கோவில் கருவறைக்குள் உல்லாசம் கோவில் அர்ச்சகர் கைது !

தமிழகத்தின் காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் பெண்களுடன் உல்லாசமாக இருந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள அர்ச்சகர் தேவநாதன் காஞ்சி கோர்ட்டில் சரணடைந்தார்.காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவநாதன் (35). இவர் காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள ஸ்ரீமச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக இருந்தார்.கோவில் கருவறையில் அவர் பல பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டு அசிங்கப்படுத்திய செயல் வீடியோ காட்சிகளாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து தேவநாதன் தலைமறைவானார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை தள்ளுபடி செய்து விட்டது. அத்தோடு, தேவநாதனையும், அவருடன் உல்லாசமாக இருந்த பெண்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.இதையடுத்து தேவநாதனைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக முயன்று வந்தனர். இந்த நிலையில் தேவநாதன் பெண்களுடன் புரிந்த லீலைகள் அடங்கிய காட்சிகளை சிலர் சிடி போட்டு விற்க ஆரம்பித்ததால் இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்தது.இந்த நிலையில் நேற்று அர்ச்சகர் தேவநாதன், காஞ்சீபுரம் முதல் வகுப்பு குற்றவியல் கோர்ட்டில், மாஜிஸ்திரேட் சுதா முன்னிலையில் சரண் அடைந்தார். தேவநாதன் சரண் அடையும் தகவல் பரவியதும் ஏராளமானோர் அங்கு கூடினர். பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், டி.வி. வீடியோகிராபர்களும் குவிந்தனர்.சரணடைந்த தேவநாதனிடம் பெயர் விவரங்களைக் கேட்டுக் கொண்ட மாஜிஸ்திரேட் அவரை வருகிற 30ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீஸார் காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

10 thoughts on “கோவில் கருவறைக்குள் உல்லாசம் கோவில் அர்ச்சகர் கைது !”

 1. நட்புடன் இச் செய்தியை எழுதிய எழுத்தாளருக்கும் வெளீயிட்ட ஆசிரியருக்கும் மற்றும் வாசக நண்பர்களுக்கும்…

  இந்த இணையத்தளமானது சமூக அக்கறையுள்ள சமூக மாற்றத்தை உருவாக்க விரும்புகின்ற ஒன்றாகவே நான் பார்க்கின்றேன். அதை அடைவதற்கான உருவாக்குவதற்கான கருத்துக்கள் பாதைகள் வேறு வேரானவையாக இருந்தபோதும் நமது நோக்கம் ஒன்றே.

  ஆந்த அடிப்படையில் இச் செய்தி தொடர்பான எனது கருத்தை விமர்சனத்தை இங்கு முன்வைப்பது பொருத்தமானது எனக் கருதுகின்றேன்.

  முதலாவது மேற்குறிப்பிட்ட செய்தியை வெளியிட்ட முறையானது ஒரு மூன்றாம்தரத்திலான செய்தித்தாள்கள் வெளியீடும் செய்தி போன்றதாகவே நான் பார்க்கின்றேன். ஏனனில்….

  அண்மையில் ஒரு பெண்ணியக் கட்டுரை ஒன்றும் அது தொடர்பான விபரணப்படம் ஒன்றும் பார்த்தேன். இது கனடாவில் பழங்குடி பெண்களை வெள்ளையின ஆண்கள் எவ்வாறு வன்புணர்ச்சி செய்து கொலைசெய்கின்றனர் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பானது.

  அக் கட்டுரையினது விபரணப்;படத்தினதுமு; நோக்கமானது அக் குறிப்பிட்ட ஆணை பிரபல்யப்படுத்துவதோ அல்லது வெளிக் கொண்டுவருவதோ அல்ல. அதற்கும் மேலாக இவ்வாறன வன்புணர்ச்சிகளும் கொலைகளும் நடைபெறுவதற்கான சமூக காரணிகளை ஆராய்ந்திருந்தது. ஏனனில் இச் சமூக காரணிகளே இவ்வாறன சம்பவங்கள் நடைபெறக் காரணமாக இருக்கின்றன. இச் சமூக காரணிகளை கண்டுபிடித்து அதற்கான தீர்வைக் காணும் பொழுது இவ்வாறான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தீர்வுகளை நாம் காண முயற்சிக்கலாம்.
  ஆல்லது மேற்குறிப்பிட்ட செய்தி போன்று எய்தவர் இருக்க அம்மை நோகும் கதையாகவே இருக்கும்…
  இனி மேற்குறிப்பிட்ட செய்தியை பகுத்தாய்வுக்கு உட்படுத்துவோம்….

