சந்திரிகா பண்டாரநாயக்க சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு

chandrikaசந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவாக மேடைகளில் பேசுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுள்ள சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு ஐக்கிய தேசிய முன்னணி பதவிகளை வழங்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

எனினும், இதுவரையில் அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

சந்திரிக்கா மீண்டும் அரசியலில் ஈடுபடக் கூடும் என அண்மையில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.