கொழும்பு எழுத்தாளர் மாநாட்டை சென்னையில் நடத்தலாம் சிவத்தம்பி ஐடியா.

இலங்கை அரசின் ஆதரவாளர் என்று சொல்லப்படும் ஆஸ்திரேலியாவச் சார்ந்த முருகபூபதி என்பவர் வரும் டிசம்பர மாதம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ளார்.இந்த மாநாட்டிற்கு உலகெங்கிலும் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில் இது தொடர்பாக சிவதம்பி முருகபூபதிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், “உலக தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் வைத்து நடத்த இது உகந்த நேரம் அல்ல என்று கூறியுள்ளார். இந்த மாநாட்டுக்கு இலங்கை அரசு அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறது. அது மாநாட்டை பிரச்சினைக்குரியதாக்கிவிடும் என்று சிவத்தம்பி கூறியுள்ளார்.தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்து வதை விட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும். எல்லோரும் ஒன்று கூட வசதியாக இருக்கும். பிரச்சினைகளை சுதந்திரமாக விவாதிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.முன்னதாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களும், கலைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இது போர் குற்றங்களை மூடி மறைக்க நடக்கும் முயற்சியாக அமைந்து விடும் என்று கூறியிருந்தனர். எனவே மாநாட்டை அங்கு நடத்தக் கூடாது என்றும் மீறி நடத்தினால் நாங்கள் மாநாட்டை புறக்கணிப்போம் என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தெரிவித்திருந்தனர்.ஏற்கனவே தமிழ் நாட்டு கலைஞர்கள் இலங்கையில் அரசு ஆதரவுடன் நடைபெறும் எந்த நிகழ்ச்சியையும் புறக்கணிப்போம் என்று அறிவித்து இருந்தனர். தனிப்பட்ட முறையில் நடத்தும் மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பினால் இலங்கை சென்று கலந்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.தமிழ் இசைக் கலைஞர் சீர்காழி சிவ சிதம்பரம் ஏற்கெனவே வீரகேசரி பத்திரிகையின் நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கொழும்பில் நடக்கும் எழுத்தாளர் மாநாட்டை விமர்சிக்கும் சிவத்தம்பி உலகெங்கிலும் விடுத்த கோரிக்கையை நிராகரித்து கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டில் விருந்துண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.சிவத்தம்பிக்கு ஏதாவது மாநாட்டில் கலந்து கொண்டு பொனனாடை பெற்றுக் கொள்ளாவிட்டால் நிம்மதியாக தூங்கவியலாது என்பது தெரிகிறது.

3 thoughts on “கொழும்பு எழுத்தாளர் மாநாட்டை சென்னையில் நடத்தலாம் சிவத்தம்பி ஐடியா.”

  1. இல்லை குடும்பத்திற்கு ஏதாவது புடவை ,பண்டங்கள் தேவையாய் இருந்திருக்கும். அப்படி ரிப் அடித்துவிட்டால் ஒரு கல்லில் இரண்டு மாய் அல்லவா ?
    சிவத்தம்பி கடைதெடுத்த திரிபுவாதி .முருகபூபதியும் ஒரு முற்போக்கு எழுத்தாள குஞ்சு . இந்த பொருத்தம் நல்ல பொருத்தம்.

  2. எல்லோரும் தமது வழியில்தான் சிந்திக்க வேண்டும் என்றால் யாராலும் சுதந்திரமாக சிந்திக்கவே முடியாது இந்த எஸ்.பொ ஒரு குழப்பவாதி நற்போக்கு எனும் நாடகம் நடாத்திக் கொண்டிருந்தவர் இப்போதும் அந்தக் குணம் இன்னும் அவரிடம் மாறவில்லை போலிருக்கிறது.இந்த சிவத்தம்பி மட்டுமா இல்ங்கையில் இலக்கியம் தெரிந்தவர்,தன்னை ஒரு குட்டி ராஜாவாக நினைத்துக் கொண்டு இவரது அறீக்கைகள் கடுப்பை ஏற்படுத்துகின்றன.இந்த எதிர்ப்புக்கள் எப்போதும் இருக்கின்றன் முருக பூபதி எண்ணீத் துணீந்த கருமம் செய்து முடிக்க வேண்டும்.வாழ்த்துக்கள்.

  3. முருக பூபதிக்கு இலங்கை அரசு ஆதரவு முத்திரை குத்துவோர் முதலில் ஆதாரங்களை முன்வைக்கட்டும்.

Comments are closed.