  முதலாவது இவ்வாறன செயலில் ஈடுபட்டது ஒரு ஆண்…

  ஆந்தவகையில இது ஆச்சரியமானதல்ல…நாம் வாழுவது ஒரு ஆணாதிக்க சமூகத்த்pல்…இதில் ஆண்களுக்கு அதிகாரம் கட்டுக்கடங்காதிருக்கின்றது…ஆகவே ஒரு ஆண் தான் விரும்பியதை செய்வதில் எந்தவிதமான தடையும் அந்த ஆணின் சமூக சாதிய வர்க்க பிண்ணியைப் பொறுத்து இருக்கப்போவதில்லை….ஆகவே இங்கு விமர்சிக்கப்படவேண்டியது ஆணாதிக்க சமூகத்தையே…அந்த ஆண் தனது ஆணாதிக்க மனோபாவத்தை பயன்படுத்த pஅவ்வாறான ஒரு செயலில் ஈடுபட்டிருந்தால்..ஆணாதிக்க சமூகத்தில் ஆண் எவ்வாறு எல்லாம் நன்மை அடைகின்றான்…பெண்ணை தனது தேவைகளுக்கு எற்ப எவ்வாறு அடக்கி பயன்படுத்துகின்றான்…என அலசி ஆராய வேண்டும்…இதை விடுத்து….

  இரண்டாவது…

  ஆந்த ஆணின் சாதிய பின்னணி முக்கியமானது. செய்தியின் அடிப்படையில் அவர் ஒரு பிராமண சாதியைச் சேர்ந்தவராகவே இருக்கலாம். ஆகவே கண்டறியவேண்டியது…அதில் ஈடுபடுத்தப்பட்ட அல்லது ஈடுப்பட்ட பெண்களின் சாதிய பிண்னணி…ஏனனில் ஆதிக்க சாதிகள் அடக்கப்பட்ட சாதி பெண்களை தமது காம இச்;சைகளுக்கு தொடர்ந்தும் சுரண்டி வருவது வரலாறு. ஆப் பெண்கள் சாதியால் அடக்கப்பட்டவர்களாக இருப்பின் இச் செய்தியின் பின்னணியை சாதிய சுரண்டலினதும் அடக்குமுறையினதும் அடிப்படையில் அணுகவேண்டும். ஆதிக்க சாதிகளின் பாலியல் சுரண்டலுக்கு எதிரானதாக இச் செய்தி இருந்;திருக்க வேண்டும்….அதைவிடுத்து..

  ஆக் குறிப்பிட்ட பெண் ஒரே சாதியை சேர்ந்தவராக இருப்பின் ஒன்று ஆணாதிக்கத்தின் அடிப்படையில் நோக்கலாம் அதாவது ஏற்கனவே மேலே கூறியது போல் ஆண்களால் பெண்கள் எவ்வாறு பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பது பற்றிய ஆய்வாக இச் செய்தி இருந்திருக்கவேண்டும்.

  இவ்வாறு பல் வேறு கோணங்களில் அக் குறிப்பிட்ட சம்பவத்திற்கான சமூக காரணிகளை கண்டறிந்து வெளீயிடும் பொழுது சமூகத்தில் புறையோடிப்போயிருக்கும் ஆணாதிக்க அதிகாரத்துவத்தையும் அதன் துஸ்பிரயோகங்களையும் அடக்குமுறைகளையும் மற்றும் அனைத்துவிதமான சுரண்டல்களையும் பிற்போக்குத்தனங்களையும் வெளிக்கொண்டுவரலாம். இது சமூக மாற்றத்தை நோக்கிய செயற்பாட்டிற்கான ஒரு அடியாக இருக்கும்.

  இதைவிடுத்து இவர் அவரோடு கருப்பகிரக்த்திலோ சொர்க்கத்திலோ சல்லாபித்தால் நமக்கு என்ன…நம்மால் முடியவில்லையே என பொறாமையாக இருக்கின்றதா…அல்லது…
  இரு மனிதர்கள் அது பிராமணனாக இருந்தால் என்ன தலித்தாக இருந்தால் என்ன தமது இயற்கையான காம சக்தியை வெளிப்படுத்துதல் தவறேதுமில்லையே…அவ்வாறு தவறு என கூறுகின்றவர்கள் யார் என மீண்டும் சமூக ஆய்வு செய்யவேண்டும்….இவ்வாறு கூறுபவர்கள் நமது பிற்போக்கான கலாசார பண்பாட்டு அம்சங்களை தூக்கிப்பிடிக்கும் சமூக ஆதிக்கசக்திகளே…இச் சக்திகளையே சமூகத்தின் முன்வெளிக்கொண்டு வரவேண்டும்….

  மூன்றாவது…

  எனது புரிதலில் நீங்கள் நாத்திகர்கள் என்றே நம்புகின்றேன். அப்படியாயின் ஒரு கோயிலுக்குள் அதன் கர்ப்பகிரகத்தில் ஒரு மனிதர் காம செயற்பாட்டில் ஈடுபடுவதில் தவறு என்ன? அது துய்மையான இடம் என நீங்களும் கருதுகின்றீர்களா? குhம செயற்பாட்டால் தூய்மை போய்விட்டது எனக் கவலைப்படுகின்றீர்களா?

