கொலைகாரர்களுக்கு நன்றிபாராட்ட வேண்டும் : டக்ளஸ்

தமிழ்ப் பிரதேசங்கள் முழுவதும் இனச் சுத்திகரிப்பைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள இனப்படுகொலை இலங்கை அரசு, மனித அவலங்களின் மேல் வாழ்க்கை நடத்துகிறது. திட்டமிட்ட குடியேற்றங்கள், விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பதினைந்தாயிரம் தமிழ்க் கைதிகள், தடுப்பு முகாம்கள் போன்ற அனைத்து மனிதகுல விரோதச் செயல்களையும் கட்டவிழ்த்துவிடும் இலங்கை அரசின் மீதான அரசியல் அழுத்தங்களைத் தடுத்துவரும் சிலருள் டக்ளஸ் தேவானதாவும் ஒருவர். தம்மைக் கொலைசெய்தவர்களுக்கு நன்றிபாராட்ட வேண்டும் என்று அழைப்புவிடுக்கிறார் டக்ளஸ்.

நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் நன்றி பாராட்ட வேண்டுமேன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாசிசவாத பயங்கரவாதத் தலைவர் ஒருவரின் பிடியிலிருந்து தமிழ் சமூகத்தை ஜனாதிபதி மீட்டெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொக்குவில் ஹிந்துக் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சமூகத்தின் சமூக பொருளாதார அபிவிருத்தியை உறுதி செய்வதற்கு ஜனாதிபதி சகல வழிகளிலும் முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

9 thoughts on “கொலைகாரர்களுக்கு நன்றிபாராட்ட வேண்டும் : டக்ளஸ்”

 1. பாசிசவாத பயங்கரவாதத் தலைவர் ஒருவரின் பிடியிலிருந்து தமிழ் சமூகத்தை ஜனாதிபதி மீட்டெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் உண்மை உண்மை கசக்கும்

  1. தேவானந்தா செய்கிரத்துக்கு என்ன பெயராம்.தன் முதுகில் உள்ள அழுக்கை பார்க்க வக்கில்லை அடுத்தவன் முதுகில் உள்ள அழுக்கை தேடி அலைகிறார்கள்.இத்தனைக்கும் மக்கள் எல்லோரும் முட்டாள்கள் என்ற நினைப்பு.

  2. தமிழ்மக்கள் சொல்லவேணும், யார் பாசிசத்தலைவர், ……யார் பாசக்காரத்தலைவர் எண்டு…..நாலுபேரைக் கட்சியில வைத்திருப்பவன் எல்லாம், ஒட்டுமொத்த தமிழனுக்கு எல்லாம் தலைவன் ஆகிவிடமுடியாது.ஆட்டோக்காரன் காசு கேட்டான் என்பதற்காக, அவெனை துப்பாக்கியால் சுட்டவர் தானெ இந்த நித்தியானந்தா :):)…..மன்னிக்கணும்…இந்தத் தேவானந்தா.கட்சியின் பெயரைப்பாத்தாலே தெரியுதே இவெர் ஒரு ஊத்தைக்கட்ச்சியின் தலைவர் எண்டு— ஈ – பீ -டி . பீ….

   1. இரண்டு தரம் ! நாறுகிறது இவர்களின் அரசியல் அசிங்கம்.

  3. //பாசிசவாத பயங்கரவாதத் தலைவர் ஒருவரின் பிடியிலிருந்து தமிழ் சமூகத்தை ஜனாதிபதி மீட்டெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் உண்மை உண்மை கசக்கும்//

   அடுத்தவன் தன் வீட்டை பறிக்கும் போது மகனுக்கு அப்பாவின் அராஜகங்களும், அடித்ததும் ஜாபகம் வந்து அந்த ரவுடிக்கு அபகரிப்பாளனுக்கு உதவுவது போல், தன் தாயை அடுத்தவர்கள் வன்புணர்ச்சி செய்ய வரும்போது, ஒரு மகன் எந்தவித அக்கரையும் இல்லாமல் ஊதாரியாக சுற்றிக்கொண்டிருந்த போது அதை கண்டித்து அடித்ததையும், சாப்பாடு போடமல் இருந்ததையும் காரணங்காட்டி வந்தவனை ஒரு ஆபாந்தவானனாக பார்ப்பது போல் இருக்கிறது jkr கூற்று.

   ஆனால் இந்த விசயத்தை வெறும் செய்தியாக போட்டிருப்பது இதை மறைமுகமாக ஊக்கிவிப்பது போல்தான் இருக்கிறது இந்த இணைதளத்தை நடத்துபவர்களின் நோக்கம். இது செய்தியல்ல. இதை குறித்து கருத்தையும் சேர்த்தே எழுதவேண்டும். வெறும் செய்தியாக எழுதுவது இரட்டைத் தன்மையையே வளர்க்கும். எனக்குத் தெரிந்து அப்படி ஒரு கருத்து இந்த இணைத்தளத்தை நடத்துபவர்களிடமே இருக்கிறது என்றே நினைக்கிறேன். “தடுத்துவருபவர்” என்ற பதத்தை செய்தியில் பதியப்பட்டிருக்கிறது. அவர் தடுத்து வருபவரல்ல, பாசிச அரசின் சார்பாக அதை அமல்படுத்திக்கொண்டிருப்பவர். கங்காணியாக, அடிமையை மேய்க்கும் மேய்ப்பாளனாக செய்துக்கொண்டிருக்கிறார். இதை சொல்லும் செய்தி முறையிலேயே அவருடைய கரிசனப் பார்வை தெரிகிறது. அதற்கு காரணம் அவர்களுக்கு ராஜபட்சேவின் மீதான கோபமும், இலங்கையின் அடக்குமுறையினையும், விடுதலைப்புலிகள் மீதான கோபமும், அவர்களின் ஒடுக்கப்பட்டவர்களின் பிழையையும் சரிபடுத்தி சமப்படுத்தி பார்க்கிறார்கள் என்று தெரிகிறது. இவர்கள் இலங்கை பாசிசத்தை எதிர்த்து இயக்கத்தைவிட கட்டுரையை விட அதற்கு போராடுபவர்களை எதிர்த்து எடுத்த இயக்கமும் கட்டுரையும்தான் அதிகம். 

 2. தெருப் பொறுக்கி சொறி நாய்களுக்கு குளிர் விட்டுப் போய்விட்டது. ஒரு கொலைகாரனின் வேட்டிக்குள் அடைக்கலம் தேடிக்கொண்டு  ஊழை யிடுகின்றது. இவனை எல்லாம் தமிழன் எந்தக் காலத்தில் மதித்தார்கள்.  

  1. புலி என்றால் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் இன்னும் கிலி இருக்கத்தான் செய்கிறது. இருக்கனும். விரைவில் துரோகிகளுக்கு இறுதி வரும். அது மக்கள் இருந்து எழுந்த வரத்தான் செய்யும்.

 3. அன்று கொள்ளையடிக்கப்பட்ட,புலிகளின் பணத்தில் லெபனான் பயிற்சி..

  இன்று கொலை செய்யப்பட்ட புலிகளின் பிணத்தில் ராஜபக்ச சரசம்.

  உனக்கு சுக்கிரன் திசை,

  அனுபவி ராஜா,அனுபவி.

  1. எப்போது ஏழரைச் சனி தொடங்கும்?

Comments are closed.