கொல்லப்பட்டவர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தி தின்றன

இலங்கையில் பல லட்சம் ஈழத்தமிழர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றதை எந்த ஊடகமும் படம் பிடித்து வெளிச்சம் போட்டு காட்டவில்லை.

4 1/2 லட்சம் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தி தின்றன.

40ஆயிரம் தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.

2-வது உலகப் போரை விட இது கொடூரமானது. ஆயுதம் வழங்கப்படும் இந்திய இராணுவ படையின் துணையோடும் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தியாவில் 100 கோடி பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் 6 கோடி பேர் உள்ளனர். இலங்கையில் இரண்டரை கால் கோடி பேர் உள்ளனர். எதற்கும் இலங்கை பயப்படவில்லை.

நம்முடை பலவீனத்தை யோசிக்க வேண்டும். வீரத்தை தன் மானத்தை பண்புகளை நாம் இழந்து வருகிறோம்’’என்று தெரிவித்தார்.

7 thoughts on “கொல்லப்பட்டவர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தி தின்றன”

 1. இரண்டு சகாப்ததிற்கு மேலாக வெளிச்சம் போட்டு காட்டித்தானே! இந்த இழவை ஏற்படுத்தி
  வைத்தோம்.இனியென்ன வெளிச்சம் வேணும்?.கொஞ்சம் சேமிக்க பழகுங்க! இனவெறியை குறையுங்க!! சனங்களுக்கு மூச்செடுக்க நேரத்தை கொடுங்க!!!.
  அப்படியானால் உங்கள் சேவையையும் மக்கள் போற்றுவார்கள்.
  படத்திலை நாற்பதினாயிரமாக தெரியவில்லையே!!!!.
  என்ன சார் வீரம் மானம் பண்பு கொஞ்சம் விளக்கம் கொடுப்பீர்களா? அல்லது நீங்கள் தமிழ்நாடு ஆந்திர சினிமாபடத்திற்கு கதைவசனம் எழுதுகிறவரா?.

  1. நாற்பதினாயிரம் பேர் கொல்லப் பட்டதைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.
   அதைப் பேசாமல் இருப்பதால் இனவாதம் குறையாது. அது சிங்கள மக்களால் பேசப்படும் வரை இனவெறியைப் போக்க இயலாது.
   விலக்கின்றி, ஓவ்வொரு கொடுமையும் எல்லார் மனதிலும் உறைக்கும் வரை பேசப் பட வேண்டுமே ஒழியப் பூசி மெழுகப்படக் கூடாது.
   ஜேர்மன் பாசிஸ்ட்டுக்கள் கொன்ற லட்சக்கணக்கான யூதர்களின் உடல்களை எல்லாம் ஒரு படத்தில் தெரியக் கிடைத்ததா?

   1. எக்ஸ்! கடந்தகாலங்களில் இனவாதம் கதைத்தவர்கள் சிங்கள அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்கால் வரை தமிழ்அரசியல் தலைவர்களுமே!.
    முதாலித்தவ சமுதாயத்தில் இப்படி கதைத்தால் தான் அரசியலில் உயர்வடையலாம்.
    அல்லது மதத்தை தூக்கிப்பிடிக்கவேண்டும். கிறீஸ்து-மூஸ்லீம் கத்தோலிக்கம்-புரடொஸ்.
    இலங்கையில் சாத்திமானது இந்த முதாலித்துவ தலைவர்களுக்கு தமிழ்-சிங்கள என்ற இரு இனங்களே! புலிகள் இதில் முஸ்லீகளையும் சேர்த்து கொண்டார்கள். இதில் பாதிக்கப்
    படுவது அப்பாவி உழைப்பாளி மக்களே!. இதைதானே வன்னியில் நாம் கண்டோம்.
    சரி உங்கள் கேள்விக்கு வருகிறேன். நீங்கள் நாற்பது ஐம்பது என்கிறீர்கள். சிங்கள அரசோ
    ஆறு அல்லது ஏழு என்கிறார்கள். இரண்டையும் நம்புவதற்கு எது ஆதாரம்.
    சரி புலிகள் தமிழ்மக்களிடம் தானே தோற்றம் பெற்றார்கள். தமிழ்மக்கள்தானே இதற்கு
    பொறுப்பாளிகள்.தமிழ்மக்களால் இந்த பயங்கரவாத அமைப்பை-பயங்கரவாத ஆயுதங்களோடு நின்றவர்களை தோற்கடிக்க முடிந்ததா?.அப்படியாயின் இவர்களை யார்? தோற்கடிப்பது??.இந்தியாவா? சர்வதேச இராணுவமா?? இல்லை இலங்கை இராணுவமே தோற்கடித்திருக்கவேண்டும்.நடந்து முடிந்தவை எல்லாம் சரியாகவையாகவே நடந்து முடிந்திருக்கின்றன.ஆனால் இதுவெல்லாம் முடிவல்லவே.
    ஆனாபடியால்தானேசுமூக வாழ்வுநிலைக்கு ஒட்டுமொத்த தமிழ்மக்களும் ஓர்ரளவுக்காவது
    திரும்பி யிருக்கிறார்கள்.இது உங்களுக்கு திருப்தியைத் தரவில்லையா?இல்லை தொடர்ந்தும் இனவாதத்தை கக்கி பதினெட்டுவீதமமாகபோன தமிழ்மக்களையும்
    உருக்குலைக்கப்போகிறீர்களா?.