  காமத்தைக் கட்டிப்போட்டு அடக்கி அழகு பார்க்கும் வேடிக்கை பார்க்கும் சமூகத்தில் இருவர் பயமின்றி காமஉறவில் ஈடுபடுவதற்கு கடவுள் இருக்குமிடமான கருப்பகிரகத்தைத் தவறி வேறு எந்த இடமும் பாதுகாப்பானதல்ல…

  இங்கு நாம் அந்த செய்தியின் பின்னணியில் கவனிக்கவேண்டியது வர்க்க சாதி பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு இரு மனிதர்கள் காம உறவில் ஏன் அவ்வாறு களவாக ஈடுபடுகின்றனர்….அதற்கான சுதந்திரம் சமூகத்தில் மறுக்கப்படுகின்றதா?

  ஆவ்வாறு மறுக்கப்படுகின்றதாயின் அதற்கான காரணம் என்ன? என்றடிப்படையில் ஆய்வு செய்யவேண்டும்…
  காமம் மனிதரின் இயற்கையான சக்தி. அது ஏன் நமது சமூகத்தில் அடக்கப்பட்டிருக்கின்றது. இந்த அடக்குமுறைக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் தொடர்பிருக்கின்றதா? தொடர்பிருந்தால் அதற்கான பின்னணி காரணம் என்ன? என்பன கண்டறியப்பட்டு களையப்படவேண்டும்..
  அனைத்து மனிதரும் அனைத்து அடக்குமுறைகளிலிருந்தும் {(காம அடக்குமுறையிலிருந்தும்) விடுதலை பெற்று சுநத்திரமாக வாழவேண்டும்…

  எனது சொந்த அனுபவத்தில் காமத்தை அடக்குவதால் நான் படும் அவஸ்தையை யாரிடமும் சொல்லமுடியாது படும்பாடு இருக்கின்றதே…

  இளமையில் இலட்சியக் கொள்கைப்பிடிப்பால் அரசியல் வாழ்விற்காக காமத்தை கட்டுப்படுத்தி சுய இன்பம் மட்டும் வாழ்வானது…

  முடியாதபோது 27வயதில்(!) காமத்தை அனுபவிப்பதற்காகவே காதலியை கைபிடித்து…அப்பாடா பிரச்சனை தீர்ந்தது என நினைத்துபோது…

  அது அனை திறந்த்த வெள்ளம் போல் அதன் பின்தான் பாய்ந்து வருகின்றது…

  அதன் பின் பத்து வருடங்களாக தியான பயிற்சியில் இருந்தும் ம்ம்ம்…அது ஓய்ந்தபாடில்லை…
  ஒரு ஆணாக இருந்து…அதிலும் பெண்ணியவாதியாக இருந்து…எனது உள் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் மதிப்புக் கொடுத்து…அதேவேளை பெண்ணையும் மதித்து அவளது உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் மதிப்புக் கொடுத்து அவள் மீது எனது ஆணாதிக்க அதிகாரத்தை பிரயோகிக்காது…பாலியல் அடிப்படையில் சுரண்டாது பிரக்ஞையுடன் நேர்மையாக இந்த பிற்போக்கு சமூகத்தில் வாழ்வது என்பது….

  ஆப்பாடா….இக் கஸ்டத்தை யாரிடம் முறையிடுவது…. கடவுள் மீது நம்பிக்கையில்லை…நல்ல தலைமைகளும் இல்லை…வழி காட்டிகளும் இல்லை..என்ன வாழ்வு இது…

  பிரச்சனை என்னவெனில் காமத்தை எவ்வாறு தீர்ப்பது அதற்காக மற்று பாலிடம் எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பான அறிவு நமது சமூகத்தில் இல்லை….குறிப்பாக ஆண்கள் காதல் என்பதையே காமத்தை தீர்ப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இது துர்ப்பாக்கியமானதே… பெண்ணுடன் எனக்கு காதல் இல்லை காமம் தான் உள்ளது என வெளிப்படையாக சொல்லவும் முடியாது…ஏனனில் அந்தளவு திறந்து உரையாடும் சமூகம் அல்ல நம்முடையது…அதனால் பல முற்போக்கு பேசும் ஆண்களே பெண்களுடன் உறவு கொள்வதற்கு மறைமுகமாகவே அணுகுகின்றனர்…ஆணிக்கே இந்த நிலையெனின் பெண்ணின் நிலை…

