சரத் பொன்சேகாவிற்குப் பண உதவி? : அமரிக்கா, நோர்வே மறுப்பு!

ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதற்கு, நோர்வேயும் அமெரிக்காவும் நிதி வழங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்த இரண்டு நாடுகளும் மறுத்துள்ளன.

மற்றொரு நாட்டின் தேர்தலில் தலையிடுவதை தாம் விரும்பவில்லை நோர்வே தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இந்தநிலையில், தமது நாடு குறித்த நிதியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் மறுத்துள்ளது.

இதேவேளை அமெரிக்காவும் தம்மீதான இந்தக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இலங்கையின் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் ஜனநாயகம் முன்னெடுக்கப்படவேண்டும் என கோரியுள்ள இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், வெற்றிபெற்றவருடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியா கூட இதே கருத்துக்களையே தெரிவித்துவருகிறது  என்பது  குறிப்பிடத்தக்கது.