்ளோம்.

    1. சந்திரன் ராசா,
     நான் கம்யூனிச விரோதியும் இல்லை இந்த கொடிய முதலாளித்துவ அடிவருடியும் இல்லை.யதார்த்தத்தை அவதானிப்பவன் அதற்கேற்று வாழ முற்படுகிறேன்.கம்யூனிச புரட்சிகளை 
      நம்பி ஏமாந்தவா்களில் நானும் ஒருவன் கம்யூனிசத்தை அல்ல,அதாவது அந்த அற்புதமான தத்துவத்தை கையில் எடுத்த தலைமைகளால் அத்தனை மக்கள் கூட்டங்களும் இறுதியில் ஏமாற்றப்பட்டதையும், படுவதையுமே நான்பார்க்கிறேன் கம்யூனிசம் ஏன் எங்குமே சுபீட்சத்தை கண்டதில்லை?? இதற்கு நீங்கள் ஏகாதிபத்தியத்தின் சதியே காரணம் எனலாம்,அப்படி ஏகாதிபத்தியம் பலமாக உள்ளதென்றால் கம்யூனிசம் மக்கள் கூட்டங்களை வென்றெடுப்பதில் தோல்வி கண்டுவிட்டது என்றே நான் எண்ணுகிறேன்.

     முதலாளி இல்லாமல் தொழிலாளி இல்லை தொழிலாளி இல்லாமல் முதலாளி இல்லை மூலதனம் இல்லாமல் இவா்கள் இருவருமே இல்லை ஆக இன்றய உலகில் இவை மூன்றும் இணைந்தால்தான் வழா்ச்சி,நிலைப்பு.தொழிலாளி தனக்கு கிடைக்கவேண்டிய நியாயமான கூலிக்காக முதலாளியையும் முதலையும் அகற்றுவதென்பது தேவையற்றது ஆதலால் போராடியே பெறவேண்டும் அதற்கு இன்று கம்யூனிசம் என்ற தத்துவம் தேவையில்லை என்பதே எனது கருத்து. அதற்காக அது மறுபடியும் உயிர் பெறாது என்று எண்ணவில்லை ஆனால் அது அருகில் இல்லை.

     ரஸ்சிய புரட்சியின் புறநிலைக்காரணிகளில் ஒரளவேனும் மக்ஸ்சிம் கோர்க்கியின் நாவல்களிலுந்து படித்ததாக ஞாபகம்.

     இன்று உலகை ஆள்பவா்கள் பல்தேசியக்கம்பனிகள்தான் இவைகளுக்கு தரகா்களாக அரசியல் தலைவா்கள் இயங்குகிறார்கள் இதில் அமெரிக்க சனாதிபதியும் அடக்கம். 

     மேலும் மேலும் கம்பனிகளின் எண்ணங்களையும் விருப்புக்களையும் நிறைவேற்றவே அரசியல் தலைமைகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன மக்களின் விருப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படுகின்றன இதனால் எங்குமே மக்கள் புரட்சிகள் விரைவில் வெடிக்கலாம் ஆனால் கம்யூனிசம் இடம் பிடிக்காது.

    2. ச.ராஜா! ஒரு சின்ன சந்தேகம். பொதுவுடமைநாடுகள்( கம்யூனிச நாடுகள்) முன்னர் இருந்ததாக குறிப்பிடுகிறீர்கள். நானறிந்த வகையில் பொதுவுடமை அல்லது கம்யூனிச நாடுகள் என்றும் இருந்ததில்லை. சோவியத்யூனியனும், கிழக்குஐரோப்பிய நாடுகளும் தம்மை சோசலிசநாடுகள்( சமதர்ம) என்றே அழைத்துக்கொண்டன. சோவியத்யூனியனின் அரசியலமைப்பும் சோசலிசகுடியரசுகளின் கூட்டமைப்பு என்றே குறிப்பிட்டிருந்தது. மாவோவின் சீனா புதியஜனநாயக மக்கள் குடியரசு என்றே அழைக்கப்பட்டது. வாத்தியாரே இதனை கணக்கில் எடுங்கள்.

 12. நல்ல குடும்ப ஆட்சி என்று சொல்லுங்கள்

 13. மாவோவின் வாரிசுகள்தான் மகிந்தாவின் ஆலோசகர்கள் இந்த இலட்சணத்தில்

 14. இந்த ஆள் மாவோ நிறையப் பேர் இற்க்க காரண்மாக இருந்தவர் என்ற் கருத்து ஒன்று உண்டு

 15. தமிழ் மக்களை படியுங்கள் அங்கு உங்களுக்கு சமத்துவ சமுதாயம் ஒன்றை எப்படி கட்டி எழுப்புவது என்பது தெரியவரும். லெனின் குறித்தும் மாவோ குறித்தும் பின்பற்றுதலை ஈழச் சமுதாயத்தின் விடுதலையில் செய்ய முடியாது. லெனின் மாவோ உலகசமுதாயத்தின் விடுதலையில் ஆற்றிய பங்கு என்ன? அவர்களால் எத்தனை உலகநாடுகள், சமுதாயங்கள் விடுதலை பெற்றன? ஒருவேளை மோசமான மன்னர் ஆட்சியில் அகப் பட்டிருந்த மக்களை அன்றைய அடக்குமுறைச் சூழலில் இருந்து விடுவித்தார்கள். அவர்களின் கம்யுனிச சித்தாந்தம் சதா காலத்திற்கும் மக்களை அடிமைத்தளையில் காக்கும் பொறிமுறை ஒன்றை கொண்டிருக்கிறதா? எனவே நான் கேட்பதெல்லாம் சொல்லுவதெல்லாம் ஒன்றுதான் பிரதேச ரீதியாக ஊர் ஊராக ஈழத்தமிழர்களின் வாழ்வியலை படியுங்கள் அங்கு உங்களுக்கு புரட்சிகர வழிமுறை கிடைக்கும். பிரித்தானிய கல்விவழிச் சமுகமாகிய நாம் எதனையும் புத்ததகத்தை தூக்கி படிக்க வேண்டும் என நினைக்கிறோம் படித்து படித்து புரட்சி செய்யலாம் என நினைத்து ரொஸ்கி, மார்க்ஸ், லெனின் புத்தகங்களுடன் திரிவதன் மூலம் தத்துவங்கள் பேசி பேசியே புரட்சி பேசி, கடைசியில் ஈழப் புரட்சியை பலர் என்னவென்று மறந்து விட்டார்கள். ஈழத்தை அதன் மக்களை படியுங்கள் புத்தகங்களை மாத்திரம் தூக்கி அல்ல பரந்த்துபட மக்களிடையே பிரயோசனமான வேலைத்திட்டங்களுடன் சென்று………………………

  1. சிலர் அழுவார்.சிலர் சிரிப்பார். நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன். இந்த சினிமா பாடல் வரிகள் உங்கள் பின்னூட்டத்தை பார்த்ததும் வந்து தொலைக்கின்றது. சமூகத்தை படியுங்கள் என்று சமூக அக்கறையோடு பேசுகின்ற நீங்கள் எவ்வாறு மாக்சிசம் என்றால் என்ன? அது பேசுகின்ற பொருள்முதல்வாதம் என்றால் என்ன? சமூகவிஞ்ஞானத்தில் மாக்ஸிசத்தின் பங்கு என்ன என்ற பாலபாடத்தைத்தானும் தெரிந்துகொள்ளாமல், அறிந்துகொள்ள முயற்சிக்காமலும்( உங்கள் எழுத்திலிருந்து) நிராகரிக்ககின்ற அறிவிலித்தனத்தை என்ன்வென்பது? மாக்ஸிசம் என்றால் என்னவென்று தெரிந்துகொண்டு எதிர்வினையாற்றுங்கள். அல்லது தமிழ்மக்கள், மக்கள் என்று இனவியாபாரத்தை தொடருங்கள்.