   2. நான் யாருக்கும் விலக்களிக்கவில்லை.
    ஓரு கொடுமையைப் பற்றி பேசும் போது அதைக் குறைத்து மதிப்பிடுகிற விதமாக உங்கள் கருத்துக்கள் அமைந்தமைக்கே என் எதிர்ப்பைத் தெரிவித்தேன்.

    தமிழர்கட்கு நடந்த கொடுமைகளில் 100இல் ஒரு பங்கு கூட சிங்கள மக்களுக்குத் தெரியாது.
    நமது பிரதிநிதிகள் சாப்பிடுவதற்கு வாய் திறக்குமளவுக்கு அவற்றைப் பொறுமையாக விளக்குவதற்கு வாய் திறந்தால் நன்றாயிருக்கும்.
    அது போலவே ராஜபக்ச ஆட்சிக்கு ஆலவட்டம் பிடிப்பவர்களும் தமிழ் மக்களின்நிலை பற்றிக் கரிசனை காட்டினால் நன்றயிருக்கும்.

    புலிகளைபற்றி விமர்சிக்க வேண்டிய வேளைகளிலெல்லாம் விமர்சித பலருள் ஒருவன் என்ற தைரியத்துடன் தான் சொல்லுகிறேன்.
    40,000 அப்பாவிகள் வேண்டுமென்றே அரச படைகளால் அழிக்கப் பட்டனர் இன்று ‘மீளக் குடியமர்த்தப்பட்டவர்களை’ அரசு மிகக் கேவலமாக நடத்துகிறது. புலிகளை பற்றிப் பேசி இவற்றிலிருந்து கவனத்தை திருப்பும் முயற்சிகள் பலராலும் மேற்கொள்ளப் படுகின்றன.
    தயவு செய்து, நொந்து கிடக்கும் மக்களைக் கேவலப் படுத்துகிற விதமாக உங்கள் சொற்கள் அமையாமல் கவனிப்பீர்களாயின் நன்று. நன்றி.

 2. இந்த செய்தியை சொன்னவர் யார் ?

 3. பருந்துகள் பொதுவாக இறந்த உடல்களைத் தின்பதில்லை ஒரு வகையான கழுகுகளே அவ்வாறு செய்கின்றன. அவை இலங்கையில் இல்லை. இந்தியாவில் உள்ளன. (நான் தமிழக அரசியல்வாதிகளைச் சொல்லவில்லை. நிசமான கழுகுகளைச் சொல்லுகிறேன். மும்பையில் அவை பார்சிகளின் பிணங்களை உண்ணுகின்றன).

  “பல லட்சம் ஈழத்தமிழர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றதை…”
  தயவு செய்து தமிழின் தொன்மைக்குப் பூச்சியங்கள் சேர்ப்பது போல எல்லாவற்றுக்கும் பூச்சியங்களைச் சேர்க்காதீர்கள்.

  ஆதாரமற்ற்ற பரபரப்புச் செய்திகள் பாதிக்கப்பட்ட மக்களின் நியாயத்தைப் பலவீனப்ப் படுத்துகின்றன.

  “என்று தெரிவித்தார்.” என்றுள்ளதே ஒழிய யார் தெரிவித்தார் என்று சொல்லவில்லையே.

  இது போன்ற விடயங்கள் இனியொருவுக்குத் தேவையா?

 4. இக் கட்டுரையை வரைந்தவர் யார் என்று சொல்லப்படவில்லை.
  கூறப்பட்ட “தகவல்”களைச் சொன்னவரின் பேரில்லை.
  பொறுப்புள்ள இணையத்தளம் என்ற வகையில், இனியொரு இவற்றில் ஒன்றையாவது தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளது.

Comments are closed.