கொழும்பு பிரி.உயர் ஸ்தானிகராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

உலக தமிழர் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண், வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் ஆகியோர் கலந்துகொண்டமைக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் முன்பாக இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆளும் கட்சி ஆதரவாளர்களுடன் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

பிரித்தானிய வெளிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், பிரதமர் ஆகியோருக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். _