   1. சமூக அக்கறக்கு மார்க்சியம் தேவையில்லை சைவம் தெரிந்தாலே போதும்.அப்பரும்,சம்பந்தரும்,சுந்தரரும் நமக்கு சொல்லி வைத்திருப்பதே போதும்.

    1. அப்பருமிசுந்தரரும் கூடதேவையில்லை. அவர்கள் வீட்டு நாய்க்குட்டியின் ஞானமே உங்களுக்கு போதுமானது.

 16. நல்லது தேனீ, எனது சிற்றறிவுக்கு மார்க்ஸ் பற்றி அறிய முடியவில்லை. 1980 களில் ஈழப் போராட்ட அமைப்புகளால் விநியோகிக்கப்பட்ட மார்க்ஸின் புத்தகங்களை படித்திருக்கிறேன். மார்க்ஸின் தமிழ் மொழிபெயர்ப்புகள் USSR இன் இலங்கை ரஷ்ய தூதரகத்தால் வெளியிடப்பட்ட புத்தகங்களும் எனது கையில் தவழ்ந்தவைதான். உண்மையைச்சொன்னால் என்னால் விளங்க முடியாதவை அவை. என்னை பொறுத்தவரை இப்புத்தகங்கள் உழைக்கும் மக்களின் குழந்தைகளின் மலக் கழிவை துடைக்கத்தான் இவை பயன்படும். கால் மார்க்ஸின் புத்தகங்களில் சிந்தனைகளில் இருந்து நீங்கள் கற்று கொண்டது என்ன? உலகம் சாதித்தது என்ன? யாரும் எதனையும் பேசலாம் நடைமுறையில் சமுக யதார்த்தத்துடன் ஒன்றிப் போகாத வரை எதனையும் சாதிக்க முடியாது. ஏழ்மை, வாழ்வுரிமை மறுப்பு, கால் மார்க்ஸ் பிறந்த இடத்திலும் சரி மார்க்சிசம் வளர்ந்த இடமாயினும் சரி சாதனைகள் என்ன? மார்க்சின் பொருள்முதல்வாதம் குறித்து எனக்கு தெரியாது. தெரியாததை கதைக்க வேண்டாம் என நான் வெளிப்படையாக கூறுகிறேன். இருக்க இவற்றை நன்றாக படித்தவர்கள் பற்றி கூறுகிறேன் 10 ரூபிளுக்கு ஒரு ருசியா சரக்கு (விபச்சாரம்) அடிக்கல்லாம் என்றான் ஒரு கோமினிஸ்ட் வழி ஈழத்து அகதி. 5 மார்க் பணத்துக்கு இப்பவும் கிழக்கு ஜேர்மன் பெட்டையள் வருவாகள் மச்சான் இது தான் மார்க்சிசம் வாழ்ந்த இடத்து நிலைமையும் அதனை கற்று கொண்டவர்களின் நிலைமையும். நிற்க எனது அயல் வீட்டுக்காரர் சுப்பிரமணியம் ரஷ்யாவில் லுமும்பா பலகலைகழகம் சென்று புலமைபரிசில் பெற்று கல்வி கற்றவர் மார்க்சின் தத்துவம் குறித்து பாரிய தத்துவ விளக்கங் கொடுப்பார்.பின்னாளில் ஜேவிபி அமைப்பின் தத்துவார்த்தப் பிரிவில் இருந்தவர் தற்போது அவரிடம் சென்று கேட்டால் ஒரு தூசனம் சொல்லி விளக்கம் கொடுப்பார். பொருளாதார சமபங்கீடு மூலம் சமுக முனேற்றம் குறித்த பார்வை என்னிடம் உண்டு. அது சரி மார்க்சின் பொருண்மிய தத்துவார்த்தங்கள் எங்களது சமுக பொருண்மிய மேம்பாட்டில் உதவும் வழிமுறையை அமுல் படுத்த உடனடியாக உழையுங்கள் முடியுமானால் நானும் தோழ் கொடுக்கிறேன். கால்மார்க்சின் தத்துவங்களை கரைத்து குடித்த அறிவாளி நீங்கள் அழுவதா ? சிரிப்பதா? என ஏன் தெரியாமல் நிற்கிறீர்கள் யாரும் பார்த்தால் படித்துகெட்ட லூசு என நினைக்க கூடும்.

  1. நாங்கள் சாப்பாட்டை நிலத்தில் இருந்து சாப்பிடுபவர்கள்,கோயிலுக்கு குளீத்து விட்டு செல்பவர்கள் அங்கு சென்றூம் காலைக் கழுவாமல் கோயிலுக்குள் நாங்கள் காலை வைப்பதில்லை அப்படியான நாம் இப்படியாக யோசிக்கிறோம் என்றால் நம் சிந்தனைகளீல் சேறூ விழுந்திருப்பதுதான் காரணம், இல்லையா ராகவன்.

    1. பெண்கள தெய்வமாக மதிக்கும் தமிழ்ப் பண்பாட்டின் மேன்மையை அன்பு நண்பர் ராகவன் மிதித்ததால் இங்கே நெருப்பு பற்றீ எரிகிறது.யாரும் சாதியைப் பற்றீ இங்கே பேசவே இல்லையே அப்ரோஜின்.தமிழ்ச்சாதியின் பெருமையை இகழ்ந்து விடமுடியாது நம் பல்மே நாம் தமிழர் என்பதுதான்.

