கொழும்பில் பௌத்த பயங்கரவாத அமைப்புக்கள் இடையே ஒப்பந்தம் நிறைவேறியது

BBSஇலங்கை மற்றும் பர்மா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பௌத்த பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் உலக ஏகாதிபத்திய நாடுகளின் நலன்கள் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அழிவிலேயே தங்கியுள்ளது என்பதை பொதுபல சேனாவும் மகிந்த ராஜபக்ச குடும்ப அரசும் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. நோர்வே அரசின் நிதியில் நோர்வே தன்னார்வ நிறுவனத்தின் ஆதரவுடன் கோத்தாபய ராஜபக்ச என்ற இராணுவப் பயங்கரவாதியின் ஆசீர்வாதத்துடன் பொதுபல சேனா என்ற பௌத்த பயங்ரவாத அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையில் பௌத்த கோவில்களுக்கு ஜேர்மனிய மற்றும் அமெரிக்க தன்னார்வ நிறுவனங்கள் நிதி வழங்கி வருவது தெரிந்ததே. சிங்கள பௌத்த பேரினவாதம் இலங்கையில் வளர்ச்சியடைவதும் நிலை கொள்வதும் மேற்கு ஏகாதிபத்தியங்களில் இலங்கை மீதான தலையீட்டிற்கு அவசியமானது.
பொது பல சேனா என்ற ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் பொதுபல சேனா என்ற பயங்கரவாத அமைப்பு பர்மா நாட்டின் பௌத்த பயங்கரவாத அமைப்பான 969 உடன் ஒப்பந்தம் செய்திருப்பது பயங்கரவாதம் எல்லை தாண்டுவதற்கான அறிகுறி.
அமெரிக்காவில் கிளைகளக் கொண்டுள்ள இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புக்களிடையே கைச்சாத்தான ஒப்பந்தம் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கும் என இவ்விரு அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.
ஏனைய மதங்களிலிருந்து பழமைவாத பௌத்தத்தைப் பாதுகாப்பதே எழுதப்பட்ட ஒப்பந்தத்தின் நோக்கம் என இரண்டு அமைப்புக்களும் தெரிவித்துள்ளன. பர்மாவின் பின்லாடன் என அழைக்கப்படும் வீராது என்ற பௌத்த பிக்கு 969 இன் சார்பாக ஒப்பந்ததில் கையெழுத்திட்டுளார்.

One thought on “கொழும்பில் பௌத்த பயங்கரவாத அமைப்புக்கள் இடையே ஒப்பந்தம் நிறைவேறியது”

  1. இப்ப நடக்குறத பாக்கும்போது பயங்கரவாதம்ன்னா அது முஸ்லீம் பயங்கரவாதம்தான்.மற்றெதுவும் பயங்கரவாதமேயல்ல

Comments are closed.