சமூக நீதிக்கு எதிரான இயக்கம் திமுக- சி.பி.எம் தாக்கு.

சி.பி.எம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருப்பூர் எம்.எல்.. கோவிந்தசாமி காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட இருபதாயிரம் பேருடன் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் விழா நடந்தது அதில் சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளின் ஏனைய எம்.எல்.ஏக்களுக்கும் தூண்டிலை வீசினார் கருணாநிதி. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஏகாதிபத்திய எதிர்ப்பு, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் போன்ற அடிப்படை கொள்கைகளை கம்யூனிஸ்ட்டுகள் ஒருபோதும் மாற்றிக் கொண்டது இல்லை. இனியும் மாற்றிக் கொள்ளப் போவதும் இல்லை. அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு முதல் தொழிற்சங்க உரிமை மறுப்பு வரை தி.மு..தான் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தி.மு.. அங்கம் வகிக்கும் மத்திய அரசு, பல்வேறு விஷயங்களில் மாநில உரிமைகளை அப்பட்டமாக பறிக்க முயல்வதும், மாநில சுயாட்சிக்காக முழங்கிய தி.மு.. மனு அனுப்புவதோடு தன்னை நிறுத்திக் கொள்வதும்தான் இப்போது நடக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியை பொருத்தவரை மாற்றுக் கொள்கையை முன்வைத்து மக்கள் நலனுக்காக போராடி வருகிறது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், மாநிலத்தில் ஆளும் தி.மு.. அரசும் மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்தும்போது, அதை எதிர்த்துப் போராடுவதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எந்த தயக்கமும் இல்லை. அவ்வாறு போராடுவது தன்னுடைய அடிப்படை கடமை என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. மாறாக, தாராளமயமாக்கல் கொள்கைகளை தழுவியுள்ளதால், தடுமாறுவதும், நிலை மாறுவதும் தி.மு..தானே தவிர, கம்யூனிஸ்ட்டுகள் அல்ல. தி.மு.. அரசின் சாதனைகளை மார்க்சிஸ்ட் கட்சி மறைக்கப் பார்க்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். கடுமையான விலைவாசி உயர்வு, வரலாறு காணாத மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்றவற்றையெல்லாம் யாரும் மறைக்க முடியாது.சமூக நீதிக்காகவே தோன்றிய இயக்கம் என்று தி.மு.. கூறிக் கொள்கிறது. ஆனால், தி.மு.. அரசின் நடவடிக்கைகள் சமூக நீதிக்கு எதிராகவே உள்ளன. சமூக நீதிக்காக போராடுவோர் மீது காவல் துறையை ஏவி விடுவதும், பொய் வழக்கு போடுவதும்தான் தி.மு.. அரசின் நடைமுறையாக உள்ளது. உத்தபுரம் முதல் ..எஸ். அதிகாரி உமாசங்கர் விவகாரம் வரை தலித் விரோத அணுகுமுறையையே தி.மு.. அரசு பின்பற்றுகிறது. இவை குறித்த செய்திகள் எல்லாம் யாரும் மறைக்காமல், பத்திரிகைகளில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. தி.மு..வுக்கு அலை அலையாக ஆதரவு பெருகவில்லை. மாறாக, மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் காரணமாக அதிருப்தி அலைதான் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

7 thoughts on “சமூக நீதிக்கு எதிரான இயக்கம் திமுக- சி.பி.எம் தாக்கு.”

 1. ஏகாபத்தியம் என்பதே ஏரியா ரவுடி என்பதாகி விட்டது,கம்யூனிசம் என்பதும் காசு பார்க்கும் சிந்தனையாகி விட்டது.ஆக கடவுளீடம் பாரத்தை போடுவோம் என பொறூப்பற்றூ பேசாது கடவுளீடம் போயுள்ள கோவிந்தசாமி பொறூப்புள்ளவர்தான்.இப்போது சிபிம் இற்கு கோவிந்தா,கோவிந்தா.