  இதன் சக்தியைக் கண்டுபயந்து தான் ஆணாதிக்க வர்க்கம் ஆரம்ப காலத்திலையே அடக்கிவிட்டதா?
  ஆய்வுகளின் படி ஒரு ஆண் ஆகக் குறைந்தது 3 நிமிடங்களுக்கு ஒரு முறை காமத்தைப் பற்றி சிந்திக்கின்றான்….பெண் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ஒரு முறை சிந்திக்கின்றாள்…

  இக் காம பிரச்சனையிலிருந்து நாம் ஒருவரும் தப்பமுடியாது…இன்று மனிதர்களிடம் இருக்குமு; பல உளவியல் பிரச்சனைகளுக்கு காமத்தை அடக்கி வாழ்வதும் ஒரு காரணம்…இருப்பினும் ஒவ்வொருவரும் நமது அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப இப் பிரச்சனைக்கு முகம் கொடுக்கின்றோம்….இதற்கான நமது தீர்வுகள் எல்லாம் சரி என நாம் வாதிட முடியாது எனனில் எந்தளவிற்கு நம்மை பிற்போக்கான சமூக கருத்துகள் ஆதிக்கம் செய்கின்றது என்பதை பொருத்தது அது…

  உண்மையிலையே காமம் ஒரு பிரச்சனையல்ல…ஆனால் பிரச்சனைக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது….
  நானும் இங்கு பிரச்சனைக்கு வரவில்லை…எனது கருத்தை மட்டுமே முன்வைக்கின்றேன்…மீண்டும் நேரம் கிடைக்கும் பொழுது கேள்விகள் இருப்பின் பதில் எழுதுவேன்…

  நன்றி
  மீராபராதி
  (பெண்மையும் ஆண்மையும்)

 2. அன்பு நண்பர் மீராபராதி அவர்களுக்கு வணக்கம்.உங்கள் கட்டுரை படித்தேன். நீங்கள் கோவிலுக்குள்ளும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறீங்கள்..
  அப்ப  ஒன்று செய்யுங்கள் இங்க பிடித்தவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். தேவையான நேரத்தை அர்ச்சகரிடம் முன்பதிவு செய்யவும் என்று விளம்பரம் செய்யுங்கள். அப்போது இன்னும் அதிகம் பேர் வருவார்கள். காரணம் நீங்கள் சொல்வது போல பாதுகாப்பாகவும் இருக்கும் கடவுளும் இலவசமாக நேரடி நிகழ்ச்சியையும் கண்டு சந்தோசப்படுவார்…

  கடவுள் இருக்கு என்று நம்பி செல்லும் அன்பு நண்பர்களே இனியாவது திருந்துங்கள். கடவுள் இருந்து இருந்தால் இது நடக்குமா?? இல்லை அவன் தான் துணிந்து இது போன்ற வேலையை செய்திருப்பானா??

  இதற்கு பதில் தருவாரா மீராபராதி???
  உங்கள் பதிலுக்காய் காத்திருக்கும்
  விடுதலைவீரா
  veera766@GMAIL.COM