  2. இடதுசாரியத்திற்கெதிரான காழ்ப்பும், மாக்ஸிசவெறுப்பும் உங்கள் சிந்தனையில் ஊறியிருப்பதனை உங்கள் எழுத்துக்களில் எப்போதுமே கண்டுவந்துள்ளேன். மற்றவர்களும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே கேள்வி எழுப்பினேன். வெளிப்படையாகவே உமிழ்ந்திருக்கின்றீர்கள். அதற்கு முதலில் நன்றி. இரண்டு விடயங்கள் முக்கியமானவை. உங்களிடம் இருக்கின்ற மாக்சிச இடதுசாரிய காழ்ப்புக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு அடிப்படையும் வரலாறும் இருக்கின்றது ஆதலால் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. இலங்கையின் சுதந்திரத்தின் பின் தமிழ்தேசியம் பேசிய யாழ்நிலப்பிரபுத்துவ மேலாதிக்கசக்திகள் திராவிட இயக்கங்களிடமிருந்த சாதிமறுப்பு, இந்துவஎதிர்ப்பு, கடவுள்மறுப்பு போன்ற முற்போக்கான அம்சங்களை கவனமாக தவிர்த்துவிட்டே மிகுதியை கடன்வாங்கி தமிழ்தேசியம் பேசினர். இவர்கள் ஈழத்தில் பாரதியைக்கூட இருட்டடிப்புசெய்தார்கள். பாரதிதாசனையே தூக்கிப்பிடித்தார்கள். “பாரதி சாதிஒழிப்பை எழுதி எல்லா சாதிப்பயல்களுடனும் சேர்ந்துதிரிகின்ற பயல்” என்ற பார்ப்பனிய சிந்தனையை பிரதியெடுத்தார்கள்.மறுபுறம் இடதுசாரிகள் விவசாயக்கூலிகளை அணிதிரட்டினார்கள். தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு இழைக்கப்பட்ட எல்லாக்கொடுமைகளுக்கும் எதிராக முற்போக்குசிந்தனைகொண்டோரையும், ஒடுக்கப்பட்டமக்களையும் அணிதிரட்டிபோராடினார்கள். சமகல்விக்காக, ஆலய அனுமதிக்காக இடதுசாரிகள் நடத்தியபோராட்டங்கள் தான் யாழ்ப்பாணத்தில் சாதியஒடுக்குமுறையை நெகிழச்செய்தது. இடதுசாரிகளின் போராட்டங்கள்தான் தோட்டத்திலே வேலைசெய்கின்ற அடிமைசாதியினர்க்கு கூலியாக பணம் கொடுக்கின்ற முறையை தோற்றுவித்தது. தனிநாட்டுக்கோரிக்கையின் தந்தை நவரத்தினம் போன்றோர் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆலயநுழைவுக்கு எதிராக செயல்பட்டவர்கள். இந்தக்காலத்திலிருந்து சிவப்புபுத்தகத்தை பார்ர்த்தாலே யாழ்மேட்டுக்குடிக்கு எல்லாம் பற்றி எரியும். இடதுசாரிய இயக்கங்களிருந்த உயர்சாதியை சேர்ந்தவர்களுக்கு பெண்கொடுக்க மறுத்தார்கள். இளம்பருவக்கோளாறால் மாக்ஸிச அரசியலை கற்றுக்கொள்ள ஆர்வம்காட்டிய மாணவர்கள் ” இதையெல்லாம் படித்துவிட்டு கண்டசாதிக்காரனோடையெல்லாம் நீ திரிய ஊர்ச்சனம் எங்களை தள்ளிவக்கப்போகுது” என்று பெற்றோர் நல்வழி(?) படுத்தினார்கள். சுருங்கக்கூறின் மாக்சிசம், இடதுசாரியம் ஒடுக்கப்பட்டசாதியினருடன் சம்பந்தப்பட்டதாகவே கருதப்பட்டது. எஙகப்பன் குதிருக்குள் இல்லை என்று வேடமிட்டாலும் சிலசமயம் எலி தொப்பிக்குள் இருந்து எட்டிப்பார்க்கின்றது. எண்பதுகளில் தேசிய அரசியலில் இருந்த இடதுசாரிய சார்புள்ளமுற்போக்குசக்திகள் முற்போக்கான அரசியலை தேடிப்படிக்கின்ற ஒரு தேடலை குறிப்பாக மாணவர்களிடையே உருவாக்கினார்கள். அதில் சிலர் படிப்பதை போல நடித்தார்கள். (பாம்பு தின்னுகின்ற ஊருக்குப்போனால் நடுமுறி நமக்கு என்ற பிழைப்புவாதம்) அவ்வாறு நடிக்கின்றார்கள் என்றுதான் கருதியிருந்தேன். அதனத்தான் உஙகள் வாக்குமூலமும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. சும்மா இருக்குமா யாழ்மேட்டுக்குடி ? உடனே புலிகளை பிடித்து திருவள்ளுவரை படியுங்கள். தமிழிலே எல்லாமும் இருக்கின்றது. எதற்காக மேலைநாட்டவரை படித்து தறிகெட்டு திரியவேண்டும். இந்துசமய நெறிகளை கடைப்பிடியுங்கள் என்றொரு பிரசுரத்தை வெளியிட்டார்கள். ( இதுதான் கிட்டத்தட்ட திரு. ராகவன் சொல்வது) புலிகளுடன் முரண்பட்டு ஒதுங்கிய சில பல்கலைக்கழக மாணவர்களினால் புலிகளின் தொடர்பு தெரியவந்தது. ஏற்கனவே சிவப்பு புத்தகத்தை பறித்தெறிந்த பிரபாகரனை ஐயர் பதிவுசெய்திருக்கின்றார். இன்று உலகில் உள்ள வலதுசாரிய, பெருமுதலாளிய சிந்தனையாளர்கள் எல்லாம் மாக்சின் உற்பத்திஉறவுமுறை, அதனைபாதுகாப்பதற்கான கருத்தியல், கல்விமுறை போன்ற சமூககட்டுமானங்களை பற்றிய ஆய்வுகளை மறுதலிப்பதில்லை. மாறாக சிலசமயங்களில் தங்களுக்கு தேவையான விதத்தில் மாக்ஸிசம் என்று கூறாமல் பயன்படுத்திக்கொள்கின்றனர். அண்மைய பொருளாதாரநெருக்கடிகளின் போது அதிகமாகவே மாக்ஸ் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டார். மாக்ஸிச எதிர்ப்பை அவர்கள் மிக புத்திசாலித்தனமாகவே செய்கின்றார்கள். அது பெருமுதலாளிகளின் வாழ்வியலின் அம்சம். நம்மவர்கள் தமது சாதிய பழங்குடித்தன்மையிலிருந்தே வெறுக்கின்றார்கள். இந்த சிந்தனைமுறைதான் முள்ளிவாய்க்கால்வரை கொண்டுசென்றது என்பதையும் துயருத்துடன் மீளவும் பதிவுசெய்யவேண்டியிருக்கின்றது.

   1. திராவிடம் எனப் பேசும் தேவை தமிழ்நாட்டில் இருந்தது ஏனெனில் தெலுங்கும்,கன்னடமும்,மலையாளமும் தமிழ்கத்து சென்னையில் ஆளப்பட்டது அடுத்து பிராமண ஆதிக்கம் இருந்தது என்பதால் கடவுள் மறூப்பு அவசியமாயிற்றூ.ஆனால் இலங்கையில் தமிழ் இனம் தன் தனித்துவத்திற்காக போராடவேண்டிய தேவை இருந்தது அதனால் கடவுள் மறூப்பு எனும் போலி முகமூடிக்கு தேவை இருக்கவில்லை.அடுத்து அறம் வலியுறூத்தும் வள்ளூவம் அன்பைப் பேசும் சைவம் இது இரண்டும் கலந்த மார்க்ஸ்ஸீயம்.நம்மிடம் எது இல்லை.பெரியோரே தாய்மாரே மார்க்ஸீயம் உயர்ந்ததே அதை விடச் சிறந்தது சைவம்.

    1. ஐயா! தமிழ்க்கடவுளே அரசன் அன்று கொல்வான்.தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்களே அது இதைத்தானா? சும்மா அறுத்துக்கொல்கிறீர்களே …அரோகரா…

     1. சுகந்தன்,
      நம் கோயில்கள் தேடி ஓபாமாவே வருகிறார்.சார்கோசி தீபாவளீ கொண்டாடுகிறார்.கம்ரென் சைவமாகவே மாறீ விட்டார் நீங்கள் மட்டும்தான் ஜேகோவா புத்தகங்களே வாழ்க்கை என்றூ நிற்கிறீர்கள்.என்ன செய்வது சிவனுக்கு பிறந்தது அப்பனுக்கே ஓம் எனும் மந்திரத்தை உபதேசித்தது ஆனால் எங்கட சிவக்கொழுந்துக்கு பிறந்தது காப்புலி மாதிரி திரியேல்லயா அது மாதிரிதான்.

 17. திரு.ராகவன் உங்களுக்கு ஏன் அளவுக்கதிகமாக கோபங்கள் வருகிறது?. அதை நிறுத்துங்கள். உங்கள் எழுத்தில் கருத்தில் அதுவே காணக் கிடக்கிறது.

  போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். அந்த பழியை நானே ஏற்கிறேன் என்பதாகத்தான் எமது இந்து தத்துவங்கள் சொல்லுகின்றன. அது இல்லை நான் சொல்வதுதான் சரியானது இல்லையேல் உன்னையும் போட்டுதள்ளு
  வேன் என்பது அறிவானது இல்லை என்பது மட்டுமல்ல அசட்டுதனமாக முற்றுமுழு
  தாக ஒருயினத்தை தம்மிடத்தில் இருந்து அப்புறப்படுத்துவத்துவதற்கும் வழிவகுக்கும். பலஇனங்கள் போராடிபோராடி அழிந்து போன வரலாறுகள் நிறையவே இருக்கின்றன
  .கடைசி உதாரணம் பயாப்பரா இனம். செவ்விந்திய இனம் தமது சுவடுகள் கலைந்து
  வேறு இனமாக மாறிக் கொண்டிருக்கிறது. இது உலகில் நடக்கிற வர்க்கப்போராட்டத்தின் விளைவே.

