சந்திரிக்கா;ஐ.தே.க பேச்சுவார்த்தை:அரசியல் முன்னணி உருவாக்கம்?

07.09.2008.

அரசாங்கத்திற்கு எதிரான விரிவான அரசியல் முன்னணியொன்றை அமைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சந்தரிக்காவை சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி நாட்டின் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது.
 
விரிவான அரசியல் முன்னணியொன்றை உருவாக்குவது தொடர்பில் நீண்ட நேரம் முன்னாள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.