 3. அன்பர் மீரா பாரதி !
  தேவநாதனுக்காக வக்காலத்து வாங்கவருகிறீரா ? இல்லை ஒட்டுமொத்த பார்ப்பனருக்காகவா?
  அண்மையில்பார்த்தது என்று நீர் குறிப்பிட்டிருப்பதுகூட ,எங்கேயோ ஒரு வெள்ளைக்காரன், கருப்பினப்பெண்ணைக்கற்பழித்த காட்சிதான்.
  ஏன்? நேற்று நடந்ததே ஈழத்தில். இன்றும், முள்வேலி முகாங்களில் தொடர்கதையாகவே உள்ளதே! இஃதெல்லாம் உமது இரும்புச்செவிகளில் விழவேயில்லையோ? அல்லது, இதையும் காணொலியில் கண்டால்தான் நம்புவீரோ? உமது கருத்துப்படி, இதெல்லாம் சிங்களவனின் இயல்பான காம உணர்வு. இதையெல்லாமொரு பிரச்சினை ஆக்கக்கூடாது. இந்த மூடத்தமிழர்கள் இதைப்பிரச்சினையாக்குகிறார்கள்; அப்படித்தானே!
  உமது மனைவிக்கோ அன்றி சகோதரிக்கோ இப்படி நடந்தாலும், அதை அடுத்தவனின் இயல்பான காமஉணர்ச்சி வெளிப்பட்டது என்று எடுத்துக்கொள்வீரோ?
  அப்படி எடுத்துக்கொள்வீராயின்,நிச்சயமாக நீர் ஒரு மிருகமாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில், மிருகங்களுக்குத்தான் புணர்ச்சிக்காலங்களில், பெற்றதாய் எது – சகோதரி எதுவென்று பிரித்தறியும் சக்தியில்லை.
  என்ன சொன்னீர்?
  காமத்தை அனுபவிக்க, கோவில் கர்ப்பக்கிரகத்தைவிடவும் பாதுகாப்பான இடமேயில்லையா?
  அடபாவி! எதையெதை எழுதவேண்டுமென்று ஒரு விவஸ்தையே இல்லாமற்போய்விட்டது.
  அப்படி ஒன்று நடக்கும் இடமானால் அதற்குக் கோவில் என்றா பெயர்?
  சிவப்பு விளக்குப்பகுதி என்று அனுமதி பெற்றால், இன்னும் பாதுகாப்பாக இருக்குமே!
  என்ன துணிச்சலிருந்தால் இவ்வளவு வெளிப்படையாக இதை எழுதுவீர் ?
  அதாவது உமது கருத்துப்படி, ’ பார்ப்பனர்களுக்கு மட்டும் ’ என்றும் இருக்கவேண்டும் ; பாதுகாப்பானதாகவும் இருக்கவேண்டும்.
  அப்படித்தானே!
  தனக்கே புரியாத வகையில் தத்துவங்கள் வேறு – ‘ காமம் இயல்பான உணர்ச்சியாம்’ நாம் மட்டும் என்ன செயற்கையாக செவ்வாய்க்கிரகத்திலிருந்து வந்தது என்றா கூறினோம் ?
  அதற்கான வடிகால்கள் அமைக்கப்பட்டுச் சமுதாயமானது ஒரு கட்டுப்பாட்டினுள் வாழ்வதற்கான திட்டங்களை வழங்குபவன்தான் உண்மையான ஒரு சமூகச்சிந்தனையாளனே தவிர,
  இவ்வாறான எழுந்தமானமான – சுயநல அடிப்படையிலான கருத்துக்களை முன்வைப்பவன் ‘ புல்லுருவி‘ என்றே கருதப்படுவான்.
  வேறு என்ன கேட்டீர்?
  நாம் நாஸ்திகவாதியாய் இருப்பதால், கோவிலுக்குள் எது நடந்தாலும் கண்டுகொள்ளக்கூடாதா?
  உம்போன்றவர்களல்தான் நாம் நாஸ்திகமே பேசவேண்டியுள்ளது.
  நண்பர் வீரா அவர்கள் குறிப்பிட்டதற்கமைய, ‘களியாட்டவிடுதி ‘ என்று பெயர்ப்பலகையிட்டு! அதைச்செய்யவேண்டியதுதானே
  இப்படி இருந்தால், உமது ஆஸ்திகக்கருத்தின்படி, ‘ புனிதம் – பக்தி ‘ எங்கிருந்துவரும் ?
  கடவுளின் பெயரால் இதை ஏன் நாறடிக்கவேண்டும்?
  இதற்குப்பதில் சொல்லமுடியுமா உம்மால் ?
  இதையும், சாமர்த்தியமாக ஆணாதிக்கம் எனும் தலைப்பில் அடக்கிவிட்டு பார்ப்பனர்களைக்காப்பாற்ற நினைக்கிறீர்.
  • இதில் நடந்ததெல்லாம் ,முழுக்க முழுக்க சமுதாயத்தைவழிநடத்தவேண்டிய பொறுப்பிலிருக்கும்ஒருவன் ,தனது அதிகாரத்தைத்தவறாகப்பயன்படுத்தி,தனது தனிப்பட்டதேவையைப் பூர்த்திசெய்துகொண்டமைதானே!
  இதில் எங்கு வந்தது ஆணாதிக்கம் ?
  இந்த இலட்சணத்தில், ‘ இனியொரு’ இல் வந்த செய்திக்கு தரம் வேறு நிர்ணயிக்கிறீரோ? இது மூன்றாந்தரமென்றால், நீர் எத்தனையாவது தரம்?
  நிச்சயமாக, இரண்டு கைவிரல்களுள்ளேயே அடக்கிவிட முடியாத தரம்.
  3 நிமிடம் – 7 நிமிடம் …. நன்றாகத்தான் காமத்தை ஆராய்ந்திருக்கிறீர்.
  இதே தொழிலாகத்தான் இருக்கிறீரோ?
  மேற்கொண்டும், தமிழினத்துக்குத் தலைமைதாங்கும் எண்ணத்துடன் இங்கு எதுவும் எழுதாமலிருப்பதுதான் உமக்கு நல்லது.
  தமிழன் இப்போது விழித்துக்கொண்டுவிட்டான்.
  வெகுவிரைவில் தமிழன் யார் என்பது அனைவருக்கும் புரியும்.
  நாம் தமிழர் !!!!!!!

