கொழும்பு திரைப்பட விழா ஸ்டார் கிரிக்கெட், நடன நிகழ்வு, கேளிக்கை.

iifa-நடத்தும் இவ்வருட விருது விழா வருகிற ஜூன் -3 முதல் ஐந்தாம் தேதிவரை இனக்கொலை நாடான் இலங்கைத் தலை நகர் கொழும்பில் நடைபெற இருக்கிறது. தமிழக இயக்கங்கள் மக்களின் கோரிக்கையை ஏற்று iifa விழாவின் தூதர் பதவியில் இருந்து விலகிய அமிதாப் குடும்பத்தினருக்கு பதிலாக ஷாருக்கான் விழா பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டு இந்தி திரையுலகினர் திரட்டபப்ட்டு வருகிறார்கள். இதை ஒட்டி பாலிவுட் நட்சத்திரங்களை பலரையும் களமிரக்க இலங்கை தீவீரமாக வேலை செய்து வருகிறது. இந்நிலையில் டில்லிக்கு வந்த இலங்கை பொருளாதார வளர்ச்சி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா இந்தி நடிகர்களைச் சந்தித்து பேசியதோடு இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடும் தமிழரான முத்தைய்யா முரளீதரனைக் கொண்டு பாலிவுட் நட்சத்திர சந்திப்பு ஒன்றையும் நடத்தி முடித்துள்ளார். இதை ஒட்டி விழாவின் முதல் நாளில் பிரமாண்ட ஆடல் பாடல் நிகழ்வும், இரண்டாம் நாளில் இலங்கை கிரிக்கெட் அணியினரோடு இந்திய பாலிவுட் நட்சத்திரங்கள் மோதும் கிரிக்கெட் போட்டியும் மூன்றாம் நாளில் விருது வழங்கும் விழாவும் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் ஷாருக்கான், சல்மான்கான், சஞ்சய்தத், பிபாஷாபாசு, ஷில்பா ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறபிக்க இருப்பதாகத் தெரிகிறது. இலங்கை பயங்கர்வாத குற்றங்கள் புரிந்த இனகொலை நாடு தமிழ் மக்களின் ரத்தக் குளியலின் மீது இந்த நட்சத்திரங்கள் நடனமாட வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.