சந்திரயானுடன் தொடர்பு இழந்துவிட்டோம்: இஸ்ரோ

நிலவை ஆராய இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளையும் தாம் இழந்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் கலத்தில் இருந்து வந்துகொண்டிருந்த சமிஞ்சைகள் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் முழுமையாக நின்றுவிட்டதாகவும், தொடர்புகளை ஏற்படுத்த செய்யப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

கலன் செயல் இழந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்படுவதாக இந்த திட்டத்தின் இயக்குனர் அண்ணாதுரை தமிழசையிடம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதியன்று சென்னைக்கு வடக்கேயுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் கடந்த நவம்பர் மாதத்திலும் பின்னர் இவ்வருடம் ஜூன் மாதத்திலும் பல சிக்கல்களை சந்தித்திருந்தது.

சந்திரயான் பயணத்தின் அறிவியல் நோக்கங்கள் நிறைவேறிவிட்டதாகவும், தாங்கள் பெற எண்ணிய தரவுகளில்ள் 95 சதவீதம் வரையிலானவை கிடைத்துவிட்டதாகவும் திட்ட இயக்குனர் அண்ணாதுரை தமிழோசையிடம கூறினார்.

BBC