  இங்கு நாம்தமிழ்தான் எழுதிக்கொண்டிருக்கும். இது ஒரு இனத்தில் வந்த அக்கறையேயொழிய வேறுயினத்தின் அக்கறைபற்றியது அல்ல என்பதை தாங்கள் அறிவீர்கள்.இதை எம்மால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அது போக உங்களுக்கு மட்டும்தான் இனத்திற்கான அக்கறையிருக்கிறது மாக்ஸியவாதிகள் லூசுகள் போன்ற உங்கள் சித்தப்பிரமையை உடனடியாக சுகப்படுத்துங்கள். ஒருகாலம் உங்களுக்கும் ஆரவாரம் செய்துதான். இன்று இப்படியில்லை. மாக்சியத்தை நிராகரித்து முதாலித்தவம் விதைத்துவிட்ட வீரதீரசெயல்களில் கால்லூன்றி அதைனையும் கடந்து குரங்கின் கைபூமாலையாக காட்சிதருகிறீர்கள்.
  இனி என்னதேவையிருக்கிறது தங்களுக்கு மாக்ஸிய தேடல்?. மிகுதியாக இருப்பது ஒன்றுதான் தொழிலாளவர்க்கத்திடம் நம்பிக்கை இழந்து ஐரோப்பிய-அமெரிக்க வல்லசுகளிடம் சரணாகதியடைவதான்.

  சரணடையும்போது அமெரிக்க-ஐரோப்பிய தொழிலாளிவர்கத்திடம் சரணடையுங்கள் என்பதே தமிழினத்தில்லுள்ள மாக்ஸியவாதிகளின் வேண்டுகோள்.

  1. மார்க்ஸீயம்தானே சந்திரன் ஜேவிபி இனரும் பேசினார்கள்? சிங்களத்து வர்க்கப் போராட்டவாதிகள் ஏன் தமிழ்த் தொழிலாள இனம் முள்ளீவாய்க்காலில் கொல்லப்பட்டபோது அதை வெடி கொழுத்திக் கொண்டாடியது.பிரபாகரன்,சூசை,தமிழ்ச்செல்வன்,நடேசன்,ரமேஸ் என்றூ கொல்லப்பட்டோரெல்லாம் மகிந்தா வகையறாக்களா? தொழிலாள வர்க்கம்தானே? சிங்களத்தில் மார்க்ஸீயம் பேசுவோரெல்லாம் தமிழரைக் கொன்றதை கொண்டாடினரே ஏன்?

   1. உங்கள் கேள்விக்கு எப்படி பதில் சொன்னால் உகந்ததாக இருக்கும்?
    ஜேவிபி யினர் மாக்ஸியம் பேசினார்கள் என்றால் புலிகளின் தத்துவார்த்த பேராசியர் அன்ரன் பாலசிங்கம் பேசிய “தமிழீழசோசலிசத்தை நோக்கி” என்கிற தத்துவவார்த்தை ஏன் சுலபமாக மறந்துவிடுகிறீர்கள்?
    பெளவுத்தன் என்றால் அன்புதான் இன்பஊற்று என்று சொல்லவேண்டுமா?

    ஒருகிறீத்தவன் என்றால் ஒன்று துவைப்பதற்கு ஒன்று உடுப்பதற்கு என்று போதித்த கிறீஸ்தவநாதர் எங்கே? இதை போதிக்கிற பாதிரிகளின் அலுமாரிகள்? இவர்கள் செய்யும் லீலைகள் எப்படிபட்டவை?. பெங்குளுர்சாமிதான்(மில்லினர்) நடிகையுடன் அடித்துவிட்ட கொட்டங்கள் தான் என்னவோ? திருப்பதியின் சொத்துக்களின் விபரம் என்னதான் என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? மடக்கியது போக வங்கியில்லுள்ள தங்கம் எத்தனை தொன்னென்பதை பற்றியயாவது அறிந்திருக்கிறீர்களா?

    இப்படியான சங்கதிகள் எல்லாம் எல்லா இடத்திலும் வியாபகமாக
    பரவியிருக்கும் போது இது ஏன்? மாக்ஸியத்தின் பெயரிலும் வந்து போகமாட்டாது என் கருதுகிறீர்கள்? இது இனியும் பலவடிவங்களில்
    வெளிப்பட்டே தீரும். நடந்துமுடிந்து விட்ட போராட்டங்கள் எல்லாம் வர்க்கப்போராட்டத்தின் வரலாறே என்றார் இந்த மனிதவரலாற்று ஆய்வாளர் கால்மாக்ஸ். அடக்கிறவனுக்கும் அடக்கப்படுகிறவனுக்கும் இடையில் நடக்கிற போராட்டம் தான். இது எங்கும் மென்மையாக எழுதப்படவில்லை. தீயாலுத் இரத்தத்தாலும் எழுதப்பட்டடிருக்கிறது என்றார். இனியும் அப்படித்தான் எழுதப்படும் என்பதே எனது கருத்து. தொழிலாளிவர்கம் உலகத்தின் சமூகசத்தி இதை அரசியலாக மாற்றும் வரை இந்த நிலைதொடர்ந்தே செல்லும்.
    ஒரு தேனீக்கூட்டத்திற்கு ஒரு ராஜதேனீ இருப்பது போல் ஒரு எறுப்புக்கூட்டத்திற்கு கட்டளைஇடுவதற்கு ஒரு தலைமையிருப்பது போல் மனிதகுலத்திற்கு-உழைப்பாளிவர்க்கத்திற்கு ஒருசர்வதேச தொழிலாளவர்க்கட்சி. ஆயிரம்தடங்கல்கள் தாமதங்கள் பின்னடைவுகள் ஏற்பட்டபோதிலும்
    தனியுடமைக்கும் பொதுவுடைமைக்கும் இடையில் இருக்கிற சுவரை தகர்கக்கூடிய தத்துவார்த்த வல்லமையை பெற்றவர்கள்.

    குறிப்பு: போதியவரை இங்கு முள்ளிவாய்கால் நிகழ்வுகளை விவாதித்து விட்டோம். புலிகள் முள்ளிவாய்கால் மணணில் பொசுங்க வேண்டியது அவர்களின் விதி. அதைவிட்டால் அவர்களுக்கு வேறுபோக்கிடமில்லை. அவர்களின் அழிவு தமிழ்மக்களின் அழிவாக ஆங்கிலேய-தமிழரும்
    தமிழ்தேசியகூட்மைப்புமே கருதுகிறது.இது ஒருவர்க்கத்தின் தோல்வியல்ல.தமிழ்பாட்டாளிவர்க்கத்தின் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியே!

    1. இஸ்லாம் சமத்துவம் பற்றீப் பேசுகிறது ஆனால் அதே நேரம் பள்ளீவாசல்கள் பல பிரிவுகளாக இருக்கிறது.கிறீஸ்துவமும் இதே நோக்கிலானதே.ஆனால் சைவம் சரிநிகர் பேசுகிறது ஆனால் இதை நாம் ஏற்றூக் கொள்வதாக இல்லை.சந்திரன் ராசா நீங்கள் இதை ஸ்டார்பக்ஸீல் இருந்துதானே பதிந்தீர்கள் ஏனென்றால் அங்கே வயர்லெஸ் வசதி உண்டு.