 4. நட்புடன் என் கருத்துக்கு பின்னுட்டம் எழுதிய நண்பர்களுக்கு….
  தங்களின் எழுத்துக்களே எவ்வளவு வக்கிரமமானவை என்றும் எந்தளவிற்கு காமம் மற்றும் பாலியலுறவு தொடர்பான பரந்த அறிவில்லாதிருக்கின்றீர்கள் என்றும் அடக்கி வைத்திருக்கின்றீர்கள் என்றும் தெரிவிக்கின்றது…தங்களைப் போன்ற உணர்ச்சி வசப்பட்டவர்களின் செயற்பாடுகளாடும் பேச்சுக்களாளும் தாம் நாம் உரு முள்ளிவாய்க்காலைச் சந்தித்தோம்….நமது நோக்கம் சமூக மாற்றம் எனின் நாம் சமூகத்திலிருந்து புறநிலையாக பார்க்கும் போதே அதிலுள்ள பிரச்சனைகளை விரிவாகவும் ஆழமாகவும் பார்க்கலாம்….அல்லது சமூகத்திலிருக்கும் பல்வேறு அடக்கும் சமூக சக்திகளில் ஆகக் குறைந்தது ஒன்றுடனாவது நம்மை அறியாது பிரக்ஞையற்று செயற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளது….இனியொரு சமூக அக்கறையுள்ள சமூக மாற்றத்தை நோக்கி செயற்படுகின்ற ஒரு மின்வலை சஞ்சிகையாகவே பார்க்கின்றேன்… அந்த அக்கறையின் நிமித்தமே அவாகள் இந்த செய்தியை எப்படி ஒரு முன்றாம் தர பத்திரிகை பிரசூpக்கின்றதோ அப்படி பிரசூpத்தமைக்கான விமர்சனத்தையே இங்கு முன்வைத்தேன்….. மேலும் தங்களுக்கு பதிலளிக்கு நோக்கத்தினாலும் இந்த சமூகப்பிரச்சனையின் முக்கியத்துவம் கருதியும் கட்டுரைவஎவிலாக எழுதியுனள்ளேன்..வாசியுங்கள் தங்கள் கருத்தை முன்வையுங்கள்…நன்றி நட்புடன் மீராபாரதி

