சம்பள உயர்வு கோரி தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்கள்

அரச ஊழியர்களுக்கு 8,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் எனக்கோரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. அகில இலங்கை சுகாதார சேவை சங்கம், அகில இலங்கை புகையிரத சேவை ஊழியர் பொதுச் சங்கம், தேசிய தொழிற் சங்க மத்திய நிலையம் என்பன 8,000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தப் பேவாதாக அறிவித்துள்ளன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரச ஊழியர்களுக்கு 2.500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுமென ஆளும் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. ஆயினும் அவ்வாறானதொரு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை எனபதுடன் அவ்வாறானதொரு வாக்குறுதியும் வழங்கப்படவில்லை எனவும் ஆளும் கட்சி முக்கயஸதர்கள் தெரிவித்துமிருந்தனர். இப்போது 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கபடவுள்ள நிலையில் தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வக் கோரிக்கையினை முன்வைத்துப் போரட முன்வந்துள்ளார்கள்.