 18. திரு.ராகவன் உங்களுடைய புலனாய்வு மூலம் கண்டுபிடித்தவை தமிழ்கூறும் நல்லுலகிற்கு பெரும்தொண்டாற்றக்கூடியவை என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. தமிழில் தோன்றிய சிவராம், இதயசந்திரன் ,அருஷ் போன்ற பேரறிவாளருடன் ஒப்பிடக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளீர்கள். ஏன் ஆறுமுகநாவலருடன் கூட குறிப்பிடப்படலாம். மாக்சிச புத்தகங்கள் எதற்கு பயன்படத்தகுந்தன என்ற உங்கள் ஆய்வு முடிபுகள் உங்கள் பாசாங்கை தோலுரித்துக்காட்டும் தன்மைகொண்டது. ஈ.பி.ஆர்.எல்.வ் இயக்கத்தின் அரசியல் தவறுகளுக்கு அப்பால் அவ்வியக்கத்தின் பெயரை ஈழத்துபள்ளர்விடுதலை முண்ணணி என்று புலிகளின் பினாமிகளினால் பரப்பப்பட்ட விஷமம் தற்செயலானதல்ல. (ஒரே கல்லில் இரண்டுமாங்காய்) யாழ் மேட்டுக்குடி சாதியமனசு எவ்வாறு ஏற்றுக்கொண்டதென்பதும் வரலாறு. சொந்தவீட்டுப்பெண்களை தவிர ஏனைய பெண்கள் தாங்கள் சுகிக்கவே பிறந்தவர்கள் என்ற நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க மனசு உங்கள் கிழக்கு ஐரோப்பியநாட்டு பெண்களை பற்றிய குறிப்பின் வெளியே தெரிகின்றது. இவைகள் எல்லாம் தமிழறிஞராக்கவல்லவை.

 19. //சிவராம், இதயசந்திரன் ,அருஷ் போன்ற பேரறிவாளருடன் ஒப்பிடக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளீர்கள். ஏன் ஆறுமுகநாவலருடன் கூட //
  அட பண்ணிநாயே சுகந்தன் உளர் அறிவு இவ்வளவா?
  இவரக்ளெல்லாம் மசிருகளா?
  ஏன்றரா இப்படிஉசிரை வாங்கிறீங்கள்.?
  செத்து; தொலையுங்கடா?

  உங்களைமாதிரி ஆட்களுக்க ராகவன் மெல்.

  1. தமிழ் அறீஞ்ரெல்லாம் பெண்கள தங்கள் போகப் பொருளாகவே நினைப்போர் எனும் சுகந்தன் கருத்துக் கண்டு குறூம் தங்கள் உணர்வோடு நானும் ஒத்துப் போகிறேன்.ஆறூமுக நாவலரோடு நீங்கள் ஒப்பிடுவோரெல்லாம் தங்கள் தகுதியில் தாழ்ந்தவரல்ல ஆனால் அவர்கள ஆறூமுக நாவலரோடு ஒப்பிடுதல் தகாது.

 20. சுகந்தன்! நீங்கள் எழுதியது சில பன்னாடைகளுக்கு புரியவில்லை. தமிழில் கொஞ்சம் “வீக்” காக இருப்பார்கள் போலிருக்கின்றது. என்ன ராகவன்சார்! ஆளையே காணோம். மாற்றுக்கருத்துக்களை விவாதிப்பதற்கான களம் தானே இது. தேனிக்கு உங்க மறுப்பை எடுத்துவிடுங்க. மாக்சிச தத்துவம் சாதித்து எதுவே இல்லை என்பது சிறுபிள்ளைத்தனமானது. நீங்க படிக்க நெறய இருக்கு சார்.

  1. இன்றய செய்தி:
    பிடல் காஸ்ற்றோ தனது நாட்டில் வெளிநாட்டுக்கம்பனிகளின் வருகைக்கான பாதையை திறந்து விட்டுள்ளார் இனி யாரும் அங்கே தொழில் பேட்டைகளை ஆரம்பிக்கலாம், இத்துடன் புரட்சி முடிவிற்கு வருகின்றது.
   இவ்வளவு காலமும் விபச்சாரம் ஒன்றே பிரதான வருமானமாக இருந்தது சில வேளை அந்த நிலை இனி மாறலாம்.

   1. கியூபா இவ்வளவு காலமும் விபசாரத்திலேயே தங்கியிருந்தது. என்ற கண்டுபிடிப்பு நோபல்பரிசுக்கு சிபார்சுசெய்யப்படக்கூடியது. கியூபபுரட்சி அதற்குப்பின்னே ஏற்பட்ட உலகமேவியக்கும் மருத்துவதுறையின் வளர்ச்சி இதையெல்லாம் தவிர்த்து நுண்ணுணர்ந்து விபசாரத்தை கண்டுபிடிக்கும் தமிழ்மனது நிச்சயமாக தமிழ்சமூகத்தை விடுவிக்கும் என்ற ந்ம்பிக்கை தரவல்லது. புதுமைப்பித்தனின் பொன்னகரம் போன்ற எந்த எழுத்துக்களும் யாரையும் சென்றடையவில்லை போலுள்ளது. கைம்பெண்களாக உடலை விற்றுபிழைப்பதை தவிர வேறுவாய்ப்புகளற்ற வடகிழக்கில் வாழ்கின்ற எமது சகோதரிகளின் கதைகள் நெஞ்சை அறுக்கின்றன. .எமது ஆணாதிக்க மனசு எந்த நாட்டிலும் விபச்சாரத்தை பார்க்கின்றது.

    1. இதில் குமாரின் அற்பஅறிவு தனமே! வெளிப்படுகிறது.இதை அறிவுக்கு உட்படுத்தி கதைப்பதை விட கேவலமான புத்தியென்றே கூறவேண்டும்.
     கீயூபாவின் சாதனைகள் வியக்கத்தக்கவை. கீயூபாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார தடையே என்பதை குமார்போன்ற சுள்ளான்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள். குதிரைக்கும்வெறி குதிரைக்காரனுக்கும் வெறி. விழுந்துமுறிந்து போய் படுக்கையில் கிடப்பவனுக்கு கஞ்சிஊத்த இருட்டுள் மறைந்து நின்று சதங்களை சம்பாதிக்கொண்டு வருகிறாளே அவள் மணைவி..

     இதையெல்லாம் குமார் புரிந்துகொள்ள எத்தனை யுகங்கள் வேண்டுமோ?

     1. உணா்ச்சி வசப்பட்டு தத்துவங்கள் பேசாதீா்கள்,ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்று முன்னேற்றம் காண்பதென்பது சாத்தியம் இல்லை அதாவது போ்லின் சுவா் வீழ்ந்த பின்பாவது அரசியல் ஞானம் உள்ளவா்களுக்கு புரியாமல் இருக்கமுடியாது ஆனால் பிடல் காஸ்ற்றோ தன் நிலையில் இருந்து மாறவில்லை,இப்போது மட்டும் எப்படி ஞானம் பிறந்தது?

      ஒரு நாட்டில் இலவச கல்வியின் மூலம் வைத்தியா்கள் நிரம்பி வளிந்தால் அந்த நாடு சுபீட்சம் அடைந்துவிடுமா?
      கியூபா உல்லாசப் பயணிகளின் வருகையினால் சில நலன்களை பெற்றது அந்த உல்லாசப்பயணத்தின் முக்கிய காரணி விபச்சாரம் என்பது யதார்த்தம். இதை கேட்டவுடன் ஏதோ நீங்கள் மட்டும்தான் புனிதா்கள் என்ற (Moralist) ரீதியில் ஆரவாரம் செய்கின்றீா்கள்,இலங்கைக்கு வருகின்ற உல்லாசப்பயணிகளும் (Sexual Tourist)அதுவே,இப்படி ஏழ்மையால் விபச்சாரம் செய்வதை விட திறந்த பொருளாதாரம் சிறந்ததென்றே நான் நம்புகின்றேன்.

    2. எமது ஆணாதிக்க மனசு எந்த நாட்டிலும் விபச்சாரத்தையே பார்க்கிறது இந்த சரியான வார்த்தை தெரியாததால் எங்கெங்கோ சுற்றீ இப்போதுதான் சரியான இடத்திற்கு வந்த உணர்வு ஏற்படுகிறது.சுகந்தன் சிந்தனை நம்ம நல்ல நண்பர் கம்பவாரிதிக்கு வரவேண்டும்,புலிகளீன் புரட்சி பாடகர்களாக இருந்தோருக்கு இருக்க வேண்டும்.