 5. காமம். பிரம்மச்சாரியம். மனிதர்கள் சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை – பகுதி 1.
  ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மையையும் அப் பிரச்சனை மீதான சமூகத்தின் பன்முக பார்வைகளும் அடக்குமுறைகளையும் அலசி ஆராய்வதற்கு நம்மிடம் பன்முகத் தன்மை கொண்ட பார்வை இல்லாமல் இருப்பது மிகவும் துரதிர்ஸ்டமாகும். ஏனனில் அவ்வாறு பார்க்கும் பொழுது மட்டுமே ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மைகள் வெளிப்படும். அதனடிப்படையில் அதற்கான தீர்வுகளை காண்பதும் இலகுவாகும். இந்த அடிப்படையில் அண்மைக்காலங்களில் பேசப்படும் சாமியார்கள் மதகுருமார்கள் மற்றும் அரசியல் குறிப்பாக இடதுசாரி அரசியல் செய்ற்பாட்டாளர்களின் பாலியல் தூஸ்பிரயோகங்கள் அல்லது பயன்படுத்தல்கள் மற்றும் அவர்களது காம அல்லது பாலியல் உறவுகள் தொடர்பான செய்திகள் பார்க்கப்படவேண்டும். இவ்வாறன செய்திகள் குறித்த தனிநபர்களுக்கு எதிரான ஒரு வம்புச் (பழளளip) செய்தியாக குறுகிய காலத்தில் பரபல்யமாகி ஊடக செய்திகளின் விற்பனைக்கும் அதனால் அவர்கள் இலாபம் ஈட்டுவதற்கும் மட்டுமே வழிவகுக்கின்றது. இதற்குக் காரணம்இ அச் செய்தியின் பால் இருக்கும் கவர்ச்சித்தன்மையே. ஏனனில் நமக்குள் புதைந்திருக்கும் அல்லது புதைக்கப்பட்ட பிரக்ஞையற்ற காம மற்றும் பாலியல் மீதான ஆசைகளே இச் செய்திகளை நோக்கி நம்மை இழுக்கின்றன. ஆனால் காலோட்டத்தில் இப் பிரச்னைக்குறிய அம்சம் பெரும்பாலும் கதைக்கப்படுவதில்லை ஏனனில் பல்வேறு வம்வுச் செய்திகள் வந்து எம்மை அள்ளிக்கொண்டு சென்றுவிடும். அல்லது மீண்டும் இன்னுமொருவர் மூலம் பாலியல் தூஸ்பிரயோகம் தொடர்பான பிரச்சனை பெரிதுபடுத்தப்படும். சிறிது காலத்தில் மீண்டும் இச் செய்தியின் முக்கியத்துவம் குறைந்து போகின்றது. ஆனால் இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நமது சமூகத்தன் காமம் மற்றும் பாலியல் தொடர்பான கருத்துக்கள் சிந்தனைகளின் ஆதிக்கம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளும்இ அதன் மீதான அடக்குமுறைகளும் கேள்விக்குட்படுத்தப்படுவதோ அல்லது ஆராயப்படுவதோ இல்லை. மாறாக இந்த செய்திகள் ஆணாதிக்க சமூகத்தின் பார்வையின் அடிப்படையில் அமைந்ததாகவே பெரும்பாலும் எம்மை வந்தடைகின்றன. அது பற்றிய விமர்சன பார்வையின்றி நாமும் அதை அப்படியே உள்வாங்குவது நமது துரதிர்ஸ்டமே. இதுபோன்று குறிப்பாக அரசியலில் ஆயுதப் போராட்டங்கள் ஏன் உருவாகின என்பது மற்க்கப்பட்டு ஆயுதப் போராட்டம் என்பதே முக்கியபிரச்சனையாகவும் பயங்கரவாத பிரச்சனையாகவும் சித்தரிக்கப்படும் அதேவேளை ஆயுதப் போராட்டத்தற்கு காரணமாக இருந்த சமூக பிரச்சனை மறைக்கப்பட்டு அல்லது மீண்டும் அடக்கப்பட்டு விடுகின்றது. அதேபோல்தான் காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பான பிரச்சனைகளும் இருக்கின்றன. ஏனனில் காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பானவையும் அடிப்படையில் ஒரு சமூகப் பிரச்சனையே. அதேவேளை தனிநபரின் பொறுப்புணர்வு மற்றும் உரிமை சுதந்திரம் என்பனவும் பின்னிப்பினைந்த ஒரு பிரச்சனை. ஆனால் இது வெறும் தனிநபர் பிரச்சனையாக மட்;டும் பார்க்கப்பட்டு உண்மையான சமூகப் பிரச்சனை முழுகடிக்கப்பட்டுவிடுகின்றது. எப்படி பிரபாகரன் மற்றும் அவரைப் போன்றவர்களை பயங்கரவாதிகளாக மட்டும் காண்பிப்பதன் மூலம் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய சமூக அல்லது தேசிய பிரச்சனையை அடக்கிவிடுவதன் மூலம் அவ்வாறனா ஒரு சமூகப் பிரச்சனை இல்லை என்றாகிவிடுகின்றது. இதே நிலைமைதான காமம் பாலியல் உறவுகள் தொடர்பான பிரச்சனைக்கும் ஏற்படுகின்றது. ஏனனில் சமூகம் ஒரு புறம் பிரச்சனைக்கான விதைகளை விதைத்துவிட்டு மறுபுறம் அதனால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே பிரச்சனையாக பார்த்து தண்டனை அளிக்கின்றது. விதைத்த விதைகளை வசதியாக மறந்துவிடுகின்றது. இப்படிதான் சமூகத்தின பல பிரச்சனைகள் இருக்கின்றன. இது முரண்பாடானது மட்டுமல்ல நியாயமற்றதுமாகும். ஆகவே காமம் பாலியல் உறவுகள் தொடர்பான பிரச்சனைகளையும் தூஸ்பிரயோகங்களையும் ஒரு சமூகப் பிரச்சனையாகவும் அதனால் உருவாக்கப்பட்ட தனிநபர் பிரச்சனையாகவும் அணுகும் பொழுது அதற்கான காரணங்களையும் நியாயமான தீர்வுகளையும் கண்டறியலாம். அதன் ஒரு முயற்சியே இந்தக் கட்டுரை. இது தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்கான ஒரு ஆரம்பமே.

  …..தொடா;ந்தும் வாசிக்க்;;…..யறயமநபெைெயறயசநநெளள.ழசப…..அல்லது…..hவவி://றறற.கயஉநடிழழம.உழஅ/?சநகஃhழஅநசூ!/ழெவநள/எமள-ழளாழ-அநநசயடிhயசயவால/மயஅயஅ-pசையஅஅயஉஉயசலையஅ-அயவையசமய-உயஅரமயஅ-அயரஅ-மயவயட-ழசர-pயசஎயi-pயமரவi-1/378368257403

