கொழும்பு ஐநா அலுவகம் மூடப்பட்டது.

சென்ற வருடம் இறுதிப் போரின் போது எழுபதாயிரம் மக்கள் வரை பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் அழைத்து வந்து கொல்லபப்ட்டார்கள். தமிழ் பேசும் மக்கள் என்பதாலும் பெருந்தேசிய சிங்கள இனத்திற்கு எதிரானவர்கள் என்பதாலும் சிறுபான்மை தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். இதை மிகத் தெளிகாக தமிழினப் படுகொலைகள் என்று அடையாளம் காணாப்பட்டது. ஆனால் உலகப் பேரமைதிக்காக பாடுபடுவதாகச் சொல்லப்படும் ஐநா இக்கொலைகளை கண்டு கொள்ளவே இல்லை. சில மேற்குலக ஊடகங்களும் தமிழ் ஊடகங்களும் இது தொடர்பாக கடும் அதிருப்தியை ஐநா மீது எழுப்பி வந்த நிலையில் இறுதிப்போரின் போது நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக விசாராணை நடத்த மர்சுகி தருஸ்மான் தலைமையில் மூவர் குழு ஒன்றை ஐநா அமைத்தது. இக்குழு அமைப்புக்கு இலங்கை பெருந்தேசிய ஆளும் வர்க்கங்கங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. ஐநா ஊழியர்களை பிணைக்கதிகளாகப் பிடிப்போம் என்று அறிவித்தனர். இலங்கை ஒரு கட்டத்தின் மன்னிப்கேட்கப் போவதாக செய்திகள் கசிந்தன. ஐநாவும் இலங்கை அவ்வாறு சொல்லியிருக்காது. அவர்கள் அதை விளக்குவார்கள் என்றெல்லாம் சொன்னது. ஆனால் இலங்கை போடா வெண்ணை என்கிற மாதிரி ஐநாவை நடத்திய நிலையில் மகிந்தா ராஜபட்சே,கோத்தபய ராஜபட்சேவின் நேரடி ஆதரவில் இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான சிங்கள வெறியர்கள் நேற்று முதல் ஐநா அலுவலகத்தை முற்ருகையிட்டுள்ளனர். போலீஸார் கடுமையாகப் போராடி அலுவலகத்திற்குள் சிக்கிக் கொண்ட ஊழியர்கள் பத்திரமாக வெளியேற உதவினர்.கலகக்காரர்கள் .நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உருவப்படம், .நா. கொடி ஆகியவற்றை தீயிட்டுக் கொளுத்தி பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.இந்தக் குழுவை பான் கி மூன் வாபஸ் பெறும் வரை போராட்டம் நடத்துவோம் என்று கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர் சிங்கள வெறியர்கள். இந்த வன்முறையைத் தொடர்ந்து .நா. அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

One thought on “கொழும்பு ஐநா அலுவகம் மூடப்பட்டது.”

  1. காகங்கள் கலைப்பதல்ல அய்நாக் காரர்களீன் வேலை அவர்கள் இரை தேடும் கொக்குகள் கதவை மூடுவது போல மூடித் திறப்பார்கள்.கருடனை சுகம் கே ட் கும் பாம்புகள் பரமசிவன் கழுத்தில் இருக்கின்றன இப்படியா தொடர்ந்தும் இருந்து விடப் போகிறது.

Comments are closed.