 21. சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன ?

  வட்டுக் கோட்டையிலிருந்து தான் வருகிறது .இதுவுமா புரியவில்லை. ஊர் ஊராக தேடினால் மிஞ்ச போவது கோயிலும் ,பழைய மாணவர் சங்கங்களும் தான்

 22. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்தை தமக்குள் எடுத்து என்னை விமர்சிக்கிறார்கள். பொறுப்பற்ற விமர்சனங்களில் வரும் சிக்கல்களை தவிர்க்க வேண்டும் என விரும்பி பொறுப்பான விமர்சனங்களையும் பிரபாகரன் ஏற்றுகொள்ள முடியாத சூழலில் சிக்குண்டாரோ? இதனால்தான் பிரபாகரன் விமர்சனங்களற்ற சூழலை தெரிந்து எடுத்திருக்க கூடும் என நினைக்கிறேன்.

  என்னை பொறுத்தவரையில் எத்தகைய சமுக ஏற்ற தாழ்வுகளும் பொருளாதார, கல்வி, சமுக அரசியல் மேம்பாடுகள் சம பங்கீடுகள் மூலம் தீர்க்க முடியும். இதற்கு மாஸ்கோ சென்று, பீயிங் சென்று எதனையும் படிக்கத்தேவையில்லை. எங்களது மக்களை அவர்களது வாழ்வியலை படியுங்கள். என்னை விமர்சிக்கும் உங்களை கேட்கிறேன் இன்றும் நாட்கூலிக்கு செல்லும் அன்றாடங் காச்சியளாக இருக்கும் மக்களின் மேம்பாட்டுக்கு உங்களிடம் என்ன தீர்வு இருக்கின்றது ? கால்மாக்சும், லெனினுமா? சொல்லுங்கள் வீண் விவாதத்தை விட்டு விட்டு!. என்னை பொறுத்த வரையில் உங்களிடம் தீர்வு எதுவும் இருக்கப் போவதில்லை. நான் மீளவும் சொல்கிறேன் ஒரு சமுகத்தின் பன்முகப் பார்வை இல்லாதவர்களால் சமூகப் புரட்சியை உண்டாக்க முடியாது. ஒரு சமூகப் புரட்சியில் தத்துவார்த்தப் பார்வை இருக்கவேண்டும். குழப்பகரமான சிந்தனைகள் எல்லாம் தத்துவார்த்தமாக இருக்க முடியாது. சாதீயம் குறித்த எந்த கருத்தையும் இந்த பின்னூட்டத்தில் நான் முன்வைக்காத போது இங்கு எனது விரையை ஏன் நசிக்க முற்படுகிறீர்கள். சிலருக்கு சாதியத்தை தூக்கி பிடித்து அரசியல் செய்யவேண்டுமானால் நான் என்ன செய்ய முடியும்?.சாதீயம் எனபது பொருளாதார கல்வி சமுக மேம்பாடுகளால் உடைத்தெறிய முடியும், மன மாற்றம் என்பது இதன் பின்னர் தானாக உருவாகும். அடித்தட்டு மக்களின் வாழ்வியலை முன்னேற்ற வழிகாட்டாத வரையில் சாதியமும் எம்மை பின் துரத்தும்.

  நான் குறிப்பிட்ட சுப்ரமணியம் M .C சுப்பிரமணியம் அல்ல.

  யாழ்ப்பாணத்தின் மேட்டுக்குடி என்ற வார்த்தை பிரயோகத்தில் எனக்கு உடன்பாடில்லை இருப்பினும் அவ்வாறு கூறப்படும் மேட்டுக்குடியில் உயர் சாதீயம் இருந்தது (இருந்தது உண்மை) எனக் கொண்டால் அது 1980 க்கு பின் மெல்ல மெல்ல அழிந்து விட்டது. இப்போது பெரும்பான்மையாக இருக்கும் மேட்டுக்குடி தன்மை என்பது சாதீயம் சார்ந்ததாக இருக்குமா என்பதுகுறித்து வாசகர்களும் பதில் சொல்லட்டும். என்னை பொறுத்தவரையில் அது பிறிதொரு தளத்தில் இருப்பதாகவே கருதுகிறேன். அது பொருளாதாராம் சார்ந்த தளத்தில் நகருவதாகவே நான் இனங்காண்கிறேன்.

  நான் எழுதிய பின்னூட்டம் இது சார்ந்து இருக்கவில்லை. இருப்பினும் ஏனைய பின்னூட்ட காரர்கள் எனது விலா எலும்பை கடிக்க முற்பட்டதால் இவற்றை எழுத வேண்டி ஏற்பட்டது.

  “நான் பேரறிவாளனும் அல்ல பேரறியனும் அல்ல. பொது புத்தி ஒன்றுக்குகாக மற்றவர்களுடன் சேர்ந்து செல்லவே என்றும் விரும்புகிறேன்.”

  “வெறும் கமுனிச புத்தகத்தை தூக்கி சமூகப் புரட்சியை உண்டாக்க முடியாது என்பது தான் எனது வாதம்.” இதுதான் அனைவருக்குமான பொதுபதில் ஒரேபதில்.

  1. வியாபாரத்திற்காக சரிட்டி செய்யும் பெரும் நிறூவனங்களப் போல நம்மில் சிலரும் சாதீயம் பேசிக் கொண்டிருக்கிறோம்.கம்யூனிசம் கறீக்கு உதவாத ஏட்டுச்சுரக்காய் என எத்தனை முற சொன்னாலும் ஏற்றூக் கொள்ள யாரும் தயாராக இல்லை.நாம் என்ன மனநோயாளீகளா? திரு ராகவன் அவர்களது கட்டுரை இனியொரு பிரசுரிக்க வேண்டும்.