 6. காமம்இ பாலுறவுகள்இ சமூகம் மற்றும் குழந்தைகளும்இ வாலிப வயதினரும் – ஒரு பார்வை-

  நாம் குழந்தைகளாக இருக்கும் பொழுது நமது மனம் தூய்மையானதாக கள்ளம் கபடம் இல்லாது இருக்கின்றது. இக் காலங்களில் குறிப்பாக இரண்டு மூன்று வயதுகளில் பயம் தயக்கம் என்பன குழந்தைகளுக்கு இருப்பதில்லை. நமது உடல் என்ன கூறுகின்றதோ அது படி நடப்பதும் பின் அந்த அனுபவமே அறிவாக நம் தூய மனதில் உருவாகின்றது. மேலும் நம்மை சுற்றியிருக்கும் சூழலில் நடைபெறுகின்றவையும் அதனுடனான நமது உறவும் மற்றும் அதன் மூலம் கிடைக்கின்ற அனுபவங்களும் நமது அறிவாக அதிகரிக்கின்றது. இந்த அறிவின் வழியில் பயமின்றி தயக்கமின்றி குழந்தைகள் செயற்படுவாhகள்; மற்றும் எதிர்வினையாற்றுவார்கள். ஆனால்; குழந்தைகள்; இயல்பாக எந்தக் குற்றவுணர்வுகளுமின்றி ஆனந்தமாக செய்பவற்றைஇ நம்மை சுற்றியிருக்கும் நமது குடும்பம் பாடசாலை மதம் சமூகம் குறிப்பாக நமது பெற்றோர் அச் செயற்பாடுகளுக்குஇ தண்டனைகள் அளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தி நம்மை தமது சமூகத்திற்கு ஏற்றவகையில் நெறிப்படுத்துகின்றனர். இங்கு பெற்றோரை குறை கூறுவதோ அல்லது அவர்களில் குற்றம் காண்பதோ நோக்கம் அல்ல. காரணம் அவர்களது அறியாமை மட்டுமல்ல அவர்களும் அவ்வாறே வளர்க்கப்பட்டனர். அவர்களும் தமது வளர்ப்பு முறையை கேள்விகேட்காததுடன் தொடர்ந்தும் அவற்றை நம்பி பின்பற்றி வருவது மட்டுமல்ல தமது குழந்தைகளுக்கும் அதை அமுல்படுத்துகின்றனர். இவ்வாறு ஒரு குழந்தையின் மனம் மாசுபடுத்தப்படுகின்றது. அவர்களது செயற்பாடுகள் இயந்திரதனமானவையாக்கப்டுகின்றன..
  ….…..தொடா;ந்தும் வாசிக்க்;;…..யறயமநபெைெயறயசநநெளள.ழசப…..அல்லது…..hவவி://றறற.ழழனயசர.உழஅ/?pஃ912

 7. மீராபாரதிக்கு நன்றிகள். மனம் திறந்த விவாதம். இதை ஆரோக்கியமாக நகரத்துவதற்கு துணிவும் நேர்மையும் வேண்டும். பலவேறு விவதங்களிலுள்ள அடிப்படைக்கோளாறே உள்மன ஒளிப்பே. யாருக்கு நாம் வேசம் போடுகிறோம். சரி தவறுகளுக்கு மேலாலக எங்களை வெளிப்படையாக ஒப்புவிக்க நாம் தயங்கக்கூடாது. தயக்கம் என்றால் கதைக்கத்தேவையில்லை. புனிதங்கள் பற்றி அதிகம் பேசுபவர்கள் ‘புனிதர்’களாக இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு.

 8. Dear Mr. Sivam amuthasivam,
  As per your taught, Bramin only a criminal and others are very good. This type of stupidness must be deleted from your heart or mind.
  The feelings are brought to not only a bramins . it is the common issue to all.
  See, in the Cristian, the fathers also do the same in the church. are you agree the same.
  If bramins made a mistake means your viduthalai feeling will come.
  I am not agree with Mr. Devanathan. But you should think about the society.
  As a good commentator like you, you should not stand on one party like bramins.
  OK. past is past and i would like to request, that see the topic in a normal man activity and donot divert into the communitical manner.

  Hope you will change your mind set.

  regards,
  V.Viswanathan

  1. தமிழே தெரியாதவனெல்லாம் தமிழனின் தலைவிதியை நிர்ணயிக்கவருகிறான்.
   \\\ த ஸ்ருப்பிட்னெஸ்\\
   இது ஒவ்வொரு தமிழனையும் பார்த்து ஒரு பாப்பனப் பிரதிநிதியின் அறைகூவல்.
   சிவம் அமுதசிவம் அவர்களின் கருத்துக்கள் அனைத்தும் நியாயமானவை.

 9. Dear Viswanathan
  There is Brahmin domination in Tamil society and the temple plays an important role as do the various Mutts. So the Brahmins are obvious targets, also for social crimes that go back decades and centuries for which the price was paid by those at the bottom of the caste hierarchy.
  Cover-up by the Church is no excuse for letting criminals like the Sankarachchaari get away with crime.
  The Church is not India’s or Tamilnadu’s problem today.
  It is not just Brahmins, I agree, but the entire Hindu establishment should be put in the dock. People have been hard on charlatans like Sai Baba and more recently Nithyanantha.
  It is not quite anti-Brahmin sentiment but anger against the Brahminist ideology that underlies crime in the name of religion that we see.
  When Brahminis rush to defend the Brahminist and Varnaasrama ideologies, they become targets too.

Comments are closed.