 2. தி.மு.க. என்பது மிகப்பெரிய சினிமா கம்பெனி!.ஒரு நாள் அரசன் வேடம் போடுவதும்,மறுநாள் பிச்சைக்காரன் வேடம் போடுவதும் ஒரே நபரே.பச்சோந்தியின் நிறத்திற்கு தகுந்த மாதிரி உதட்டில் உள்ள வசனங்கள் மாறும் “இது அரசியலா?” இல்லை “கலைஞனின் தொழிலா?”.சமூக நீதி என்பது ஜாதிப் பிரச்சனையை தீர்ப்பதற்கு,”த இந்து” பத்திரிக்கையின் உண்மையான நிறுவனர்(பரதேசி ராம் அல்ல) “திரு.கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய ஐயர்” போன்றோர்களால் பிரதிபலிக்கப்பட்டது.சமூக நீதி ஒரு கத்தோலிக்க வார்த்தையாக இருந்தாலும்,அது இஸ்ரேலில் ரஷிய -யூத கட்சியின் பெயராகவும் உள்ளது.இந்தியாவில் அது நீதிகட்சி என்ற ஆங்கிலேய ஆதரவு கட்சியாக இருந்தாலும்,இந்துத்துவத்தின் பரிணாம வளர்ச்சியின் அவசியமாக “உண்மையாகவே உள்வாங்கப்பட்டு” இருந்தது – பாராபட்சமின்றி அராய்க!.ஆனால் கலைஞர் கருணாநிதி,சிங்கள இனவெறி – தமிழ்தேசிய இனவெறி போல்,இதை தன் சுயநல அரசியலுக்காக,ஜாதிகளிடையே சிண்டு முடித்து விடும் கருவியாக,சில பழைய கேடு கெட்ட(அனைவரும் இல்லை) பாப்பான்களைப் போல் பயன் படுத்துகிறார்!.

  1. சமூக நீதி என்பது கத்தோலிக்க நீதியா? தவறீ என நினைக்கிறேன்.கத்தோலிக்கர்களூக்கும் புரோட்ட்ஸ்களீக்கான யுத்தமும் ,மற்றூம் சிலுவைப் போரும் கத்தோலிக்கம் காட்டுமிராண்டித்தனமான ஆதிக்கத்தை கொண்டிருந்ததையே காட்டுகிறது.இதன் வழியேதான் இன்றூம் கட்டுப்பாடுகள் எனும் போர்வையில் அது பேண்ப்படுகிறது.இவற்றீற்கு எல்லாம் பழைமையானது சைவம் சமூகமாய் மக்கள இணத்திருந்தது.ஆக சைவத்தின் கருத்துருவே சமூக நீதி.

   1. மேன்மை கொள் சைவநீதி 8000 சமணர்களைக் கழுவேற்றும்;
    பவுத்தர்களின் நாவைத் துண்டிக்கும்.
    வைணவர்களை வடக்கே விரட்டும்.
    கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடித்துப் பெரிய கோவில் கட்டும்.
    நந்தனைநெருப்பினுள் தள்ளும்.
    இன்னும் எவ்வளவோ!

    தன் முதுகு ஒரு போதும் தனக்கே தெரியாது!

    1. நந்தனை நெருப்பில் தள்ளீயது சைவமல்ல, சைவத்தைக் கொள்ளயிட்ட பிராமணீயம்.சமணர்கள கழுவிலேற்றீயதும்,வைணவரோடு போருக்கு நின்றதும் பிராமணீயமே அன்றீ சைவமல்ல.கமலகாசன் என்ற வைணவ பிராமணரால் நடிக்கப்பட்டு வாலி எனும் வைணவ பிராமணரால் புனையப்பட்ட தசாவதாரம் சோழனை தேவையற்ற ரீதியில் வம்பிற்கு இழுத்து அவனை இகழ்ந்தது வைணவப் பிராமணீயின் காழ்ப்புணர்ச்சியே அன்றீ சைவவ நெறீயல்ல

   2. அப்பர் என்ன பார்ப்பானா? வேளாளரும் பார்ப்பனரும் கூட்டுச் சேர்ந்துதான் செயற்பட்டார்கள்.
    ராஜராஜன் எத்தனை கோயில்களைச் சூறையாடினான் என்பதைப் பார்ப்பனரல்லாதோர் எழுதிய வரலாற்று நூல்களும் சொல்லும்.

    ராமானுஜரை வடக்கே விரட்டியோர் யார்?
    தமிழில் செயற்பட்ட தமிழக வைணவர்களை விரட்டியதன் பயனாகவே தமிழ் வைணவரிடையே வடகலைப் பார்ப்பன ஆதிக்கம் ஓங்கியது (கருணாநிதிக்கு அவர்கள் இப்போது நல்ல கூட்டாளிகளும் குடும்ப உறவுடையோருமாவர்).

    கமலஹாசனிடமோ கருணாநிதியிடமோ வேறெந்தச் சினிமாக்காரனிடமோ வரலாறு படிக்குமளவுக்கு எனக்குப் புத்திகெட்டுப் போகவில்லை.

    1. அப்பரை பிராமணர் துன்பப்படுத்தினர், கொடுமைப்படுத்தினர்.காரக்காலம்மையாரைக் கைவிட்டனர் இருந்தும் அவர்கள் தெயவ சக்தியால் எல்லாக் கொடுமையிலும் இருந்து மீண்டனர்.தஞை பெரிய கோயிலைக் கட்டியும் இன்னும் கோயில்களூக்கு நிலங்கள மானியமாக வழங் கியும் தமிழ் வளர்த்தவன் ராஜராஜன்.

Comments are closed.