  2. “பொறுப்பற்ற விமர்சனங்களில் வரும் சிக்கல்களை தவிர்க்க வேண்டும் என விரும்பி பொறுப்பான விமர்சனங்களையும் பிரபாகரன் ஏற்றுகொள்ள முடியாத சூழலில் சிக்குண்டாரோ? இதனால்தான் பிரபாகரன் விமர்சனங்களற்ற சூழலை தெரிந்து எடுத்திருக்க கூடும் என நினைக்கிறேன்” இன்னொரு வகையில் சொன்னால் இந்தக் கதையளுக்கெல்லாம் மண்டையில போட்டால் தான் சரிவரும். அல்லது பிரபாகரன் ஆக்களுக்கு மண்டையில் போட்டதற்கு அவ்வாறு கொலை செய்யப்பட்டோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமாகியது. அப்படித்தானே ராகவன். உங்கள் புலனாய்வு பிரமிக்கவைப்பவை. எது பொறுப்பான விமர்சனம் ?மாக்சிசம் என்றால் என்னவென்றே தெரியாமல் நிராகரிக்கவேண்டாம் என்றால் மாக்சிச புத்தங்கள் குழந்தைகளின் மலக்கழிவை துடைப்பதற்குத்தான் பயன்படக்கூடியது என்று நிந்தித்து மாக்சிச வெறுப்பை உமிழ்ந்துவிட்டு, உங்கள் மாக்சிச வெறுப்பின் அடிப்படையினை சுட்டிக்காட்டுகின்ற போது ஏதோ உயர்ந்த தளத்தில் விவாதிப்பவர் போல மாக்சிசபுத்தகங்கள் புரட்சியை கொண்டுவராது, என்று பாவ்லா காட்டுகிறீர்கள். இதுவா பொறுப்பான விமர்சனம். புத்தகங்கள் புரட்சிசெயவதில்லை. மனிதர்களே மாற்றங்களை கொண்டுவருகின்றார்கள். வரலாறுகளை படைக்கின்றார்கள். மக்களை படியுங்கள் என்றால் எந்த அடிப்படையில்? தமிழ்சினிமா கற்றுதருகின்ற படிப்பா? அல்லது உற்பத்தியில் மக்கள்பிணைக்கப்பட்டிருக்கின்ற முறை, அதற்குள் இருக்கும் முரண்பாடு, உற்பத்திமுறையை பாதுகாக்கின்ற கருத்தியல் அது தகவமைக்கும் குடும்ப, மனித உறவுகள் பற்றி கற்பதனைத்தானே மாக்சிசத்தின் அடிப்படை வழங்குகின்றது. நிச்சயமாக எவ்வளவு உயரிய இலட்சியங்களாயினும் பன்முகத்தன்மையின்றேல் சாம்பல்மேட்டில்தான் முடியும் என்றுதிடமாக ந்ம்புபவன் நான். நீங்கள் பன்முகத்தன்மையை ஆதரிப்பதாக கூறிக்கொண்டே புலிப்பாசிசத்திற்கு பொறுப்பற்ற விமர்சனங்களும் ஒருகாரணம் என்று புலம்புவதேன். இன்று மேலைத்தேச நாடுகளில் மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற உரிமைகளுக்கும்,சலுகைகளுக்கும் மாக்சிசமும் ரஸ்சிய புரட்சியும் காரணமாகின என்ற அடிப்படையை கூட தெரிந்துகொள்ளமுயற்சிக்கவில்லை. விசாரணைகளிலிருந்துதான் எதனையுமே ஆரம்பிக்கமுடியும். அழிவிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள முயலவில்லை என்று தெரிகின்றது. நீங்கள் உங்கள் ஊரிலேயே ஒடுக்கப்பட்டவர்களை உள்ளே அனுமதிக்காத கோயில்கள் இருப்பதாக முன்னர் குறிப்பிட்டுருக்கின்றீர்கள். உங்களிடம் ஒரு கேள்வி. இன்றைய பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலின்படி அந்தக்கோயிலை இடித்துவிட்டு பெளத்த கோவிலை கட்டி இராணுவத்தை காவலுக்கு போட்டால் இவ்வளவு காலமும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்ன நட்டம்? அல்லது என்ன லாபம்? அதற்காக அதனை நான் ஆதரிக்கின்றேன் என்று அர்த்தப்படாது. நான் இங்கு சாதி சமன் வர்க்கம் என்று வாதிடவோ சாதியவாதத்தை தூக்கிநிறுத்துவதோ என் நோக்கமல்ல. இதனை முகம் கொடுக்காமல் சாதியத்தை கடந்து செல்லமுடியாது. நீங்கள் சொல்வது முன்னர் கூட்டணி கபடத்தனமாக பேசியவிடயங்களைத்தான். உங்கள் வாழ்வியலில் ஒட்டிக்கொண்ட விடயங்கள் இவை. மீளவும் கட்டுரையின் தலையங்கத்தை படியுங்கள். உங்கள் கருத்தின் அடிப்படை எங்கே இருக்கின்றது என்று புரியும்.

 23. “என்னை பொறுத்தவரை இப்புத்தகங்கள் உழைக்கும் மக்களின் குழந்தைகளின் மலக் கழிவை துடைக்கத்தான் இவை பயன்படும்.” என்ற கருத்து மிக யதார்த்தமானது. கன்பொல்லையில் இருந்து திட்டிவரை இடதுசாரி முகமூடிகள் கொண்டுசென்ற புத்தகங்கள் அம்மக்களின் வாழ்வியலில் என்ன மாற்றத்தை கொண்டுவந்தது? உங்களுக்கு திட்டி தெரியுமா? கன்பொல்லை ராஜகிராமம் தெரியுமா? அம்மக்களின் வயிற்று பசிக்கு வழியை காட்டாது அக்காலங்களில் அவர்கள் மத்தியில் கொண்டு சென்ற இடதுசாரிய புத்தகங்கள் எதற்கு பயன்படும்? வயிற்று போக்கை துடைக்கதானே? சொல்லுங்கள் நான் சொல்வது தவறா? தவறானால் சொல்லுங்கள் நான் எனது கருத்தை மாற்றி கொள்கிறேன்.

  சுகந்தன் நீங்கள் கணனியின் முன் இருந்து கொண்டு உங்கள் நேரத்தையும் செலவழித்து பின்னூட்டம் விடுகிறீர்கள் அல்லவா? ஆக பணம் படைத்த இடதுசாரி நீங்கள். நீங்கள் பேசுவது மாத்திரம் இடதுசாரித்தனம்.

  ஆயுதப் போராட்டத்தின் உச்ச பயனாக உலகம் பூராக அகதி முத்திரையில் வாழும் எம் உடன் பிறப்புகளே அதனால் வந்த சொத்து சுகம் எல்லாம் உங்களுக்கு, திட்டும் பேச்சும் யாருக்கு? ஏற்ற தாழ்வு அற்ற சமுகம் உண்டாக்குவோம் வாருங்கள் முதலில் எங்களின் சுயநலங்களை தூர எறிந்து விட்டு.

 24. “ஈ.பி.ஆர்.எல்.வ் இயக்கத்தின் அரசியல் தவறுகளுக்கு அப்பால் அவ்வியக்கத்தின் பெயரை ஈழத்துபள்ளர்விடுதலை முண்ணணி” – இதனை எனது காதால் கேட்டிருக்கிறேன் அரசியல் மயப் படுத்தாத, மக்கள் மயப் படுத்தப் படாத ஈழப் போராட்டத்தின் தவறுகளில் இவையும் ஓன்று. போராட்ட பின்னடைவுகளுக்கான காரணிகளில் இவையும் உள்ளடங்கும்.

 25. தமிழ் சமுகத்தில் காணபட்ட காணப்படும் சாதீய ஒடுக்குமுறைகள் குறித்து அறியாதவன் அல்ல அல்லது அதன் கொடிய தாக்கத்தை உணராதவன் அல்ல சொந்த சமுகத்தில் காணப்பட்ட கொடிய மனிதாபிமானமற்ற செயல்கள். இது குறித்த பார்வை ஒன்றை செலுத்தி அததற்குரிய தீர்வுகளுடன் ஒரு ஆக்கம் இனிஒருவுக்கு எழுதி இருந்தேன். அதில் கூறப் பட்ட சாதியப் பெயர்களை நீக்கிவிட்டு கட்டுரை எழுதி அனுப்பும் படி. இனிஒரு கேட்டுகொண்டது. எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. அதில் சாதியத்தின் மனிதாபிமானபற்ற பார்வையை எனது சொந்த அனுபவங்களுடன் விளக்கி இருந்தேன். சாதீயம் தகர்க்கப் பட கூடிய வழிமுறைகளுடன் குறிப்பிட்டிருந்தேன். முடியுமானால் இனிஒரு அதனை பிரசுரிக்க வேண்டுகிறேன்.

 26. “இப்புத்தகங்கள் உழைக்கும் மக்களின் குழந்தைகளின் மலக் கழிவை துடைக்கத்தான் இவை பயன்படும்.” – ஈழத்து உழைக்கும் மக்களின் வாழ்வியலில் இந்த தத்துவமும் இப் புத்தகங்களும் எந்த வாழ்வியல் மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் எனது கருத்தும் ஆதங்கமும். பின்னூட்டக் காரர்கள் தேடிய புது புது அர்த்தங்களுக்கு நான் சொந்த காரன் அல்ல. சிலவேளை இவர்கள் படித்த கொள்கைகளில் தத்துவங்களில் எவ்வாறு முரண்பாடுகளை தேடுவது என்பது குறித்தும் படித்தார்களோ தெரியாது. நான் பொதுவுடைமை கொள்கையை எதிர்கவில்லை. அதனை கதைபவர்களின் செயல்பாடுகளில் மாத்திரம் முரண்படுகிறேன்.

  1. Hello Raghavan

   Even those books is not useful to wipe the baby’s poo. It will damage the baby’s ass. We should not use outdated theroy and must do somthing better. Yes we all know that we have to learn from the people and by working with them. Communism is brilliant but the people who implement comes and stay there. It is painful to chase them away. LTTE said that there were against the caste, however, they were silient when “ஈ.பி.ஆர்.எல்.வ் இயக்கத்தின் அரசியல் தவறுகளுக்கு அப்பால் அவ்வியக்கத்தின் பெயரை ஈழத்துபள்ளர்விடுதலை முண்ணணி” – இதனை எனது காதால் கேட்டிருக்கிறேன். I agree completly with you on this.

 27. சுகந்தன், நான் கூட்டணியின் அரசியல் காலத்தைச் சேர்ந்தவன் அல்ல, ஆயுத போராட்டத்தின் அரசியல் சூழலில் வாழ்ந்தவன் நான். நான் ஏற்கனவே சொன்னது போன்று விடயங்களுக்குள் விவாதிப்போம். சகல ஆயுத போராட்ட அமைப்புகளும் பாசிச நெறிமுறைகளை கொண்டவர்கள் தான், இதில் பிரபாகரன் தலையை மாத்திரம் உருட்ட வேண்டியதேன். ஈ.பி.ஆர்.எல்.வ் இயக்கத்தின் பெயரை ஈழத்துபள்ளர்விடுதலை முண்ணணி” என்று கேலி செய்தார்கள். புலிகளை மீனின் கண்ணுக்குள் நார் கோக்கும் கரையான்கள் என்றார்கள் ஆக விசித்திரமான பிறவிகள் விசித்திரமாக கதைத்தார்கள், அவ்வாறான பிற்போக்கு கதைகளுக்கு எல்லாம் நாம் கதைவசனம் எழுத முடியாது. கேலிபெசாதவன் எந்த சமுகத்தில் இல்லை? இதற்காக நாம் எமது சமூகத்தை இத்தகைய நிலைகளில் இருந்தது மாற்ற முடியாது நினைப்பது தவறு.

  சுகந்தன் – “இன்னொரு வகையில் சொன்னால் இந்தக் கதையளுக்கெல்லாம் மண்டையில போட்டால் தான் சரிவரும்.” அப்போ பிரபாகரன் அதைத்தானே செய்தார் அப்போ பிரபாகரன் செய்தால் பாசிசம் நீங்கள் செய்தால் நவபாசிசம். இதனைத்தான் இயக்கங்கள் மாறி மாறி செய்தன.
  சுகந்தன் – “புத்தகங்கள் புரட்சிசெயவதில்லை. மனிதர்களே மாற்றங்களை கொண்டுவருகின்றார்கள். வரலாறுகளை படைக்கின்றார்கள்” என்ற புரிதல் உங்களிடம் இருக்கும் போதே ஏன் இந்த பின்னூட்டத்தில் என்னை உங்களை மற்றவர்களை வேறு எங்கோ இழுத்துச் செல்கிறீர்கள். நானும் அதனைத்தானே சொன்னேன். இடதுசாரியம் பேசியவர்கள் தமிழ் சமுகம் மத்தியில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்பதை சற்று கடுமையான வார்த்தைகளில் சொன்னேன்.

  மக்களின் பிரச்சினைகளில் இருந்து மக்களுக்கான தீர்வை பெறுங்கள் என்பதே மக்களை படியுங்கள் என்பது ஆகும். மார்க்ஸ், லெனின் , எல்லோரும் ஒவ்வொரு மக்களுக்குள்ளும் இருப்பார்கள். மார்க்ஸ்ன் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு ஆ மார்க்ஸ் இப்படிச் சொன்னார் ஆகவே மக்களே இப்படிச் செய்யுங்கள் என்று சொல்லமுடியாது. அதனால் வெற்றியும் பெறமுடியாது.

  எவ்வளவு உயரிய இலட்சியங்களாயினும் “பன்முகத்தன்மையின்றேல்” சாம்பல்மேட்டில்தான் முடியும் என்றுதிடமாக நம்புபவன் நான் – நீங்கள் மாத்திரம் அல்ல நாம் எல்லோருமே அதனை நம்பவேண்டும். பலதடவை பல கோணங்களில் இதனை இடித்துரைத்துச் சொல்லி இருக்கிறேன். ஆனால் நீங்கள் ஒருமுகத்தன்மையை தேடி வலியுறுத்தி தாக்குதல் நடத்தி விட்டு என்னை முறைத்து பார்கிறீர்கள் சுகந்தன்.

  நான் விபச்சாரம் குறித்து குறிப்பிட்டதையிட்டு தமிழ்மாறன் கவலை கொண்டார், தவறுதான், இருப்பினும் நான் இதன் மூலம் குறிப்பிட்ட விடயம் என்னவெனில் கால் மார்க்சை, லெனினை பற்றி கதைத்த தம்மை சோஷலிச வாதியாக காட்டிய சிலரின் முகங்களைதான். அதோடு அந்த நாடுகளின் நிலைமையும் தான். பொது உடமை சித்தாந்தம் தவறு அல்ல ஆனால் முந்தைய ரஷ்ய போல அல்ல இன்றைய சீனாவைப்போல். அதாவது சீனாவின் முள்ளமாரித்தனத்தை அல்ல.

  “We should not use outdated theroy and must do somthing better ”
  Yes, sorry Lankan, it is true words.

  1. மக்களீன் பிரச்சனையில் இருந்து தீர்வைக் காணூங்கள் என்பதை யாரும் செவியில் போட்டுக் கொண்டதாய் இல்லை.எல்லோருக்கும் புத்தகங்கள்தான் கடவுள்.கர்த்தாவே கர்த்தாவே என தெருவில் நின்றூ கத்துகிறார்கள் இயேசு அழைக்கிறாராம்.அவரையும் சிலுவையில் வைத்து போட்டுத் தள்ளீனார்கள் இன்னும் காத்திருக்கிறார்கள் அவரது மூன்றாம் நாளூக்காக.இவர்களூம் மார்க்ஸ் லெனின் என்றூ பேசியே நம்மையும் தமது வழியில் இழுக்கப் பார்க்கிறார்கள் ஆனால் நாம் நந்தியைக் கடந்துதான் சிவனைப் பார்ப்பவர்கள் என்வே எம்மை எளீதில் யாரும் இழுத்து விட முடியாது.

   1. “நாம் நந்தியைக் கடந்துதான் சிவனைப் பார்ப்பவர்கள்” தமிழ்மாறன். இந்த இணையத்தின் நந்தி தானென்பதை குறிப்பால் உணர்த்துகின்றாரோ?

    1. தங்களது பன்ச் எனக்குப் பிடித்துள்ளது.நீங்களூம் நண்பர் ரயாவை பலோ பண்ணூகிறீர்கள் போலுள்ளது.எப்போதும் இடித்துக் கொண்டிருப்பார்கள் சிலர் அவர்கள் பார்வை சிரிப்பாகவே இருக்கும் இந்த பாடி லாங்குவேஜை படிக்கவே ஒக்ஸ்போர்ட் போக வேண்டி இருக்கும்..

 28. யார் இந்த தமிழ் மாறன் . உலகிலேயே தரம் கெட்ட முறை பிராமணியம் தமிழ் பேசினாலே தோஷம் என்பவர்கள் தன் சொந்த மக்களில் தொட்டாலே தோஷம் என்று குளிப்பவர்கள்
  இப்படியானவர்களுக்கு வக்காத்து வாங்கி கொண்டு மாவோ பத்தி பேசும் மா… னே, மாவோ நடத்தியது புரட்சி பலது நடந்திருக்கும் அவர் குறிக்கோள் மாறியதில்லை என்றுமே அவர் மா மனிதர்தான்

Comments are closed.